தகுதியான பணி அல்லது பள்ளிக் கணக்குகளில் மட்டுமே Docsஸில் Tasks அம்சம் கிடைக்கும். இப்போது நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை. பணி மற்றும் பள்ளிக் கணக்குகள் குறித்து மேலும் அறிக.
Google Docsஸில் பணியைப் பொறுப்புமாற்றம் செய்தல்
- Google Docs ஆப்ஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
- திருத்துவதற்கான ஐகானைத் தட்டவும்.
- திரையில் நீங்கள் பட்டியலைச் சேர்க்க விரும்பும் இடத்தில் தட்டவும்.
- கீழ் வலதுபுறத்தில் உள்ள ’பட்டியல்கள்’ என்பதைத் தட்டவும்.
- சரிபார்ப்புப் பட்டியல் என்பதைத் தட்டவும்.
- சரிபார்ப்புப் பட்டியலில் ஒரு பணியை வழங்கவும்.
- சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறம் உள்ள ‘Tasksஸில் சேர்’ என்பதைத் தட்டவும்.
- நீங்கள் பணியைப் பொறுப்புமாற்றம் செய்ய விரும்புபவரின் பெயரை, “பொறுப்புமாற்றம் பெறுபவர்” என்ற புலத்தில் டைப் செய்யவும்.
- உங்களுக்கும் உங்கள் டொமைனில் உள்ள மற்ற பயனர்களுக்கும் நீங்கள் பணியைப் பொறுப்புமாற்றம் செய்யலாம்.
- விருப்பத்திற்குரியது: பணிக்குத் தேதியை அமைக்க, தேதியைச் சேர் என்பதைத் தட்டி கேலெண்டரில் இருந்து தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள, சேர் என்பதைத் தட்டவும்.
முக்கியம்:
- நீங்கள் ஒருவருக்குப் பணியைப் பொறுப்புமாற்றம் செய்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் அவர் ஒரு மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார். பணிக்குத் தேதியை அமைத்திருந்தால் அவரால் அந்தப் பணியை அவரின் தனிப்பட்ட Tasks பட்டியல், Google Calendar ஆகியவற்றில் பார்க்க முடியும். பகிர்ந்த பணிகள் குறித்து மேலும் அறிக.
- அடையாளம் வெளிப்படுத்தாத பயனர்களால் Google ஆவணத்தில் Tasksஸை ஒதுக்கவோ திருத்தவோ முடியாது.
Docsஸில் பணிகளைப் பார்த்தல் அல்லது திருத்துதல்
- பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docs ஆப்ஸில் திறக்கவும்.
- திருத்து என்பதைத் தட்டவும்.
- பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறத்தில் இருக்கும் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தோற்றப் படத்தைத் தட்டவும்.
- உதவிக்குறிப்பு: பணி முடிக்கப்பட்டால் அதன்மீது குறுக்கே கோடிடப்படும்.
- கீழே உள்ள திருத்து என்பதைத் தட்டவும்.
- ஒருவருக்குப் பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணியை நீங்கள் இன்னொருவருக்கு மாற்றிவிட்டால் அந்த இருவருமே அதுகுறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்கள்.
- விருப்பத்திற்குரியது: Tasks ஆப்ஸில் உள்ள பணியைத் திருத்த 'Tasksஸில் திற' என்பதையும் தட்டலாம்.
ஒரு பணியை முடிந்ததாக Docsஸில் குறித்தல்
- பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docs ஆப்ஸில் திறக்கவும்.
- திருத்து என்பதைத் தட்டவும்.
- சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை (பொறுப்புமாற்றம் செய்யப்பட்டது) கண்டறியவும்.
- ஆவணத்தில் உள்ள செக்பாக்ஸைத் தட்டவும்.
- ஆவணத்தில் பணி முடிந்ததாகக் குறிக்கப்பட்டால் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலிலும் அது முடிந்ததாகக் காட்டப்படும். அத்துடன் அவர் அதுகுறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்.
Docsஸில் பணியை நீக்குதல்
- பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட பணிகள் உள்ள ஆவணத்தை Google Docs ஆப்ஸில் திறக்கவும்.
- திருத்து என்பதைத் தட்டவும்.
- பொறுப்புமாற்றம் செய்யப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறத்தில் இருக்கும் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தோற்றப் படத்தைத் தட்டவும்.
- கீழே உள்ள நீக்கு உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்புகள்:
- ஆவணத்தில் பணி நீக்கப்பட்டால் பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலில் அது காட்டப்படாது. பணி முடிக்கப்படவில்லை எனில் பொறுப்புமாற்றம் பெறுபவர் மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவார்.
- முதலில் பணியை நீக்காமல் ஆவணத்தில் இருக்கும் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை நீக்கியிருந்தால், பொறுப்புமாற்றம் பெறுபவரின் தனிப்பட்ட Tasks பட்டியலில் அது தொடர்ந்து காட்டப்படும்.
Docsஸில் உள்ள பணிகளில் செய்யப்படும் மாற்றங்களை நிர்வகித்தல்
சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதற்கு இடதுபுறத்தில் உள்ள ஐகான் மீது நீலப் புள்ளி காட்டப்படலாம். இது பின்வரும் சமயங்களில் காட்டப்படும்:
- ஆவணத்தில் யாரேனும் சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை மாற்றிவிட்டு பணியை மாற்றாதபோது.
- பொறுப்புமாற்றம் பெறுபவர் Tasksஸில் பணியின் தலைப்பை மாற்றிவிட்டு ஆவணத்தில் உள்ள சரிபார்ப்புப் பட்டியலில் உள்ளதை மாற்றாதபோது.
- யாரேனும் ஆவணத்தை முன்பு இருந்ததுபோல் மாற்றும்போது.
சிக்கலைச் சரிசெய்து நீலப் புள்ளியை அகற்ற:
- நீலப் புள்ளி இருக்கும் பணியைத் தட்டவும்.
- பாப்-அப் சாளரத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள புதுப்பி என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: பொறுப்புமாற்றம் பெறுபவருக்கு ஆவணத்தில் திருத்துவதற்கான அணுகல் இல்லாதிருந்து அவர் தனது தனிப்பட்ட Tasks பட்டியலில் ஏதேனும் ஒரு பணியைப் புதுப்பித்தாலும் நீக்கினாலும்கூட பணி ஐகான் மீது நீலப் புள்ளி காட்டப்படக்கூடும்.
- இதைச் சரிசெய்ய, நீலப் புள்ளியில் தட்டி ஆம் என்பதைத் தட்டவும்.
- இதைத் தடுக்க, பொறுப்புமாற்றம் பெறுபவருக்கு ஆவணத்தைத் திருத்துவதற்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.