Google ஆவணத்தில் ஸ்மார்ட் சிப்களையும் பில்டிங் பிளாக்குகளையும் சேர்த்தல்

Google ஆவணத்தில் ஸ்மார்ட் சிப்களைச் செருகுவதன் மூலம் பின்வரும் தகவல்களைச் சேர்க்கலாம்:
  • Gmail/Workspace மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தும் பிற பயனர்கள்
  • பிற Google Docs, Sheets, Slides ஃபைல்கள்
  • தேதிகள் அல்லது Google Calendar நிகழ்வுகள்
  • இடங்கள் மற்றும் வரைபட வழிகள்

ஆவணத்தில் ஸ்மார்ட் சிப் இருந்தால் கர்சரை அதன் மேலே கொண்டுசெல்வதன் மூலமோ அதைக் கிளிக் செய்வதன் மூலமோ நீங்களும் பிற பயனர்களும் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

திட்டப்பணிகள், ஃபைல்கள், மேலும் பலவற்றைக் கண்காணிக்க ஒதுக்கிடச் சிப்கள், நேர டிராக்கர்கள், கீழ்த்தோன்றல்கள் ஆகியவற்றையும் சேர்க்கலாம், பில்டிங் பிளாக்குகளைப் பயன்படுத்தலாம்.

நபர்கள், ஃபைல்கள், தேதிகள், நிகழ்வுகள், இடங்கள் ஆகியவற்றுக்கு ஸ்மார்ட் சிப்களைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. ஆவணத்தில் ஏதோவொரு இடத்தில் "@" என்று டைப் செய்யவும் அல்லது காலி வரியில் கர்சரை வைத்து "@" பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் விரும்புபவற்றைத் தேர்ந்தெடுக்க, பரிந்துரைகளின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது எழுத்துகளையோ எண்களையோ குறியீடுகளையோ டைப் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: யாருக்கு நபர் ஸ்மார்ட் சிப்பைச் சேர்க்க விரும்புகிறீர்களோ அவரது பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும் அல்லது உங்களைச் சேர்க்க @நான் என்று டைப் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: ஃபைல் ஸ்மார்ட் சிப்பைச் சேர்க்க, ஃபைல் பெயரையோ தொடர்புடைய தேடல் குறிப்புகளையோ டைப் செய்யவும்.
  4. மாற்றும் அனுமதி கொண்டவரால் நிரப்பத்தக்க ஸ்மார்ட் சிப்பைச் சேர்க்க, "ஒதுக்கிடச் சிப்பைத்" தேர்ந்தெடுக்கவும். பின்னர், மாற்றும் அனுமதி கொண்டவர் ஸ்மார்ட் சிப்பை நிரப்பும்போது எந்த வகையிலான தகவலைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. தொடர்புடைய தகவல்களைப் பார்க்க, சிப்பின் மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.
கவனத்திற்கு: ஸ்மார்ட் சிப்பில் வேறொரு பயனரைக் குறிப்பிடுவதால் மட்டும் உங்கள் ஆவணத்திற்கான அணுகல் அவருக்குத் தானாகக் கிடைப்பதில்லை. அவருக்கு அணுகல் கிடைக்க, ஆவணத்தை அவருடன் பகிர வேண்டும்.

தேதி சிப்களை உருவாக்குதலும் திருத்துதலும்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. தேதி சிப்பைச் சேர்க்க, பின்வருமாறு டைப் செய்யவும்:
    • @இன்றைய தேதி
    • @நாளைய தேதி
    • @நேற்றைய தேதி
    • @தேதி
    • குறிப்பிட்ட தேதி, அதாவது @ஜன. அல்லது @1/1/2021 போன்றவை
    • ஒப்பீட்டுத் தேதி, அதாவது @திங்கள், @அடுத்த செவ்வாய் அல்லது @போன புதன் போன்றவை
  3. இவற்றைத் திருத்த:
    • தேதி: தேதி காட்டப்படும் புலத்தைக் கிளிக் செய்யவும்.
    • தேதி வடிவம்: அமைப்புகள் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

தேதி சிப்பைச் சேர்த்த பிறகு அது நீங்கள் சேர்த்த மொழியிலேயே ஆவணத்தில் கூட்டுப்பணி செய்யும் அனைவருக்கும் காட்டப்படும். அனைத்து நேர மண்டலங்களிலும் உள்ள கூட்டுப்பணி செய்பவர்களுக்குத் தேதி சிப்கள் ஒரே மாதிரியாகவே காட்டப்படும். தேதிக்கும் உங்கள் நேர மண்டலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள தேதி சிப்பின் மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.

Calendar நிகழ்வு சிப்களை உருவாக்குதல்

Calendar நிகழ்விற்கான ஸ்மார்ட் சிப்பைச் சேர்க்கலாம். இதன்மூலம் Google ஆவணத்தில் இருந்து நிகழ்வு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம், வீடியோ மீட்டிங்கில் சேரலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. “@” என டைப் செய்து கீழேயுள்ள "Calendar நிகழ்வுகள்" என்பதற்குச் செல்லவும்.
    2. மேலே உள்ள செருகு அதன் பிறகு ஸ்மார்ட் சிப்கள் அதன் பிறகு Calendar நிகழ்வு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நிகழ்வைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: கேலெண்டர் நிகழ்வில் வீடியோ மீட்டிங் இருந்து அது விரைவில் தொடங்கவிருந்தாலோ ஏற்கெனவே தொடங்கிவிட்டாலோ உங்கள் Google ஆவணத்தில் இருந்து வீடியோ மீட்டிங்கில் சேரலாம். Calendar நிகழ்வு சிப்பைக் கிளிக் செய்து, கீழ் வலதுபுறத்தில் காட்டப்படும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

திட்டப்பணிகளை ஒருங்கிணைக்க பில்டிங் பிளாக்குகளையும் கீழ்த்தோன்றல் மெனுக்களையும் பயன்படுத்துதல்

Google Docsஸில், பல விருப்பங்களைக் காட்டக்கூடிய கீழ்த்தோன்றல் சிப்களைச் சேர்க்கலாம் பிரத்தியேகமாக்கலாம். திட்டப்பணிகள், ஃபைல்கள் போன்ற பலவற்றைக் கண்காணிக்க உதவும் டெம்ப்ளேட்டுகளைச் சேர்க்கவும் பில்டிங் பிளாக்குகளைப் பயன்படுத்தலாம். 

கீழ்த்தோன்றல் மெனுவைச் சேர்த்தல் அல்லது திருத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. “@கீழ்த்தோன்றல்” என டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும்.
    2. மேலேயுள்ள செருகு அதன் பிறகு கீழ்த்தோன்றல் மெனு என்பதைக் கிளிக் செய்யவும்
  3. ஏற்கெனவே உள்ள கீழ்த்தோன்றல் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய கீழ்த்தோன்றல் மெனு புதியவை என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. புதிய கீழ்த்தோன்றல் மெனுவை உருவாக்கினால், சேமிப்பதற்கு முன்னால் கீழ்த்தோன்றல் மெனுவின் டெம்ப்ளேட்டின் பெயரை மாற்றவும் விருப்பங்களைத் திருத்தவும் முடியும்.
  4. கீழ்த்தோன்றல் மெனுவில் மாற்றங்களைச் செய்ய, அந்தக் கீழ்த்தோன்றல் மெனுவைக் கிளிக் செய்து பின்னர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். கீழ்த்தோன்றல் மெனுவில் உள்ள விருப்பங்களில் ஒன்றை மாற்ற, கீழ்த்தோன்றல் மெனுவைக் கிளிக் செய்து பின்னர் விருப்பங்களைச் சேர்/மாற்று புதியவை என்பதைக் கிளிக் செய்யவும்.

பில்டிங் பிளாக்கைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. செருகு அதன் பிறகு பில்டிங் பிளாக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்
    2. “@” என டைப் செய்யவும். “பில்டிங் பிளாக்குகள்” என்பதற்கு அடுத்துள்ள மேலும் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் பில்டிங் பிளாக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்தல்

Google Docsஸில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்ப்பது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

மின்னஞ்சல் வரைவைச் சேர்த்தல்

Google Docsஸில் மின்னஞ்சல்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

தொடர்புடைய தகவல்கள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7530560237386345403
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false