Google தயாரிப்புகளை அருகருகே பயன்படுத்துதல்

பணியிடம்/பள்ளிக்கான Google Docsஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா? இலவச G Suite சோதனைக்குப் பதிவு செய்யுங்கள்.

Gmail, Calendar போன்ற Google தயாரிப்புகளை உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே சாளரத்தில் பயன்படுத்தலாம். இதன்மூலம் முக்கியமான தகவலை தாவல்களுக்கு இடையில் மாறாமல் டிராக் செய்யலாம்.

உங்கள் கேலெண்டர், குறிப்புகள் அல்லது பணிகளைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmail, Calendar, Google Driveவிற்கோ Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் இவற்றைத் தேர்வுசெய்யவும்:
    • Calendar Calendar: உங்கள் கால அட்டவணையைப் பார்க்கலாம், நிகழ்வுகளைச் சேர்க்கலாம்/திருத்தலாம்.
    • Keep Keep: குறிப்பையோ பட்டியலையோ உருவாக்கலாம்.
    • Tasks Tasks: செய்யவேண்டியவற்றையும் காலக்கெடுக்களையும் சேர்க்கலாம்.
  3. வலதுபுறப் பக்கப்பட்டியை மூட மேல் வலதுபுறத்தில் மூடு ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் அறிக:

வலதுபுற பக்கப்பட்டியை மூடுதல்/மறைத்தல்

G Suite பக்கப் பலகத்தை நீங்கள் மூடலாம்/மறைக்கலாம்.

  • வலதுபுறப் பக்கப்பட்டியை மூட மேல் வலதுபுறத்தில் மூடு ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வலதுபுறப் பக்கப்பட்டியை முழுவதுமாக மறைக்க அதை மூடவும். பிறகு கீழே வலதுபுறத்தில் மறை பக்கவாட்டுப் பேனலை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வலதுபுறப் பக்கப்பட்டியைக் காட்ட கீழ் வலதுபுறத்தில் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

கேலெண்டர் நிகழ்வை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்கோ Google Drive,  Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் Calendar Calendar என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கேலெண்டரில் ஒரு நேரத்தைக் கிளிக் செய்யவும்.
  4. நிகழ்வின் விவரங்களை உள்ளிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Calendar குறித்து மேலும் அறிக.

கேலெண்டர் நிகழ்வில் ஆவணத்தை இணைத்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Driveவிற்கோDocs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ, வரைபொருளுக்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள பக்கப்பட்டியில் Calendar Calendar என்பதைக் கிளிக் செய்யவும்.
    • இந்த விருப்பம் இல்லையெனில் கீழ் வலதுபுறத்தில் காட்டு பக்கவாட்டுப் பேனலைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கேலெண்டரில் நிகழ்வைச் சேர்க்க விரும்பும் நேரத்தைக் கிளிக் செய்யவும்.
  4. தலைப்பு, விளக்கம் அல்லது விருந்தினர்களைச் சேர்க்கவும்.
  5. "விருந்தினர்களைச் சேர்" என்பதற்கு மேல் இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு/பட்டியலை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmail, Calendar, Google Driveவிற்கோ Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் Keep Keep என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இவற்றைத் தேர்வுசெய்யவும்:
    • குறிப்பெடு
    • புதிய பட்டியல் புதிய பட்டியல்
  4. விரும்பும் உரையைச் சேர்க்கவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Keep குறித்து மேலும் அறிக.

ஆவணம்/விளக்கக்காட்சியில் Keep குறிப்பைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Docs/Slideஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. வலதுபுறத்தில் Keep Keep என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விரும்பும் குறிப்பைக் கண்டறிந்து அதை ஆவணத்திலோ விளக்கக்காட்சியிலோ இழுக்கவும்.
ஆவணம்/விளக்கக்காட்சியின் உரையை குறிப்பாகச் சேமித்தல்
  1. கம்ப்யூட்டரில் Docs/Slideஸில் ஆவணத்தையோ விளக்கக்காட்சியையோ திறக்கவும்.
  2. குறிப்பில் சேர்க்க விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும்.
  3. உரையில் வலது கிளிக் செய்து Keepபில் சேமி என்பதைத் தேர்வுசெய்யவும்.

பணியை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Gmail, Calendar, Google Driveவிற்கோ Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பணியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பணியை உள்ளிடவும்.
  5. விவரங்களையோ முடிக்க வேண்டிய தேதியையோ சேர்க்க மாற்று திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. முடித்தவுடன் பின்செல் திரும்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பணிகளை மறுவரிசைப்படுத்த மேலும் மேலும் அதன் பிறகு எனது வரிசை என்பதைக் கிளிக் செய்யவும். பணிகளை இழுக்கவும்.

Google Tasksஸைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

மின்னஞ்சலை பணியாகச் சேமித்தல்
  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் இன்பாக்ஸில் பணியாகச் சேர்க்க விரும்பும் மின்னஞ்சலைக் கண்டறியவும்.
  4. மின்னஞ்சலை வலதுபுறப் பக்கப்பட்டிக்கு இழுக்கவும்.
பணிகளை பட்டியல்களாக ஒழுங்கமைத்தல்

பல்வேறு விதமான பணிகளை உங்கள் பணி, தனிப்பட்டவை போன்று தனித்தனியாகப் பிரிக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Gmail, Calendar, Google Driveவிற்கோ Docs, Sheets அல்லது Slidesஸில் உள்ள கோப்பிற்கோ செல்லவும்.
  2. வலதுபுறத்தில் Tasks Tasks என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே கீழ்நோக்கிய அம்புக்குறி கீழ் தோன்றுதல் அம்புக்குறி அதன் பிறகு புதிய பட்டியலை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பட்டியலுக்கான பெயரை உள்ளிட்டு முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வேறு பட்டியலுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கீழ் தோன்றுதல் அம்புக்குறி கிளிக் செய்யவும். வேறொரு பட்டியலைத் தேர்வுசெய்யவும்.

Gmailலுடன் பிற ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Gmailலின் திட்டப்பணிகள், தொடர்புகள், பிற தகவல்கள் ஆகியவற்றை Google உருவாக்காத ஆப்ஸில் நிர்வகிக்கலாம்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. வலதுபுறத்தில் செருகு நிரலைப் பெறுக செருகு நிரல்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஆப்ஸைத் தேர்வுசெய்யவும்.
  4. நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
இது பயனுள்ளதாக இருந்ததா?
இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?