Google Docs, Sheets, Slides, Jamboard ஆகியவற்றில் Google Meetடைப் பயன்படுத்துதல்

Google Docs, Sheets, Slides அல்லது Jamboardல் இருந்து இவற்றைச் செய்யலாம்:

  • Google Meet வீடியோ மீட்டிங்கில் சேரலாம்
  • Google Meet வீடியோ மீட்டிங்கில் நேரடியாக ஸ்கிரீனைப் பகிரலாம்

முக்கியம்: Google Meet வீடியோ மீட்டிங்கில் சேரவோ Google Docs, Sheets, Slides அல்லது Jamboardல் இருந்து ஸ்கிரீனைப் பகிரவோ வேண்டுமெனில் Chrome அல்லது Edge உலாவி உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

ஆவணம், தாள், ஸ்லைடு அல்லது ஜாம்போர்டில் இருந்து Google Meet வீடியோ மீட்டிங்கில் சேர்தல்

  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள Meet ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • திட்டமிடப்பட்ட மீட்டிங்கில் சேர, நீங்கள் சேர விரும்பும் மீட்டிங்கின் பெயரைக் கிளிக் செய்யவும்.
    • மீட்டிங் குறியீட்டைப் பயன்படுத்தி மீட்டிங்கில் சேர மீட்டிங் குறியீட்டைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு குறியீட்டை டைப் செய்யவும்.
  4. உங்கள் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டுக்கு மீட்டிங்கைக் கொண்டு வர அழைப்பில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலில் உங்கள் மீட்டிங் காட்டப்படும்.​
    • “அழைப்பில் சேர்” என்பதைக் கிளிக் செய்திருந்தால் உங்களால் ஃபைலை ஸ்கிரீனில் பகிரவோ மற்றவர்கள் மீட்டிங்கைப் பார்க்கும் விதத்தை மாற்றவோ முடியாது.
  5. ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டின் ஸ்கிரீனைப் பகிர, கீழே வலதுபுறத்தில் உள்ள 'ஸ்கிரீனைப் பகிர்' ஸ்கிரீனைப் பகிர்தல் என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் இருக்கும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கவனத்திற்கு: ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டில் இருந்து ஒரு பக்கத்தைப் பகிரும்போது ஸ்கிரீனைப் பகிரும் பக்கத்தை உங்களால் மாற்ற முடியாது. ஸ்கிரீனைப் பகிரும்போது பக்கங்களுக்கு இடையே மாற வேண்டும் என்றால் Google Meetடில் இருந்து ஸ்கிரீனைப் பகிரலாம்.
  6. ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த, கீழே வலதுபுறத்தில் உள்ள ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்தும் ஸ்கிரீன் பகிர்தலை ரத்துசெய்தல் ஐகானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஃபைலில் இருந்து புதிய Google Meet வீடியோ மீட்டிங்கைத் தொடங்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docs, Sheets, Slides அல்லது Jamboardல் ஃபைலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள Meetடை கிளிக் செய்யவும்.
  3. புதிய மீட்டிங்கைத் தொடங்க, புதிய மீட்டிங்கைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும். வலதுபுறத்தில் உள்ள பக்கவாட்டுப் பேனலில் உங்கள் மீட்டிங் காட்டப்படும்.
  4. மீட்டிங்கிற்குப் பிறரை அழைக்க மற்றும்:
    • அழைப்பில் மற்றவர்களைச் சேர்க்க: “இந்த வீடியோ அழைப்பிற்கு மட்டுமான இணைப்பு" என்பதற்கு அடுத்துள்ள நகலெடுக்கும் ஐகானைக் கிளிக் செய்யவும்.
    • அழைப்பில் மற்றவர்களைச் சேர்த்து ஃபைலில் கூட்டுப்பணி செய்ய: “இந்த ஃபைல் மற்றும் வீடியோ அழைப்பிற்கான இணைப்பு” என்பதற்கு அடுத்துள்ள நகலெடுக்கும் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டின் ஸ்கிரீனைப் பகிர, கீழே வலதுபுறத்தில் உள்ள 'ஸ்கிரீனைப் பகிர்' ஸ்கிரீனைப் பகிர்தல் என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் இருக்கும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்த, கீழே வலதுபுறத்தில் உள்ள ஸ்கிரீனைப் பகிர்வதை நிறுத்தும் ஸ்கிரீன் பகிர்தலை ரத்துசெய்தல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
    • கவனத்திற்கு: ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டில் இருந்து ஒரு பக்கத்தைப் பகிரும்போது ஸ்கிரீனைப் பகிரும் பக்கத்தை உங்களால் மாற்ற முடியாது. ஸ்கிரீனைப் பகிரும்போது பக்கங்களுக்கு இடையே மாற வேண்டும் என்றால் Google Meetடில் இருந்து ஸ்கிரீனைப் பகிரலாம்.
  6. வீடியோ மீட்டிங்கில் இருந்து வெளியேற, கீழே வலதுபுறத்தில் உள்ள அழைப்பிலிருந்து வெளியேறுவதற்கான அழைப்பைத் துண்டி ஐகானைக் கிளிக் செய்யவும்.

Google Meet வீடியோ மீட்டிங்கை உங்கள் ஃபைலுக்கு மாற்றுதல்

Google Meet வீடியோ மீட்டிங்கை நேரடியாக அதே சாதனத்தில் இருக்கும் உங்கள் ஆவணம், தாள் அல்லது ஸ்லைடுகள் பக்கத்திற்கு மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Meetடிற்குச் செல்லவும்.
  2. மீட்டிங்கில் சேரவும்.
  3. Google Meet வீடியோ மீட்டிங்கை இடமாற்ற விரும்பும் Google Docs, Sheets, Slides அல்லது Jamboard ஃபைலைத் திறக்கவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள Meetடை கிளிக் செய்யவும்.
  5. அழைப்பை இங்கே மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டுக்கு வீடியோ மீட்டிங்கை இடமாற்றினால் உங்கள் பக்கத்தின் ஸ்கிரீன் பகிரப்படாது.
    • ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டின் ஸ்கிரீனைப் பகிர, கீழே வலதுபுறத்தில் உள்ள 'ஸ்கிரீனைப் பகிர்' ஸ்கிரீனைப் பகிர்தல் என்பதைக் கிளிக் செய்து நீங்கள் இருக்கும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பகிர்​ என்பதைக் கிளிக் செய்யவும்.
      • கவனத்திற்கு: ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டில் இருந்து ஒரு பக்கத்தைப் பகிரும்போது ஸ்கிரீனைப் பகிரும் பக்கத்தை உங்களால் மாற்ற முடியாது. ஸ்கிரீனைப் பகிரும்போது பக்கங்களுக்கு இடையே மாற வேண்டும் என்றால் Google Meetடில் இருந்து ஸ்கிரீனைப் பகிரலாம்.
  6. வீடியோ மீட்டிங்கில் இருந்து வெளியேற, கீழே வலதுபுறத்தில் உள்ள அழைப்பிலிருந்து வெளியேறுவதற்கான அழைப்பைத் துண்டி ஐகானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஃபைலில் இருந்து Google Meet வீடியோ மீட்டிங்கில் ஸ்கிரீனைப் பகிர்தல்

 Google Docs, Sheets, Slides, Jamboard போன்றவற்றில் உள்ள ஃபைலின் ஸ்கிரீனை Google Meet வீடியோ மீட்டிங்கில் நேரடியாகப் பகிரலாம். இந்த விருப்பத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் மைக், ஸ்பீக்கர், கேமரா ஆகியவை முடக்கப்பட்டிருக்கும்.

  1. Google Meet வீடியோ மீட்டிங்கில் சேரவும்.
  2. Docs, SheetsSlides அல்லது Jamboardல் ஒரு ஃபைலைத் திறக்கவும்.
  3. மேலே உள்ள Meet என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
  5. இந்தப் பக்கத்தை மட்டும் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • முக்கியம்: மீட்டிங்கில் சேராமல் இருக்கும்போது இந்தப் பக்கத்தை மட்டும் பகிர் என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் ஃபைல் இருக்கும் ஸ்கிரீன் பகிரப்படும். ஆனால் ஃபைல் பக்கத்தில் Google Meet வீடியோ மீட்டிங் காட்டப்படாது. ஸ்கிரீனைப் பகிரும்போது ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டையும் Google Meet வீடியோ மீட்டிங்கையும் ஒரே பக்கத்தில் பார்க்க Docs, Sheets அல்லது Slidesஸில் இருந்து வீடியோ மீட்டிங்கில் சேர்தல் என்பதில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.
  6. நீங்கள் இருக்கும் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. அதைப் பகிர, பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • முக்கியம்: ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி, ஒயிட்போர்டு போன்றவற்றில் இருந்து ஒரு பக்கத்தைப் பகிரும்போது, ஸ்கிரீனைப் பகிரும் பக்கத்தை உங்களால் மாற்ற முடியாது. ஸ்கிரீனைப் பகிரும்போது பக்கங்களுக்கு இடையே மாற வேண்டும் என்றால் Google Meetடில் இருந்து ஸ்கிரீனைப் பகிரலாம்.
  8. நீங்கள் பகிர்ந்த உள்ளடக்கத்தை Meetடிற்குச் சென்று நேரடியாகப் பார்க்கவும்.

உங்கள் ஃபைலில் இருந்து வீடியோ மீட்டிங்கிற்கான இணைப்புகளைப் பகிர்தல்

Google Meet வீடியோ மீட்டிங்கில் இருக்கும்போது Google Docs, Sheets அல்லது Slides ஃபைலை நீங்கள் பயன்படுத்தினால் மீட்டிங் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஃபைல் இணைப்பைப் பகிரலாம். வீடியோ மீட்டிங்கிற்கான URLலையும் பகிரலாம்.

Docs, Sheets அல்லது Slides ஃபைலிற்கான இணைப்பைப் பகிர்தல்
Meet உரையாடல் மூலம் அனைத்து மீட்டிங் பங்கேற்பாளர்களுடனும் உங்கள் ஃபைல் இணைப்பைப் பகிரலாம்.
  1. கம்ப்யூட்டரில் இந்தத் தயாரிப்புகளில் உள்ள ஒரு ஃபைலைத் திறக்கவும்:
  2. உங்கள் ஃபைலில் இருந்து Google Meet வீடியோ மீட்டிங்கில் சேரவும் அல்லது வீடியோ மீட்டிங்கில் உங்கள் ஃபைலில் இருந்து ஸ்கிரீனைப் பகிரவும்.
  3. நீங்கள்:
    • வீடியோ மீட்டிங்கில் உங்கள் ஃபைலைப் பகிர்ந்துள்ளீர்கள் எனில் மேல் வலதுபுறத்தில் உள்ள ஸ்கிரீனைப் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும் ஸ்கிரீனைப் பகிர்தல்.
    • உங்கள் ஃபைலில் இருந்து அழைப்பில் இணைந்துள்ளீர்கள் எனில் மேல் வலதுபுறத்தில் உள்ள  என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மீட்டிங் உரையாடலில் ஃபைலைப் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்களுக்குச் சொந்தமான அல்லது திருத்துவதற்கான அணுகல் உள்ள ஃபைலை அணுகுவதற்கான அனுமதி மீட்டிங் பங்கேற்பாளர்களுக்கு இல்லையென்றால் பாப்-அப் சாளரம் ஒன்று காட்டப்படலாம். உங்கள் ஃபைலில் பிறரது பொறுப்பு என்ன என்பதைத் தீர்மானிக்க, பார்வையாளர், கருத்து தெரிவிப்பவர், திருத்தக்கூடியவர் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உதவிக்குறிப்பு: Calendar நிகழ்வுக்கான உரிமையோ அதைத் திருத்துவதற்கான அணுகலோ உங்களிடம் இருந்தால் அந்த ஃபைல் Calendar நிகழ்விலும் இணைக்கப்படும். ஃபைலை இணைக்க விரும்பவில்லை என்றால், “Calendar நிகழ்வில் ஃபைலை இணை” என்பதைத் தேர்வுநீக்கவும்.
  6. Meet உரையாடலில் பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

வீடியோ மீட்டிங்கிற்கான இணைப்பைப் பகிர்தல்

  • வீடியோ மீட்டிங்கைப் பகிரவும்:
    1. வலதுபுறத்தில் உள்ள மேலும் மேலும் அதன் பிறகு நபர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. “மற்றவர்களைச் சேர்க்க இணைப்பைப் பகிருங்கள்” என்பதில் இந்த வீடியோ அழைப்பிற்கு மட்டுமான இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • வீடியோ மீட்டிங்கையும் ஃபைலையும் பகிர:
    1. வலதுபுறத்தில் உள்ள மேலும் மேலும் அதன் பிறகு நபர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. “மற்றவர்களைச் சேர்க்க இவற்றில் ஓர் இணைப்பைப் பகிருங்கள்” என்பதில் இந்த ஃபைல் மற்றும் வீடியோ அழைப்பிற்கான இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

பிழையறிந்து திருத்துவதற்கான உதவிக்குறிப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

“ஆடியோ அல்லது வீடியோ சிக்கல்கள் உள்ளன.”

  • உங்கள் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டின் பக்கத்தில் ஆடியோவைக் கேட்க முடியவில்லை எனில் தளம் ஒலியடக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்:
    1. மேலே உலாவிப் பக்கத்தின் மீது வலது கிளிக் செய்யவும்.
    2. தளத்தின் ஒலியை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சியில் மைக்ரோஃபோனோ கேமராவோ வேலை செய்யவில்லை எனில் "docs.google.com" தளத்திற்குக் கேமரா அல்லது மைக்ரோஃபோன் அணுகல் தடுக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

“Google Meet அம்சங்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியவில்லை.”

  • Google Meet வீடியோ மீட்டிங்கை ஆவணம், விரிதாள் அல்லது விளக்கக்காட்சிக்கு மாற்றினால் சில Google Meet அம்சங்களைப் பயன்படுத்த முடியாது. உதாரணத்திற்கு உங்களால்:
    • பின்புலத்தை மாற்ற முடியாது
    • வாக்கெடுப்புகளையோ கேள்விபதில் அமர்வுகளையோ உருவாக்க முடியாது
  • இந்த அம்சங்களைப் பயன்படுத்த வேண்டுமெனில் வீடியோ மீட்டிங்கை உங்கள் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டில் இருந்து Google Meetடிற்கு மாற்றலாம். மேல் வலதுபுறத்தில் உள்ள பாப்-அவுட் Open in new (pop out) என்பதைக் கிளிக் செய்யவும்.

“வேறொரு பக்கத்தின் ஸ்கிரீனைப் பகிர முடியவில்லை.”

உங்கள் ஆவணம், விரிதாள், விளக்கக்காட்சி அல்லது ஒயிட்போர்டில் இருந்து ஒரு பக்கத்தின் ஸ்கிரீனைப் பகிரும்போது அந்த ஃபைலுக்கான பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறொரு சாளரத்தையோ பக்கத்தையோ தேர்வுசெய்தால் ஃபைல் இருக்கும் பக்கத்தின் ஸ்கிரீனைப் பகிர முடியாது. ஸ்கிரீனைப் பகிரும்போது பக்கங்களுக்கு இடையே மாற வேண்டும் என்றால் Google Meetடில் இருந்து ஸ்கிரீனைப் பகிரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
412678793993296422
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false