ஸ்பேஸைத் தடுத்துப் புகாரளித்தல்

Google Chat ஸ்பேஸில் நீங்கள் தவறான செயல்பாடுகளை எதிர்கொண்டால் அந்த ஸ்பேஸைத் தடுத்துவிட்டுப் புகாரளிக்கலாம். ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களின் மாதிரிக்காட்சியையும் பார்க்கலாம். பிறகு இந்த ஸ்பேஸில் நீங்கள் சேரலாம் அல்லது இதைத் தடுக்கலாம்.

ஸ்பேஸைத் தடுத்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு ஸ்பேஸைத் தடுத்தால்:

  • அந்த ஸ்பேஸில் நீங்கள் இடுகையிட்டவை தொடர்ந்து பிறருக்குக் காட்டப்படும்.
  • அந்த ஸ்பேஸில் இருந்து அறிவிப்பைப் பெறமாட்டீர்கள்.
  • உங்கள் "ஸ்பேஸ்கள்" பட்டியலிலும், ஸ்பேஸ் தேடல்களிலும் அந்த ஸ்பேஸ் காட்டப்படாது.
  • ஸ்பேஸில் சேர்வதற்கான அழைப்பு அறிவிப்புகளை இனி பெறமாட்டீர்கள். ஆனால் அழைக்கப்பட்டுள்ள உறுப்பினராக உங்கள் பெயர் காட்டப்படும்.

நீங்கள் தடுத்துள்ள ஸ்பேஸில் சேர்வதற்கான அழைப்பைப் பெற்றால்:

  • அழைக்கப்பட்டுள்ள உறுப்பினராக உங்கள் பெயர் காட்டப்படும். ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்புகளையும் பெறமாட்டீர்கள், ஸ்பேஸில் சேர்க்கப்படவும் மாட்டீர்கள்.
  • ஸ்பேஸை உருவாக்கியவருக்கும் பிற உறுப்பினர்களுக்கும் அந்த ஸ்பேஸைத் தடுத்துள்ளீர்கள் என்பது தெரியாது.

உதவிக்குறிப்புகள்:

  • நீங்கள் தடுத்துள்ள பயனர்களால் உங்களை ஸ்பேஸில் சேர்க்கவும், உங்களால் அவர்களைச் சேர்க்கவும் முடியாது.
  • ஸ்பேஸை அனுமதிக்கும்போது "ஸ்பேஸ்களைத் தேடு" என்பதில் சேர் சேர் என்பது காட்டப்பட்டால் மட்டுமே உங்களால் மீண்டும் சேர முடியும்.

ஸ்பேஸைத் தடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • இடதுபுறத்தில் “ஸ்பேஸ்கள்” என்பதற்குக் கீழே ஸ்பேஸின் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை  கிளிக் செய்து and then ஸ்பேஸைத் தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தடுக்க விரும்பும் ஸ்பேஸைத் தேர்ந்தெடுத்து and then ஸ்பேஸ் குறித்த விவரங்கள் உள்ள கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து and then ஸ்பேஸைத் தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஸ்பேம்/தவறான பயன்பாடு என ஸ்பேஸைப் புகாரளிக்க, இந்த ஸ்பேஸை ஸ்பேம்/முறைகேடு எனப் புகாரளி என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
  • தவறான பயன்பாட்டிற்காக ஒரு ஸ்பேஸைப் புகாரளித்தால் அதை மதிப்பாய்வு செய்வதற்காக அதிலுள்ள கடைசி 50 மெசேஜ்களின் நகல் Googleளுக்கு அனுப்பப்படும்.
  • நீங்கள் தடுத்த ஸ்பேஸில் மீண்டும் சேர, அந்த ஸ்பேஸில் உள்ள மற்றொரு உறுப்பினர் உங்களை மீண்டும் அழைக்க வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும்.

ஸ்பேஸை அனுமதித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • Chatடில் மேலே உள்ள அமைப்புகள் ஐகானை தட்டி அதன் பிறகு தடுக்கப்பட்ட ஸ்பேஸ்களை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Gmailலில் மேலே உள்ள அமைப்புகள் ஐகானை தட்டி அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு அதன் பிறகு அரட்டை & Meet அதன் பிறகு அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும்  அதன் பிறகு தடுக்கப்பட்ட ஸ்பேஸ்களை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸின் பெயருக்கு அடுத்துள்ள அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேம் என்று குறிக்கப்பட்ட ஸ்பேஸைத் தடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
  2. Chatடில் புதிய உரையாடல் அதன் பிறகு ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸ்களைத் தேடுவதற்கான மெனு விருப்பங்கள் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து and then ஸ்பேம் அழைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஸ்பேஸ்கள் என்பதற்கு அடுத்துள்ள மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் பாதுகாப்பிற்காக, ஸ்பேஸின் மாதிரிக்காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள இணைப்புகளைப் பதிவிறக்கவோ படங்களைப் பார்க்கவோ உங்களால் முடியாது.
  5. ஸ்பேஸையும் அதிலிருந்து இனிவரும் அழைப்புகளையும் தடுக்க, தடு என்பதைக் கிளிக் செய்யவும்.

விருப்பத்தேர்வு: ஸ்பேஸ் குறித்துப் புகாரளிக்க, "இந்த ஸ்பேஸை ஸ்பேம்/முறைகேடு எனப் புகாரளி" அதன் பிறகு என்பதற்கு அடுத்துள்ள செக்பாக்ஸைக் கிளிக் செய்து தடு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேம் என்று குறிக்கப்பட்ட ஸ்பேஸில் சேர்தல்

  1. Chatடில் புதிய உரையாடல் அதன் பிறகு ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஸ்பேஸ்களைத் தேடுவதற்கான மெனு விருப்பங்கள் உள்ள மூன்று புள்ளி மெனுவை   கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேம் அழைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸ்கள் என்பதற்கு அடுத்துள்ள மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்கள் பாதுகாப்பிற்காக, ஸ்பேஸின் மாதிரிக்காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள இணைப்புகளைப் பதிவிறக்கவோ படங்களைப் பார்க்கவோ உங்களால் முடியாது.
  4. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேம் என்று குறிக்கப்பட்டுள்ள ஸ்பேஸில் சேர்ந்தால் அதிலுள்ள ஸ்பேம் லேபிள் அகற்றப்பட்டு நீங்கள் இணைந்துள்ள ஸ்பேஸ்களின் பட்டியலில் அந்த ஸ்பேஸ் சேர்க்கப்படும்.

ஸ்பேம் என்று குறிக்கப்பட்ட ஸ்பேஸ் அழைப்புகளை நிர்வகித்தல்

ஸ்பேம் போன்று தோற்றமளிக்கும் ஸ்பேஸ் அழைப்புகள் வடிகட்டப்பட்டு ஒரு தனிப் பிரிவில் சேர்க்கப்படும். இந்த ஸ்பேஸில் நீங்கள் சேரலாம் அல்லது இதைத் தடுக்கலாம்.

ஸ்பேம் எனக் குறிக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களை நீங்கள் தடுத்தால் எதிர்காலத்தில் அவற்றில் இருந்து அழைப்புகளைப் பெறமாட்டீர்கள். ஒரு ஸ்பேஸை Google தவறுதலாக ஸ்பேம் என்று வடிகட்டியுள்ளதாக நீங்கள் நினைத்தாலும் உங்களால் அதில் சேர முடியும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9401244640736161555
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false