Google Chatடில் ஒருவருடன் உரையாட விரும்பவில்லை என்றால் அவரைத் தடுத்துப் புகாரளிக்கலாம். நீங்கள் ஸ்பேஸ்களிலும் பெரும்பாலான குழு மெசேஜ்களிலும் குறிப்பிட்ட நபர்களைத் தடுக்கலாம் அல்லது நேரடி மெசேஜ்களைத் தடுக்கலாம்.
ஒருவரைத் தடுத்தால்:
- நீங்கள் Google Workspace கணக்கைப் பயன்படுத்துபவராகவும் நீங்கள் தடுத்தவர் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை அவரால் தெரிந்துகொள்ள முடியும்.
- நீங்கள் தடுத்தவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாது. அவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமெனில் அவருக்கான தடுப்பை நீங்கள் நீக்க வேண்டும்.
- நீங்கள் தடுத்தவரிடம் இருந்து வரும் மெசேஜ்கள் உங்கள் ஸ்பேஸ்களிலும் குழு மெசேஜ்களிலும் காட்டப்படாது. அவற்றைப் பார்க்க விரும்பினால் அவை காட்டப்படும்படி நீங்கள் அமைத்துக்கொள்ளலாம்.
- நீங்கள் தடுத்தவரால் ஸ்பேஸில் வரும் அனைத்து மெசேஜ்களையும் தொடர்ந்து படிக்க முடியும்.
- நீங்களும் நீங்கள் தடுத்தவரும் பழைய மெசேஜ்கள் எதையும் ஒருவருக்கொருவர் திருத்திக்கொள்ள முடியாது.
- குறிப்பிட்ட பிற Google சேவைகளிலும் அவர் தடுக்கப்படுவார்.
- நீங்கள் தடுப்பதற்கு முன்பு அவர் அனுப்பிய லிங்குகளும் இணைப்புகளும் இப்போதும் பயன்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.
- ஒருவரின் தவறான பயன்பாடு குறித்துப் புகாரளித்தால் உங்கள் உரையாடலின் கடைசி 50 மெசேஜ்களின் நகல், மதிப்பாய்வுக்காக Googleளுக்கு அனுப்பப்படும்.
- தடுக்கப்பட்ட பயனரிடம் இருந்து வரும் மெசேஜ்களை உங்கள் Google கணக்கில் இருந்து நீங்கள் பதிவிறக்கலாம். உங்கள் Google தரவைப் பதிவிறக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Chat அல்லது Gmailலில் ஒருவரைத் தடுத்தல்
- Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
- Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் உரையாடல் பட்டியலில் ஒருவரின் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து தடுத்துப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் Google Workspace கணக்கைப் பயன்படுத்தும்போது, நீங்கள் தடுக்க விரும்புபவர் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் இந்த விருப்பம் தடு என்று இருக்கும்.
- விருப்பத்தேர்வு: ஒருவரின் தவறான பயன்பாடு குறித்துப் புகாரளிக்க, "மேலும் புகாரளி" என்பதற்கு அடுத்து உள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- நீங்கள் Google Workspace கணக்கைப் பயன்படுத்தினால் உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களை மட்டுமே புகாரளிக்க முடியும்.
- உறுதிப்படுத்த, தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
Chat அல்லது Gmailலில் ஒருவரை அனுமதித்தல்
- Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
- ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
- Chatடில் மேலே உள்ள அமைப்புகள் ஐகானை தட்டி தடுக்கப்பட்ட பயனர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Gmailலில் மேலே உள்ள அமைப்புகள் ஐகானை தட்டி எல்லா அமைப்புகளையும் காட்டு அரட்டை & Meet அரட்டை அமைப்புகளை நிர்வகிக்கவும் தடுக்கப்பட்ட பயனர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- காட்டப்படும் பரிந்துரைகளில் இருந்து நீங்கள் அனுமதிக்க விரும்புபவரைத் தேர்ந்தெடுக்கவும்.
- அனுமதி ஐகானை கிளிக் செய்யவும்.
உரையாடலைத் தடுத்தல்
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Chatடில் உரையாடல் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து இந்த உரையாடலைத் தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: தவறான பயன்பாடு என்று உரையாடலைப் புகாரளிக்க, "இந்த ஸ்பேஸை ஸ்பேம்/முறைகேடு எனப் புகாரளி" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- நீங்கள் Google Workspace கணக்கைப் பயன்படுத்தினால் உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களை மட்டுமே புகாரளிக்க முடியும்.
-
உறுதிப்படுத்த, தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
உரையாடலில் ஒருவரைத் தடுத்தல் அல்லது அனுமதித்தல்
முக்கியம்: நீங்கள் இருக்கும் அதே உரையாடலில் உள்ளவருக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பாமல் அவரைத் தடுக்கலாம்.
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Chatடில் உரையாடலைத் திறக்கவும்.
- மேலே உரையாடலின் பெயரைக் கிளிக் செய்து உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அவரது பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து தடு அல்லது அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: ஸ்பேஸில் ஒருவரைத் தடுத்த பிறகு அவரது மெசேஜ்களை மறைக்க உங்கள் உலாவியை ரெஃப்ரெஷ் செய்ய வேண்டியிருக்கலாம்.
மற்றவர்களைத் தடுப்பதற்கான பிற வழிகள்
Chatடில் நீங்கள் இவற்றையும் செய்யலாம்:
- பிறரது மெசேஜ் கோரிக்கையை நிராகரிக்கும்போது அவர்களைத் தடுக்கலாம்.
- ஸ்பேஸைத் தடுத்துப் புகாரளிக்கலாம்.
பிற Google தயாரிப்புகளில் பிறரது கணக்குகளையும் தடுக்கலாம்.