Google Chat அறிவிப்புகளைப் பெறவில்லை

அறிவிப்புகளைப் பெறுவதில்லை எனில் உங்கள் Google Chat அறிவிப்பு அமைப்புகளைச் சரிபார்க்கவும். Google Chat அறிவிப்புகளை எப்படி இயக்குவது அல்லது முடக்குவது என அறிக.

நீங்கள் Google Chatடைப் பயன்படுத்தும் சாதனத்திலும் உலாவியிலும் அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

கம்ப்யூட்டரின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அறிவிப்புகளை அனுமதித்தல்

  • அறிவிப்புகளை இயக்குவதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கும் வேறுபடும். கூடுதல் தகவல்களுக்கு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆன்லைன் உதவியைப் பார்க்கவும்.
  • சில கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் அறிவிப்புகளை முடக்குவதற்கான அமைப்புகள் இருக்கும். நீங்கள் Google Chat அறிவிப்புகளைப் பெறுவதில்லை எனில் உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆன்லைன் உதவியைப் பார்த்து, அறிவிப்புகள் முடக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உலாவியில் Google Chat அறிவிப்புகளை அனுமதித்தல்

Google Chromeமில் Google Chat அறிவிப்புகளை அனுமதித்தல்

  1. கம்ப்யூட்டரில், Chromeமை Chrome திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, Google Chromeமைப் பிரத்தியேகமாக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் More அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தள அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Gmail உள்ளீட்டைக் கண்டறியவும்.
    • “அறிவிப்புகளை அனுப்ப அனுமதிக்கப்படாதவை” என்பதன் கீழ் அது பட்டியலிடப்பட்டிருந்தால் அறிவிப்புகளை அனுப்புவதற்கான அனுமதியை இயக்கவும். வலதுபுறத்தில் உள்ள கூடுதல் செயல்கள் More அதன் பிறகு அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • “அறிவிப்புகளை அனுப்ப அனுமதிக்கப்பட்டவை” என்பதன் கீழ் அது பட்டியலிடப்பட்டிருந்தால் அறிவிப்புகளுக்கான அனுமதிகள் இயக்கப்பட்டுள்ளன என அர்த்தம்.
    • திரையில் அது பட்டியலிடப்படவில்லை எனில் நீங்களே அதைச் சேர்க்கலாம். “அறிவிப்புகளை அனுப்ப அனுமதிக்கப்பட்டவை” என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும். அதன்பிறகு, இந்த முகவரியைச் சேர்க்கவும்: https://mail.google.com:443.

பிற உலாவிகளில் Google Chat அறிவிப்புகளை அனுமதித்தல்

அறிவிப்புகளை இயக்குவதற்கான வழிமுறைகள் உலாவிகளைப் பொறுத்து வேறுபடும். கூடுதல் தகவல்களை அறிய, உங்கள் உலாவிக்கான ஆன்லைன் உதவியைப் பார்க்கவும்.

அவ்வப்போது அறிவிப்புகளைப் பெறுவதில்லை

Google Chat அறிவிப்புகளை அவ்வப்போது பெறுவதில்லை எனில் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.

மொபைல் ஆப்ஸை மூடுதல்

Google Chat அல்லது Gmail மொபைல் ஆப்ஸை மூடவும். ஆப்ஸ் திறந்திருந்தால் அறிவிப்புகள் அதில் காட்டப்படும். பின்வரும் சூழல்களில் அறிவிப்புகள் காட்டப்படாது:

  • chat.google.com தளத்தில் ஆன்லைனில் இருக்கும்போது.
  • Chat டெஸ்க்டாப் ஆப்ஸைப் பயன்படுத்தும்போது.
  • Gmailலில் Chatடைப் பயன்படுத்தும்போது.

அறிவிப்புகள் எங்கே காட்டப்படும் என்பதை அறிந்துகொள்ளுதல்

அறிவிப்புகள் எங்கே காட்டப்படுகின்றன என்பதைப் பார்க்கவும். 

chat.google.com தளத்தில் Chatடைப் பயன்படுத்தினால்:

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதன் கீழ், "ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு" என்ற விருப்பம் காட்டப்படுகிறதா எனப் பார்க்கவும். 
    • “ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு” என்ற விருப்பம் காட்டப்பட்டால் chat.google.com தளத்தில் Google Chat இணைய அறிவிப்புகளைப் பெறுவீர்கள். 
    • “ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு” என்ற விருப்பம் காட்டப்படவில்லை என்றால் வேறொரு உலாவிப் பக்கத்திலோ Chat ஆப்ஸிலோ Google Chat அறிவிப்புகளைப் பெறுவீர்கள். 

Gmailலைப் பயன்படுத்தினால்:

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் உள்ள Chat & Meet பிரிவைக் கிளிக் செய்யவும்.
  4. "அரட்டை அறிவிப்பு அமைப்புகள்" என்பதற்கு அடுத்துள்ள அரட்டை அமைப்புகளை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" என்பதன் கீழ், "ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு" என்ற விருப்பம் காட்டப்படுகிறதா எனப் பார்க்கவும்.
    • “ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு” என்ற விருப்பம் காட்டப்பட்டால் Gmailலில் Google Chat இணைய அறிவிப்புகளைப் பெறுவீர்கள். 
    • “ஓர் எடுத்துக்காட்டைக் காட்டு” என்ற விருப்பம் காட்டப்படவில்லை எனில் வேறொரு உலாவிப் பக்கத்திலோ Chat ஆப்ஸிலோ Google Chat அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

குறிப்பிட்ட ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலுக்கான அறிவிப்புகளைப் பெறுவதில்லை

தலைப்பு அல்லது குழு உரையாடலின்படி குழுவாக்கிய ஸ்பேஸ்களுக்கு அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். தலைப்பு அல்லது குழு உரையாடலின்படி குழுவாக்கிய ஸ்பேஸ்களுக்கான அறிவிப்புகளை எப்படிப் பிரத்தியேகமாக்குவது என அறிக.

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களுக்கு அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் மெசேஜ் தொடர் அறிவிப்புகளை எப்படி நிர்வகிப்பது என அறிக.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸ்கள், குழு உரையாடல்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்பு அமைப்புகள் Google Chatடின் இணையம், மொபைல் என இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலுக்கான அறிவிப்பு அமைப்புகளை இணையத்தில் மாற்றினால் அந்த மாற்றம் உங்கள் மொபைல் ஆப்ஸிலும் பயன்படுத்தப்படும்.

குறிப்பிட்ட ஒரு தனிநபருடனான உரையாடலுக்கு அறிவிப்புகளைப் பெறுவதில்லை

உரையாடலுக்கான அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். தனிநபருடனான குறிப்பிட்ட உரையாடலுக்கு அறிவிப்புகளை எப்படி இயக்குவது என்பதை அறிக.

உதவிக்குறிப்பு: தனிநபருடனான உரையாடலின் அறிவிப்பு அமைப்புகள் Google Chatடின் இணையம், மொபைல் என இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். உரையாடலின் அறிவிப்பு அமைப்புகளை இணையத்தில் மாற்றினால் அந்த மாற்றம் உங்கள் மொபைல் ஆப்ஸிலும் பயன்படுத்தப்படும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3516424560865428510
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false