Google Chat அறிவிப்புகளைப் பெறவில்லை

அறிவிப்புகளைப் பெறுவதில்லை எனில் உங்கள் Google Chat அறிவிப்பு அமைப்புகளைச் சரிபார்க்கவும். Google Chat அறிவிப்புகளை எப்படி இயக்குவது அல்லது முடக்குவது என அறிக.

நீங்கள் Google Chatடைப் பயன்படுத்தும் சாதனத்திலும் உலாவியிலும் அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

மொபைல் சாதனத்தில் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுமதித்தல்

மொபைல் சாதனத்தில் உள்ள அறிவிப்புகள் அமைப்பைச் சரிபார்க்கவும்.

  1. உங்கள் மொபைலில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. ஆப்ஸ் & அறிவிப்புகள் அதன் பிறகு Chat அதன் பிறகு ஆப்ஸ் அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. ஆப்ஸ் அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  4. Google Chat ஆப்ஸ் அறிவிப்புகளும் இயக்கப்பட்டிருப்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் சாதனத்தில் உள்ள அமைப்புகள் மெனுவில் “ஆப்ஸ் & அறிவிப்புகள்” என்பது வேறு பெயரில் இருக்கலாம். ஆப்ஸ் அறிவிப்பு அமைப்புகளை எப்படி அணுகுவது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் மொபைல் சாதனத்தின் ஆன்லைன் உதவியைப் பார்க்கவும்.

அவ்வப்போது அறிவிப்புகளைப் பெறுவதில்லை

திறந்துள்ள உலாவிப் பக்கங்களை மூடுதல்

கம்ப்யூட்டரில் திறந்திருக்கும் Gmail, Google Chat உலாவிப் பக்கங்களை மூடவும். உலாவியில் செயல்பாட்டில் இருக்கும்போது, மொபைல் ஆப்ஸில் அறிவிப்புகள் காட்டுவதற்குப் பதிலாக உலாவியில் காட்டப்படும். Google Chat ஆப்ஸில் செயல்பாட்டில் இல்லை எனில் Google கணக்கில் உள்நுழைந்துள்ள சாதனங்கள் அனைத்திலும் அறிவிப்புகள் காட்டப்படும்.

குறிப்பிட்ட ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலுக்கான அறிவிப்புகளைப் பெறுவதில்லை

தலைப்பு அல்லது குழு உரையாடலின்படி குழுவாக்கிய ஸ்பேஸ்களுக்கு அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். தலைப்பு அல்லது குழு உரையாடலின்படி குழுவாக்கிய ஸ்பேஸ்களுக்கான அறிவிப்புகளை எப்படிப் பிரத்தியேகமாக்குவது என அறிக.

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களுக்கு அறிவிப்புகள் இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் மெசேஜ் தொடர் அறிவிப்புகளை எப்படி நிர்வகிப்பது என அறிக.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸ்கள், குழு உரையாடல்கள் ஆகியவற்றுக்கான அறிவிப்பு அமைப்புகள் Google Chatடின் இணையம், மொபைல் என இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஸ்பேஸ் அல்லது குழு உரையாடலுக்கான அறிவிப்பு அமைப்புகளை இணையத்தில் மாற்றினால் அந்த மாற்றம் உங்கள் மொபைல் ஆப்ஸிலும் பயன்படுத்தப்படும்.

குறிப்பிட்ட ஒரு தனிநபருடனான உரையாடலுக்கு அறிவிப்புகளைப் பெறுவதில்லை

உரையாடலுக்கான அறிவிப்புகள் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். தனிநபருடனான குறிப்பிட்ட உரையாடலுக்கு அறிவிப்புகளை எப்படி இயக்குவது என்பதை அறிக.

உதவிக்குறிப்பு: தனிநபருடனான உரையாடலின் அறிவிப்பு அமைப்புகள் Google Chatடின் இணையம், மொபைல் என இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். உரையாடலின் அறிவிப்பு அமைப்புகளை இணையத்தில் மாற்றினால் அந்த மாற்றம் உங்கள் மொபைல் ஆப்ஸிலும் பயன்படுத்தப்படும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14993784498468382002
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false