Google Chatடில் இருந்து ஸ்பேஸில் இணைதல்

ஸ்பேஸில் சேர்வதற்கு அழைக்கப்பட்டிருந்தால் அதன் மாதிரிக்காட்சியையும் அதில் உள்ள இதுவரையிலான மெசேஜ்களையும் உங்களால் பார்க்க முடியும்.

நீங்கள் ஸ்பேஸில் இருந்து வெளியேறினால்:

  • வேறொரு உறுப்பினர் உங்களைச் சேர்க்கும் வரையோ அழைக்கும் வரையோ உங்களால் மீண்டும் சேர முடியாது.
  • செயலில் உள்ள உரையாடல் மெசேஜ் தொடர்கள் குறித்த அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்.

ஸ்பேஸில் மீண்டும் சேர்ந்தால் இதுவரையிலான மெசேஜ்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம். யாரேனும் உங்களை ஸ்பேஸில் இருந்து அகற்றினால், மீண்டும் ஒருவர் உங்களை அழைத்தால் மட்டுமே அந்த ஸ்பேஸில் நீங்கள் சேர முடியும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸ் கண்டறியத்தக்க வகையில் இருந்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சேரலாம். கண்டறியத்தக்க ஸ்பேஸ்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்பேஸில் சேர்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. புதிய உரையாடல் அதன் பிறகு ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸைத் தேடவும்.
    • நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸ்கள் முதலில் காட்டப்படும்.
  4. ஸ்பேஸில் சேர, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஸ்பேஸைத் திறக்க, திற என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விருப்பத்திற்குரியது: ஸ்பேஸின் மாதிரிக்காட்சியைப் பார்க்க, மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்பேஸின் மாதிரிக்காட்சியைப் பார்க்கும்போது உங்களால் மெசேஜ்களைப் படிக்க முடியும். ஆனால் உரையாடல்களில் பங்குபெறவோ அறிவிப்புகளைப் பெறவோ முடியாது.

ஸ்பேஸில் இருந்து வெளியேறுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. வெளியேற விரும்பும் ஸ்பேஸின் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து வெளியேறு அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸில் மீண்டும் சேர்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. புதிய உரையாடல் அதன் பிறகு ஸ்பேஸ்களைத் தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸைத் தேடவும்.
  4. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் உருவாக்கிய ஸ்பேஸை நீக்கலாம். ஸ்பேஸை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8579467709210216884
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false