ஸ்பேஸில் ஒருவரைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

Google Chatடில் உள்ள ஸ்பேஸில் கூடுதல் உறுப்பினர்களைச் சேர்க்க அவர்களை உறுப்பினர் பட்டியலில் சேர்க்கவும் அல்லது ஸ்பேஸில் நேரடியாக அவர்களைக் குறிப்பிடவும்.

உதவிக்குறிப்பு: Google Workspace கணக்கின் மூலம் Chatடைப் பயன்படுத்தினால்:

ஸ்பேஸில் ஒருவரைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். அந்த ஸ்பேஸின் தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல் தோன்றும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள + சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சேர்க்க விரும்பும் நபர் அல்லது குழுவின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும்.
  7. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஸ்பேஸில் புதிதாக ஒருவரை விரைவாகச் சேர்க்க, பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் @ என்று டைப் செய்து அவரின் பெயரை டைப் செய்யவும்.
  • ஸ்பேஸில் சேர நீங்கள் அழைத்துள்ளவர்களைப் பார்க்க, உறுப்பினர்களை நிர்வகியுங்கள் அதன் பிறகு அழைக்கப்பட்டோர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்பேஸ் அழைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • பின்வரும் சூழல்களில் ஒருவருக்கு மின்னஞ்சல் அழைப்பு அனுப்பப்படும்:
    • உங்களுடன் அவர் இதுவரை உரையாடல் செய்யாதிருந்தால்.
    • அவர் வேறொரு நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்து உங்கள் Google Workspace கணக்கு மூலம் ஸ்பேஸ் உருவாக்கப்பட்டிருந்தால்.
  • அழைப்பு விடுக்கப்பட்டவர் பின்வரும் சூழல்களில் நேரடியாகவே ஸ்பேஸில் சேர்க்கப்படுவார்:
    • உங்களுடன் அவர் ஏற்கெனவே உரையாடி இருந்தால்.
    • அவர் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவராக இருந்தால்.
  • நேரடியாக ஸ்பேஸ்களில் சேர்க்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் அறிவிப்புகள் அனுப்பப்படாது.
  • உங்களிடம் Google Workspace கணக்கு இருந்தால் உங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அழைப்பு அனுப்பப்படலாம் அல்லது அவர்கள் ஸ்பேஸில் நேரடியாகச் சேர்க்கப்படலாம்.

ஸ்பேஸில் இருந்து ஒருவரை அகற்றுதல்

முக்கியம்: உறுப்பினர்களை நிர்வகிக்கும் அனுமதி உங்களுக்கு இருந்தால் ஸ்பேஸில் இருந்து உறுப்பினர்களை நீங்கள் அகற்றலாம். ஒருவரை அகற்றிய பிறகு, அவரால்:

  • உரையாடலில் பங்கேற்க முடியாது.
  • அந்த ஸ்பேஸின் இதுவரையிலான மெசேஜ்களைப் பார்க்க முடியாது.
  • ஸ்பேஸில் பகிர்ந்த ஃபைல்களை அணுக முடியாது.
  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்ற விரும்பும் நபர் அல்லது குழுவின் பெயருக்கு அடுத்துள்ள கூடுதல் விருப்பங்கள் மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Google குழுவின் ஒரு பகுதியாக ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தால் அவரைக் குழுவில் இருந்து அகற்றிய பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்றவும்.

ஸ்பேஸ் உறுப்பினரின் மின்னஞ்சல் முகவரிகளை நகலெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளை நகலெடுப்பதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9364547786872741535
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false