Google Chatடுக்கான Bitbucket ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Chatடில் இவற்றுக்காக Bitbucket ஆப்ஸைப் பயன்படுத்தலாம்:

  • Bitbucket ஆப்ஸில் நிகழ்வுகள் நடைபெறும்போது மெசேஜ்களைப் பெறுதல்.
  • புதுப்பிப்புக் கோரிக்கைகளைப் பார்ப்பது, அனுமதிப்பது போன்ற விரைவுச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  • புதுப்பிப்புக் கோரிக்கைகளின் கருத்துகளைப் பார்த்தல், பதிலளித்தல்.

தொடங்குவதற்கு முன் தேவையானவை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

Chatடில் Bitbucket ஆப்ஸை அமைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உள்ளமைவுச் சாளரம் காட்டப்படும்.
  4. Bitbucket பணியிடத்திற்கான URLலை டைப் செய்யவும்.
    • எடுத்துக்காட்டு URL: https://bitbucket.org/workspace-name/workspace/overview
  5. அடுத்த படி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தேவையான செருகுநிரல் ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்தால் 6வது படிக்குச் செல்லவும்.
    • இல்லையென்றால், அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி செருகுநிரலை நிறுவிய பிறகு, ஆப்ஸை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இணை அதன் பிறகு அணுகலை உள்ளமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  7.  உங்கள் Google மற்றும் Bitbucket கணக்குகளுக்கு ஆப்ஸ் அணுகலை வழங்க, அமைவின்போது காட்டப்படும் படிகளைப் பின்பற்றவும்.
    • முடித்ததும், நீங்கள் தேர்வுசெய்த Bitbucket கணக்குடன் ஆப்ஸ் தற்போது இணைக்கப்பட்டது என்ற மெசேஜைப் பெறுவீர்கள்.

தரவு சேமிப்பக அறிவிப்புகளை நிர்வகித்தல்

பணியிடத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மாறாக, /bitbucket_settings என்று டைப் செய்யவும்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பணியிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. பணியிடத்தை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தரவு சேமிப்பகத்திற்கான அறிவிப்பைச் சேர்த்தல்

அறிவிப்புகளை நீங்கள் பெற விரும்பும் தரவு சேமிப்பகங்களைச் சேர்க்கவும்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மாறாக, /bitbucket_settings என்று டைப் செய்யவும்.
  4. கீழ் வலதுபுறத்தில் உள்ள தரவு சேமிப்பகத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பட்டியலில் இருந்து ஒரு தரவு சேமிப்பகத்தைத் தேர்வுசெய்யவும்.
  6. தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அறிவிப்புகளை நீங்கள் பெற விரும்பும் பெட்டிகளைத் தேர்வுசெய்யவும்.
    • அனைத்தையும் தேர்ந்தெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. /bitbucket_settings என்று டைப் செய்யவும்.
  4. உங்கள் அமைப்புகளை மாற்றவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Bitbucket ஆப்ஸை நிறுவல் நீக்குதல்

முக்கியம்: ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை நிறுவல் நீக்கினால் ஸ்பேஸில் இருந்து Bitbucket பணியிடம் அகற்றப்படுவதோடு நீங்கள் அமைத்த அனைத்து அறிவிப்புகளையும் இழந்துவிடுவீர்கள். இருப்பினும் உங்களின் உள்நுழைவுத் தகவல் அப்படியே இருக்கும்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. மேலே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி ஐகானை கிளிக் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Chatடுக்கு: நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்பேஸ்களுக்கு: ஆப்ஸ் & ஒருங்கிணைப்புகள் அதன் பிறகு மூன்று புள்ளி மெனு அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11852343298803031120
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false