Google Chatடில் கருத்துகளை அனுப்புதல்

Google Chatடில் இவை குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கலாம்:

  • அம்சம் பற்றிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்.
  • சரியாக இயங்காதவை (எ.கா. பிழைகள் அல்லது தயாரிப்புப் பிழைகள்).

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.

Google Chatடில் கருத்து தெரிவித்தல்

முக்கியம்

  • உங்கள் கருத்தை நாங்கள் புரிந்துகொள்ள உதவ விவரங்களையும் ஸ்கிரீன்ஷாட்டையும் சேர்க்கவும். உங்கள் கருத்தில் அதிகத் தகவல்களை நீங்கள் சேர்ப்பது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.
  • சாதனப் பதிவுகளைச் சேர்க்க, கேட்கப்படும்போது ஒருமுறை அணுகலை அனுமதி என்பதைத் தட்டவும். தொழில்நுட்பச் சிக்கல் குறித்துப் புகாரளிக்கும்போது இந்தப் பதிவுகள் Googleளுக்கு உதவும். Androidல் சாதனப் பதிவுகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள 'மெனு'  and then கருத்தை அனுப்பு and then  தொடங்குக என்பதைத் தட்டவும்.
  3. சிக்கலைப் புகாரளி அல்லது பரிந்துரை வழங்கு என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் சிக்கல் அல்லது பரிந்துரை குறித்து விவரிக்கவும்.
    • கடைசியாகப் பயன்படுத்திய திரையின் ஸ்கிரீன்ஷாட் தானாகவே எடுக்கப்படும்.
  5. விருப்பத்திற்குரியது: ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யவும். 
    • ஸ்கிரீன்ஷாட்டின் பகுதிகளை ஹைலைட் செய்யவோ மறைக்கவோ தகவல்களை ஹைலைட் செய் அல்லது மறை என்பதைத் தட்டவும்.
    • ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்பவில்லை என்றால் 'இணைக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை அகற்று' ஐகானை தட்டவும்.
  6. கூடுதல் தகவல்களையோ அறிவிப்புகளையோ மின்னஞ்சல் மூலம் எங்களிடம் இருந்து பெற விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
  7. தொடர்க என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10286274502950009389
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false