ஸ்பேஸ்களில் உரையாடல் தலைப்புகளை இன்லைன் மெசேஜ் தொடராக மேம்படுத்துவது குறித்துத் தெரிந்துகொள்ளுதல்

2022ல், Google Chatடில் உரையாடல்களை ஒரே, சீரான விதத்தில் வழங்கும் நோக்கில் ஸ்பேஸ்களுக்கான இன்லைன் மெசேஜ் தொடரை அறிமுகப்படுத்தினோம். இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • குழுவில் உள்ள அனைவருக்கும் முதன்மை உரையாடல் சாளரத்தில் மெசேஜ் அனுப்பலாம்.
  • மெசேஜ் தொடரைத் தொடங்க ஒரு மெசேஜிற்குப் பதிலளிக்கலாம்.
  • முந்தைய மெசேஜை மேற்கோளிடலாம்.

அனைத்து ஸ்பேஸ்களையும் இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களாக மேம்படுத்துவது குறித்துத் தெரிந்துகொள்ளுதல்

எங்கள் பயனர்களுக்குச் சேவையளிப்பதற்கும், குழுக்களைச் செயல்திறனுள்ளவையாக வைத்திருப்பதற்கும் ஏற்ப Chatடைத் தொடர்ந்து மேம்படுத்த, உரையாடல் தலைப்புகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து ஸ்பேஸ்களையும் இன்லைன் மெசேஜ் தொடர்கள் உள்ள ஸ்பேஸ்களாக மேம்படுத்துகிறோம். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் 31, 2024க்குள் இந்த மேம்படுத்தல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெரும்பாலான நேரங்களில், வாரஇறுதிகளுக்குள் மட்டும் நடக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படாமல் மேம்படுத்தல் 2 வாரங்கள் வரை நீடிக்கும்:

  • வாரநாட்களின்போது: உங்கள் நிறுவனத்தில் உள்ள பெரும்பாலான ஸ்பேஸ்கள் செயல்படா நேரம் எதுவும் இல்லாமல் உடனடியாக மேம்படுத்தப்படும்.
  • வாரஇறுதிகளின்போது: பெரிய ஸ்பேஸ்களை மேம்படுத்த 12 மணிநேரம் வரை ஆகலாம், அந்த நேரத்தில் அவற்றைப் பயன்படுத்த முடியாது.

நாங்கள் ஸ்பேஸ்களை மேம்படுத்துவதற்கான காரணங்கள்

Chat பயனர்களுக்கு உரையாடல் தலைப்புகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பேஸ்களைப் பயன்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். இவற்றைச் செய்வது பயனர்களுக்கு சிரமமாக இருக்கலாம்:

  • புதிய பதில்கள் சேர்க்கப்படும்போது தனித்தனி தலைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.
  • தொடர்புடைய தலைப்புகளைக் கண்டறிய ஒரு உரையாடலில் பின்னோக்கிச் செல்வது.

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் இருப்பவர்கள்:

  • எந்தவொரு மெசேஜிற்கும் பதிலளித்து, முதன்மை உரையாடலில் இருந்து விலகி 500 பதில்கள் வரை இருக்கக்கூடிய ஒரு தனி உரையாடலை உருவாக்கலாம்.
  • குறிப்பிட்ட மெசேஜ் தொடர்களைப் பின்தொடரலாம், மெசேஜ் தொடரில் பதில்களும் குறிப்பிடல்களும் வரும்போது அறிவிப்புகளைப் பெறலாம்.
  • தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்துவிட்டு முக்கியமானவற்றில் கவனம் செலுத்தலாம்.

உரையாடல் தலைப்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பேஸ்களுடன் ஒப்பிடும்போது இன்லைன் மெசேஜ் தொடர்கள் உள்ள ஸ்பேஸ்களைப் பயன்படுத்துவது அதிக திருப்தியளிப்பதாக Chat பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்லைன் மெசேஜ் தொடர்கள் உள்ள ஸ்பேஸ்களுக்கு மேம்படுத்துவது பற்றி மேலும் அறிக.

தயாரிப்பு மேம்பாடு மற்றும் நேரலைக் கேள்விபதில்: Chatடில் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்படும் ஸ்பேஸ்கள் இன்லைன் மெசேஜ் தொடர் ஸ்பேஸ்களாக மேம்படுத்தப்படுகின்றன

இதனால் உங்கள் ஸ்பேஸ்களில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல்

உரையாடல் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பேஸ்கள் உங்களிடம் இருந்தால் அவை தானாகவே இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களாக மேம்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 21, 2023ல், இந்த மேம்படுத்தல் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்திருந்தோம். உரையாடல் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்பேஸ்களைத் தொடர்ந்து மேம்படுத்தும்போது அது குறித்த விவரங்களை இந்தக் கட்டுரையில் தொடர்ந்து சேர்ப்போம்.

மேம்படுத்தலுக்கு முன்பு உங்களிடம் இருவேறு வகையான ஸ்பேஸ்கள் இருந்திருக்கலாம்:

உரையாடல் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்படும் ஸ்பேஸ்கள்

உரையாடல் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்படும் ஸ்பேஸில் மெசேஜ்களும் பதில்களும் அனைவரும் பார்க்கும் வகையில் தலைப்பின்படி குழுப்படுத்தப்படுகின்றன.

உரையாடல் தலைப்பின்படி குழுப்படுத்தப்பட்ட ஸ்பேஸைக் காட்டும் விளக்கப்படம்

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்கள்

இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸில் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • குழுவில் உள்ள அனைவருக்கும் முதன்மை உரையாடல் சாளரத்தில் மெசேஜ் அனுப்பலாம்.
  • ஒரு மெசேஜிற்குப் பதிலளிக்கலாம்.

தனி மெசேஜிற்குப் பதிலளிக்க இன்லைன் மெசேஜ் தொடரைப் பயன்படுத்தினால் உங்கள் மெசேஜ் தனி உரையாடலாக மாறும்.

இன்லைன் மெசேஜ் தொடரின்படி குழுப்படுத்தப்பட்ட ஸ்பேஸைக் காட்டும் விளக்கப்படம்

மேம்படுத்தலுக்கு முன்பு

உங்கள் ஸ்பேஸிற்குத் திட்டமிடப்பட்ட மேம்படுத்தலைச் செயல்படுத்துவதற்குக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு, வரவிருக்கும் மாற்றத்தை அறிவிக்கும் வகையில் ஒரு பேனர் ஸ்பேஸில் காட்டப்படும்.

மேம்படுத்தலுக்கு முன்பு, "தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்படும் ஸ்பேஸ்கள் இன்லைன் மெசேஜ் தொடர் ஸ்பேஸ்களாக மேம்படுத்தப்படுகின்றன" என்ற மெசேஜ் ஸ்பேஸின் மேல்பகுதியில் காட்டப்படும்

மேம்படுத்தலின்போது ஸ்பேஸை அணுகுதல்

மேம்படுத்தலின்போது உங்கள் ஸ்பேஸைப் பயன்படுத்த முடியாது. மேம்படுத்தலின்போது நீங்கள் ஸ்பேஸைத் திறந்தால் இந்த மெசேஜ் காட்டப்படலாம்:

“ஸ்பேஸ் புதுப்பிக்கப்படுகிறது. இந்த ஸ்பேஸை இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸாகப் புதுப்பிக்கிறோம், விரைவில் தயாராகிவிடும்.”

சில நிமிடங்கள் கழித்து ஸ்பேஸை மீண்டும் திறக்கவும்.

மேம்படுத்தல் தொடங்கும் முன்னரே நீங்கள் ஒரு ஸ்பேஸில் இருந்தால், அந்த மேம்படுத்தல் நிறைவடையும் வரை ஸ்பேஸில் உள்ள பெரும்பாலான அம்சங்களை உங்களால் பயன்படுத்த முடியாது.

மேம்படுத்தலின்போது Chat APIகளும் ஆப்ஸும் ஸ்பேஸ்களைப் பயன்படுத்த முடியாது. APIயோ ஆப்ஸோ ஸ்பேஸைப் புதுப்பிக்க முயலும்போது உங்களுக்குப் பிழைச் செய்தி காட்டப்படக்கூடும். மேம்படுத்தப்படாத ஸ்பேஸ்களை ஆப்ஸும் APIகளும் தொடர்ந்து அணுகலாம்.

Google Vaultடிற்கான அணுகல் உங்களுக்கு இருந்தால் மேம்படுத்தப்படும் ஸ்பேஸ்களுக்கான Google Vault தேடலில் Chat மெசேஜ்களின் நகலை நீங்கள் பார்க்கக்கூடும்.

மேம்படுத்தலுக்குப் பிறகு ஸ்பேஸை அணுகுதல்

இன்லைன் பதில்களைச் சேர்ப்பதற்காகச் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்பேஸைக் காட்டும் விளக்கப்படம்

உரையாடல் தலைப்பின்படி ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து ஸ்பேஸ்களும் தானாகவே இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களாக மேம்படுத்தப்பட்டிருக்கும்.

முக்கியம்: மேம்படுத்தலுக்கு முன்பு அனுப்பிய அனைத்து மெசேஜ்களும் தொடர்ந்து இருக்கும். மேலும் இதை இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸ்களாக நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மாற்றப்பட்ட ஸ்பேஸ்களுக்கு:

  • மேம்படுத்தப்பட்ட ஸ்பேஸிற்கான அணுகலைப் பெற Chatடை மூடிவிட்டு மீண்டும் திறக்க வேண்டியிருக்கும்.
  • மேம்படுத்தலுக்கு முன்பு கடைசியாக அனுப்பப்பட்ட மெசேஜிற்குப் பிறகு “இன்லைன் பதில்கள் சேர்க்கப்பட்டன” என்ற மெசேஜ் காட்டப்படும்.
  • முந்தைய உரையாடல் தலைப்பின் தொடக்கத்தைக் கண்டறிய, முந்தைய மெசேஜ்களில் “புதிய தலைப்பைத் தொடங்குங்கள்” என்பதைத் தேடவும்.
  • மேம்படுத்தலுக்கு முன்பு உரையாடல் தலைப்புகளில் மெசேஜ்களை அனுப்பியிருந்தால் அவை உரையாடல் தலைப்பின்படி குழுப்படுத்தப்படாமல் இப்போது தேதிவாரியாகக் காட்டப்படும்.
  • மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி பழைய தலைப்பிற்கு யாராவது பதிலளித்து இருந்தால் அந்த உரையாடல் தலைப்பில் உள்ள முந்தைய மெசேஜைப் புதிய மெசேஜ் இப்போது மேற்கோளிடும்.
  • ஸ்பேஸ் மேம்படுத்தப்பட்டதும் இதுவரையிலான மெசேஜ்கள் இயக்கப்படும்.
    • இதுவரையிலான மெசேஜ்கள் அமைப்புகளைப் பயனர்கள் மாற்றுவதற்கு உங்கள் நிர்வாகி அனுமதித்திருந்தால் ஸ்பேஸின் இதுவரையிலான மெசேஜ்கள் அமைப்பை ஸ்பேஸ் நிர்வாகிகள் இயக்கலாம் அல்லது முடக்கலாம்.
    • நிறுவனம் அமைக்கும் 'ஸ்பேஸின் இதுவரையிலான மெசேஜ்கள்' அமைப்பே மேம்படுத்தப்பட்ட ஸ்பேஸ்களில் அனுப்பப்படும் புதிய மெசேஜ்களுக்கும் பொருந்தும்.
  • மேம்படுத்தலுக்குப் பிறகு அனுப்பப்பட்ட மெசேஜ்களும் ஏற்கெனவே இருக்கும் 'இன்லைன் மெசேஜ் தொடர் உள்ள ஸ்பேஸின்' அனுபவத்தையே வழங்கும்.

வரவிருக்கும் Chat மெசேஜ் தொடர் அம்சங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

முகப்பில் இருந்தே மெசேஜ்களை தெரிந்துகொள்ளலாம்

நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்களின் மெசேஜ்களை முகப்பில் காணலாம், அவற்றைப் பின்வருமாறு வடிகட்டலாம்: 

  • நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்களையும் படிக்காத உரையாடல்களையும் மட்டுமே காட்டும்படி செய்யலாம்.
  • முகப்பில் இருந்தே உரையாடலைத் திறக்கலாம் அல்லது அதற்குப் பதிலளிக்கலாம்.

Chatடில் மெசேஜ் தொடர்கள், படிக்காத செய்திகள் ஆகியவற்றின்படி வடிகட்ட உதவும் முகப்பு ஷார்ட்கட்டைக் காட்டும் படம்

மெசேஜ் தொடரைப் படிப்பதை எளிதாக்குதல்

மெசேஜ் தொடர்கள் பக்கப்பட்டியின் அளவை மாற்றி இதைச் செய்யலாம்:

  • திரையுடன் பொருந்தும்படி மாற்றலாம்.
  • மிக முக்கியமான மெசேஜ் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தலாம்.

டெஸ்க்டாப்பில் மெசேஜ் தொடர் பேனலின் அளவை எப்படி மாற்றுவது என்பதைக் காட்டும் அனிமேஷன்

மெசேஜ் தொடருக்கு யாரெல்லாம் பதிலளித்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ளுதல்

ஒவ்வொரு மெசேஜ் தொடரும் அதற்குப் பதிலளித்துள்ள பயனர்களின் தோற்றப் படங்களைக் காட்டும்.

Chatடில் மெசேஜ் தொடரில் பதிலளித்துள்ள பயனர்கள் அனைவரின் தோற்றப் படங்களையும் காட்டும் படம்

மெசேஜ் தொடர்களில் மிக முக்கியமான மெசேஜ்களைக் குறித்து அறிவிப்புகளைப் பெறுதல்

எந்தப் புதிய தகவல்களையும் தவற விடாமல் இருக்க, அனைத்து செய்திகளுக்கும் அறிவிப்புகளைப் பெற தேர்வு செய்யலாம், ஒரு ஸ்பேஸில் உள்ள அனைத்து மெசேஜ் தொடர்களையும் தானாகவே பின்தொடரலாம்.

Chatடில் மெசேஜ் தொடர்களில் அறிவிப்புகளை எப்படி மாற்றுவது, உரையாடல்களை எப்படித் தவிர்ப்பது என்பதைக் காட்டும் படம்

ஸ்பேஸில் உள்ள திட்டப்பணிகளில் பணியாற்றுதல்

உங்கள் ஸ்பேஸ் மேம்படுத்தப்பட்ட பிறகு உரையாடல்களை ஒழுங்கமைக்கவும் திட்டப்பணிகளில் சிறப்பாகக் கூட்டுப்பணி செய்யவும் இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

செயலில் உள்ள மெசேஜ் தொடர்களைக் கண்காணித்தல்

ஸ்பேஸில் மெசேஜ் தொடர்களைக் கண்டறிய ஸ்பேஸின் மேல் வலது மூலையில் உள்ள 'மெசேஜ் தொடர்கள்' ஐகானை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்பேஸில் தனி மெசேஜ் தொடரைத் தொடங்குதல்

ஸ்பேஸ் உறுப்பினர்களின் சிறிய குழுவுடன் ஒரு தலைப்பில் தனி மெசேஜ் தொடரை வைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு மெசேஜிற்குச் சென்று மெசேஜ் தொடரில் பதிலளிப்பதற்கான ஐகானை தேர்ந்தெடுக்கவும். மெசேஜ் தொடரில் எப்படிப் பதிலளிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

@ குறிப்பிடலைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸில் ஒருவரின் கவனத்தைப் பெறுவதற்கு அவரது பெயரின் முன்பு @ என்று டைப் செய்யவும். நீங்கள் இவற்றையும் செய்யலாம்:

  • ஒரு மெசேஜிற்குப் பல பெயர்களைச் சேர்க்கலாம்.
  • @அனைவருக்கும் என்பதைப் பயன்படுத்தி அனைவரையும் குறிப்பிடலாம்.
பதிலளிக்கும்போது ஒரு மெசேஜை மேற்கோளிடுதல்

முதன்மை உரையாடலில் முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்குக் கவனத்தைக் கொண்டு வரவோ தகவல் வழங்கவோ விரும்பினால் ஒரு மெசேஜிற்குச் சென்று பதிலில் மேற்கோளிடுவதற்கான ஐகானை தேர்ந்தெடுக்கவும். பதிலில் ஒரு மெசேஜை மேற்கோளிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆவணங்களைப் பகிர்தல்

திட்டப்பணியில் சிறப்பாகக் கூட்டுப்பணி செய்ய உங்கள் கம்ப்யூட்டர், மொபைல், Google Drive ஆகியவற்றில் இருந்து ஆவணங்களைப் பகிரலாம். Google Docs, Sheets ஆகியவற்றில் Chatடில் இருந்து வெளியேறாமல் ஸ்பேஸில் இருந்தே ஃபைலில் நேரடியாக மாற்றங்களைச் செய்யலாம். Chatடில் ஃபைல்களை அனுப்புவதும் பகிர்வதும் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11027883031225029934
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false