Google Chatடில் ஸ்மார்ட் கம்போஸைப் பயன்படுத்துதல்

மெஷின் லேர்னிங் மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட் கம்போஸ் உதவியுடன் நீங்கள் மெசேஜ்களை வேகமாக டைப் செய்யலாம். நீங்கள் வார்த்தைகளை டைப் செய்யும்போதே ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் உங்களுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.

முக்கியம்:

  • ஸ்மார்ட் கம்போஸை ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச், இத்தாலியன், போர்சுகீஸ் ஆகிய மொழிகளில் பெறலாம். பதில்களை வழங்கும் வகையில் ஸ்மார்ட் கம்போஸ் வடிவமைக்கப்படவில்லை, எனவே எல்லா நேரங்களிலும் அது சரியான தகவலையே கணிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
  • ஸ்மார்ட் கம்போஸைப் பயன்படுத்த, நீங்கள் ஸ்மார்ட் அம்சங்களையும் கட்டுப்பாடுகளையும் இயக்கியிருக்க வேண்டும். Google தயாரிப்புகளில் ஸ்மார்ட் அம்சங்களும் கட்டுப்பாடுகளும் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Chatடில் ஸ்மார்ட் கம்போஸைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள் அமைப்புகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. “ஸ்மார்ட் கம்போஸ்” என்பதற்குக் கீழே உள்ள, “இணையம் மற்றும் டெஸ்க்டாப்பில் மெசேஜை எழுதும்போது, கணிக்கப்படும் எழுதுதல் பரிந்துரைகளை இயக்கு” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

Gmailலில் உள்ள Chatடில் ஸ்மார்ட் கம்போஸைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே உள்ள, உரையாடல் & Meet அதன் பிறகு உரையாடல் அமைப்புகளை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “ஸ்மார்ட் கம்போஸ்” என்பதற்குக் கீழே உள்ள, “இணையம் மற்றும் டெஸ்க்டாப்பில் மெசேஜை எழுதும்போது, கணிக்கப்படும் எழுதுதல் பரிந்துரைகளை இயக்கு” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
உதவிக்குறிப்பு: பரிந்துரையை ஏற்க, உங்கள் கீபோர்டில் உள்ள Tab பட்டனை அழுத்தவும்.

மெஷின் லேர்னிங் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

மொழியைப் புரிந்துகொள்ளும் மாதிரிகள் கோடிக்கணக்கான பொதுவான சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் பயன்படுத்தி உலகைப் பற்றித் தானாகப் புரிந்து கொள்வதால், மனிதனின் அறிவாற்றல் சார்ந்த சார்புத் தன்மையையும் பிரதிபலிக்கின்றன.

இதைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்ல தொடக்கமாகும், அத்துடன் இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்த உரையாடலும் செயலிலுள்ளது.

அனைவருக்கும் நன்றாக வேலை செய்யும் தயாரிப்புகளை உருவாக்க Google உறுதி கொண்டுள்ளது. தற்செயலாக நிகழும் ஒரு சார்புச் செயல்களைப் பற்றியும், அவற்றின் தீவிரத்தன்மையைக் குறைக்கும் உத்திகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1724962333103851757
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false