நீங்கள் Google Chatடில் தகாத மெசேஜ்களையும் உங்கள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மீறும் மெசேஜ்களையும் புகாரளிக்கலாம். இந்த அம்சம் இவற்றுக்கு மட்டுமே கிடைக்கும்:
- Google Workspace for Education Standard
- Google Workspace for Education Plus
- Google Workspace Enterprise Plus
முக்கியம்:
- மெசேஜ்களைப் புகாரளிப்பதற்கு முன்பு, உங்கள் நிறுவனத்திற்கு ‘Chatடில் உள்ளடக்கத்தைப் புகாரளித்தல்’ என்பதை நிர்வாகி இயக்க வேண்டும்.
- Chatடில் நீங்கள் புகாரளிக்கக்கூடிய மெசேஜ்களின் வகைகளை உங்கள் நிர்வாகி அமைப்பார். மெசேஜைப் புகாரளிப்பதற்கான விருப்பம் காட்டப்படவில்லை எனில் மதிப்பாய்வு செய்வதற்காக உங்கள் நிர்வாகிக்கு மெசேஜை அனுப்ப முடியாது.
- உங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட மெசேஜ்களை மட்டுமே நீங்கள் புகாரளிக்க முடியும். உரையாடலில், இதுவரையான உரையாடல்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட மெசேஜைப் புகாரளித்தல்
- கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
- Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஓர் உரையாடலைத் திறக்கவும்.
- மெசேஜ் மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.
- மெசேஜ் தொடர்பான செயல்களில் இருந்து, மேலும் விருப்பங்கள் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கருத்தை டைப் செய்யவும்.
- புகாரைச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மதிப்பாய்வு செய்யப்படுவதற்கான புகார் உங்கள் நிர்வாகிக்கு அனுப்பப்படும்.