ஸ்பேஸின் அணுகல் நிலையை மாற்றுதல்

பணி அல்லது பள்ளிக் கணக்குகளுக்கு, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று ஸ்பேஸிற்கான அணுகலை நீங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரும் ஸ்பேஸைக் கண்டறியும்படி மாற்றலாம்.

தனிப்பட்ட மற்றும் கண்டறியத்தக்க ஸ்பேஸ்கள் வேலை செய்யும் விதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

தனிப்பட்ட ஸ்பேஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  • அணிகள், திட்டப்பணிகள் மற்றும் குழுக்களுக்கு இடையேயான கலந்துரையாடலுக்கு ஏற்றவை.
  • ஒரு ஸ்பேஸில் சேர, அந்த ஸ்பேஸில் உள்ள உறுப்பினர் உங்களை அழைக்க வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும்.
  • ஸ்பேஸில் உறுப்பினராகாத வரை அல்லது ஸ்பேஸிற்கு அழைக்காத வரை Chatடில் உங்களால் அதைத் தேட முடியாது.

கண்டறியத்தக்க ஸ்பேஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  • குறிப்பிட்ட தனிநபர்களுக்கோ குழுக்களுக்கோ வரையறுக்கப்படாத தலைப்புகளுக்கு ஏற்றவை.
  • ஸ்பேஸ் கண்டறியக்கூடியதாக இருந்தால் ஸ்பேஸைத் தேடலாம், அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம், அதில் சேரலாம்.
  • ஸ்பேஸுக்கான இணைப்பு உங்களிடம் இருந்தால் அதன் மூலம் ஸ்பேஸில் சேரலாம்.
கண்டறியத்தக்க ஸ்பேஸ்களை ஆதரிக்கும் Google Workspace திட்டங்கள்
  • Frontline
  • Business Starter
  • Business Standard
  • Business Plus
  • Enterprise Essentials
  • Enterprise Standard
  • Enterprise Plus
  • Education Fundamentals
  • Education Standard
  • Education Plus
  • Teaching and Learning Upgrade
  • Nonprofits
  • G Suite Basic
  • G Suite Business
  • Essentials (டொமைன் சரிபார்க்கப்பட்டது)

ஸ்பேஸின் அணுகல் நிலையை மாற்றுதல்

முக்கியம்: ஸ்பேஸிற்கான அணுகல் நிலையை மாற்ற, நீங்கள் ஸ்பேஸ் நிர்வாகியாக இருக்க வேண்டும். ஸ்பேஸ் நிர்வாகியின் பொறுப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸ் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு ஸ்பேஸ் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அணுகல்” என்பதன் கீழே ஸ்பேஸிற்கான அணுகல் நிலையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • தனிப்பட்டது: நீங்கள் அழைக்கும் அல்லது நேரடியாகச் சேர்க்கும் நபர்களும் குழுக்களும் மட்டுமே உங்கள் ஸ்பேஸை அணுக முடியும்.
    • உங்கள் நிறுவனத்தின் பெயர்: நிறுவனத்தில் உள்ள அனைவரும் உங்கள் ஸ்பேஸைக் கண்டறிய முடியும். புதிய உறுப்பினர்கள் உங்கள் ஸ்பேஸைக் கண்டறிந்து அதில் சேரலாம் அல்லது ஸ்பேஸிற்கான இணைப்பு மூலம் சேரலாம்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஒரு ஸ்பேஸ் உங்கள் நிறுவனத்தைச் சார்ந்த அனைவருக்குமானது என்றால் உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்களை அதில் சேர நீங்கள் அழைக்க முடியாது.
  • உங்கள் நிர்வாகி கூடுதல் அணுகல் விருப்பங்களை உருவாக்கியிருக்கலாம். கிடைக்கக்கூடிய அணுகல் விருப்பங்கள் குறித்து கேள்விகள் இருந்தால், நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • உங்கள் ஸ்பேஸில் பங்கேற்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த இலக்குப் பயனர்களை நிர்வாகி நீக்கிவிட்டால், ஸ்பேஸின் இதுவரையிலான மெசேஜ்களில் " நீக்கப்பட்ட பயனர்" என்று காட்டப்படும். மேலும், ஸ்பேஸிற்கான அணுகல் ‘தனிப்பட்டது’ என்று இயல்பாக அமைக்கப்படும்.

கண்டறியத்தக்க ஸ்பேஸில் பிறரைப் புதிதாகச் சேர்த்தல்

கண்டறியத்தக்க ஸ்பேஸில் பிறரைப் புதிதாகச் சேர்க்க இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
  • ஸ்பேஸிற்கான இணைப்பை நகலெடுத்து அதைப் பிறருடன் பகிர்வது.
  • பிறரை நேரடியாகச் சேர்ப்பது அல்லது அழைப்பது.
கண்டறியத்தக்க ஸ்பேஸிற்கான இணைப்பை வைத்திருப்பவர்களைச் சேர்த்தல்
  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள ஸ்பேஸ் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு இந்த ஸ்பேஸிற்கான இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் அழைக்கவோ ஸ்பேஸைச் சேர்ந்து பயன்படுத்தவோ விரும்புபவர்களுடன் அந்த இணைப்பைப் பகிரவும்.
ஸ்பேஸில் பிறரை நேரடியாகச் சேர்த்தல்
  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேல்புறத்தில் உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெயர், மின்னஞ்சல் முகவரி, Google Group ஆகியவற்றை டைப் செய்யவும் அல்லது அழைப்பதற்குப் பரிந்துரைக்கப்படும் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2350022326032006215
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false