வேலை நேரத்தையும் வேலை செய்யும் இடத்தையும் அமைத்தல்

உங்களிடம் பணி அல்லது பள்ளிக் கணக்கு இருந்தால் வேலை நேரத்தையும் இருக்கும் நிலையையும் அமைக்கலாம். 'வேலை நேரம் அல்லது வேலை செய்யும் இடத்திற்கான' விருப்பம் காட்டப்படவில்லை எனில் உங்கள் நிறுவனத்திற்கு நிர்வாகி அதை முடக்கியிருக்கலாம். எனது நிர்வாகி யார்?

வேலை நேரத்தை இயக்குதல்

உங்களுடன் மீட்டிங்கைத் திட்டமிடும் உங்கள் சகப் பணியாளர்களுக்கு நீங்கள் விடுப்பில் இருப்பதைத் தெரிவிக்க, ‘வேலை நேரம்’ என்பதை இயக்கவும். கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை நேரத்தை இயக்க முடியும். 
  1.  கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள "பொது" என்பதன் கீழே உள்ள வேலை நேரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "வேலை நேரம்" பிரிவில் வேலை நேரத்தை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வேலை செய்யும் நாட்களையும் அதன் பிறகு வேலை நேரத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
  6. நீங்கள் வேலை செய்யக்கூடிய நேரத்தைப் பொறுத்து வேலை நேரத்தைப் பிரிக்கலாம்.
    • ஒரு வேலை நாளுக்குப் பல வேலை நேரத்தைச் சேர்க்க, வார நாளுக்கு அடுத்துள்ள சேர் add என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு வேலை நேரத்தை அகற்ற, அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: வேலை நேரத்தைச் சேர்க்கும்போது தொடக்க நேரமானது முடிவு நேரத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும்.

உங்களது நேர மண்டலம், உங்கள் நாட்டில் உள்ள வேலை செய்யும் வழக்கங்கள், உங்கள் திட்ட அட்டவணை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான வேலை நேரத்தை Calendar பரிந்துரைக்கக்கூடும். அவற்றை நீங்கள் ஏற்கலாம், நிராகரிக்கலாம் அல்லது திருத்தலாம். வெவ்வேறு நேர மண்டலங்களில் Calendarரைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.

பணி செய்யும் இடத்தைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

வழக்கமான பணி செய்யும் இடத்தை அமைத்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் "பொது" என்பதன் கீழே உள்ள வேலை நேரம் & இடம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வேலை செய்யும் நாட்களைத் தேர்ந்தெடுக்கவும். கேலெண்டரில் வேலை நேரம் காட்டப்பட்டால் நேரம் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
  5. ஒவ்வொரு நாளுக்கும் அடுத்து, ஏற்கெனவே உள்ள பணி செய்யும் இடத்தை டைப் செய்யவும் அல்லது புதிதாக ஓர் இடத்தை உருவாக்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பணி செய்யும் இடத்தை மாற்ற கேலெண்டரில் குறிப்பிட்ட நாளில் இருக்கும் இடப் பட்டியைக் கிளிக் செய்யவும். அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு மாற்றத்தைப் பயன்படுத்தலாம் அல்லது வாரந்தோறும் மாறும்படி அதை அமைக்கலாம்.

பணி செய்யும் இடம் குறித்து மேலும் அறிக:

  • கேலெண்டரை ஒருவருடன் பகிரும்போது அவர்கள் நீங்கள் பணி செய்யும் இடத்தை பார்க்கலாம். 
  • அலுவலக நேரத்தை மற்றவர்களுடன் ஒருங்கிணைக்க நீங்கள் பணி செய்யும் இடத்தை அமைக்குமாறு நிர்வாகி உங்களிடம் கேட்கலாம். அவ்வாறு கேட்டால் உங்கள் கேலெண்டரின் மேலே உள்ள மஞ்சள் நிற பேனர் கோரிக்கையைக் காட்டும்.
  • உங்களுக்குக் கேலெண்டரில் "மாற்றங்களைச் செய்தல் & பகிர்தலை நிர்வகித்தல்" என்பதற்கு அணுகல் இருந்தால், வழக்கமாகப் பணி செய்யும் இடத்தைத் திருத்தலாம். பகிரப்பட்ட கேலெண்டர்களுக்கான அனுமதி அமைப்புகளைப் பற்றி மேலும் அறிக.
பணி செய்யும் இடத்தைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. முழு நாள் நிகழ்வை உருவாக்குதல். முழு நாள் நிகழ்வை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.
  3. காட்டப்படும் நிகழ்வுச் சாளரத்தில் பணி செய்யும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விருப்பத்திற்குரியது: பணி செய்யும் இடத்தைச் சேர்க்க விரும்பும் தேதிகளைச் சரிசெய்யலாம்.
  5. இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: கேலெண்டர் கட்டத்தில் தேதிக்குக் கீழே கர்சரைக் கிளிக் செய்யும்போது காட்டப்படும் "இடத்தைச் சேர்" பட்டியைக் கிளிக் செய்தும் பணி செய்யும் இடத்தைச் சேர்க்கலாம்.

ஒரு நாளுக்கான உங்கள் பணி செய்யும் இடத்தை மாற்றுதல்

முக்கியம்: ஓய்வு அல்லது பணிமிகுதி தெரிவுநிலையுடன் உங்கள் கேலெண்டரை ஒருவருடன் பகிர்ந்தால் உங்களின் இருக்கும் நிலையையும் பணி செய்யும் இடத்தையும் அவரால் தெரிந்துகொள்ள முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. கேலெண்டர் கட்டத்தில் குறிப்பிட்ட தேதிக்குக் கீழே, இடப் பட்டியைக் கிளிக் செய்யவும்.
    • தொடங்கும் இடத்தைக் கிளிக் செய்து, பணி செய்யும் இடத்தைத் திருத்துவதற்கான ஐகானை Edit task கிளிக் செய்யவும்.
    • தேதி வரம்பைச் சரிசெய்ய, ஒவ்வொரு தேதியையும் கிளிக் செய்யவும். 
    • ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஓர் இடத்தை உருவாக்கவும்.
  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கால அளவைத் தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பிட்ட வரம்பு நாட்களுக்கு உங்கள் பணி செய்யும் இடத்தை மாற்றுதல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. கேலெண்டர் கட்டத்தில் குறிப்பிட்ட தேதி வரம்பிற்குக் கீழே, தொடங்கும் இடத்தைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள, பணி செய்யும் இடத்தைத் திருத்துவதற்கான ஐகானை Edit task கிளிக் செய்யவும்.
    • தேதி வரம்பைச் சரிசெய்ய, ஒவ்வொரு தேதியையும் கிளிக் செய்யவும். 
    • ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஓர் இடத்தை உருவாக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. கால அளவைத் தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பணி செய்யும் இடத்தைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. உங்கள் கேலெண்டரில் உள்ள காலி இடத்தைக் கிளிக் செய்யவும்.
  3. நிகழ்வின் மேற்புறத்தில் உள்ள பணி செய்யும் இடம் என்பதைக் கிளிக் செய்யவும். 
  4. பணி செய்யும் இடத்திற்கு நீங்கள் சேர்க்க விரும்பும் நேரத்தையும் தேதியையும் தேர்வுசெய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: நீங்கள் அமைத்த பணி செய்யும் இடத்தை மற்ற நாட்களுக்கும் பயன்படுத்தலாம்.
    1. தேதி மற்றும் நேரத்தைக் கிளிக் செய்யவும்.
    2. "ஒரு முறை மட்டும்" என்பதற்கு அடுத்துள்ள, கீழ்நோக்கிய அம்புக்குறியை Dropdown கிளிக் செய்யவும்.
    3. நிகழ்வு எப்போது மீண்டும் நிகழ வேண்டும் என்பதையும் எப்போது முடிவடைய வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யவும்.
  6. இடத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது புதிதாக ஒன்றைச் சேர்க்கவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு:

எப்போது விடுப்பில் இருப்பீர்கள் எனக் காண்பித்தல்

நீங்கள் விடுப்பில் இருப்பதாகக் குறிப்பிடும்போது அந்த நேரத்தில் நடக்கவுள்ள அனைத்து மீட்டிங்குகளையும் உங்கள் கேலெண்டர் தானாகவே நிராகரிக்கும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. உங்கள் கேலெண்டரின் மேற்பகுதியில் நீங்கள் விடுப்பைத் தொடங்கும் தேதியைக் கிளிக் செய்யவும்.
  3. விடுப்பில் இருக்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் விடுப்பில் இருக்கப்போகும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கவும். நேரத்தையும் குறிப்பிடலாம்.
  5. விருப்பத்திற்குரியது: தொடர்ந்து நிகழக்கூடிய வகையிலான ‘விடுப்பில் இருக்கும் நிகழ்வுகளைத்’ திட்டமிட, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாள் & நேரத்தின் கீழே உள்ள “ஒருமுறை மட்டும்” அதன் பிறகு என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து அது செயல்படுவதற்கான கால அளவைத் தேர்வுசெய்யவும்.
  6. விரும்பினால்: நிராகரிப்பு அமைப்புகளை மாற்றலாம், நிராகரிப்பு மெசேஜைத் திருத்தலாம்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3444861578592087464
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false