வேலை நேரத்தையும் வேலை செய்யும் இடத்தையும் அமைத்தல்

உங்களிடம் பணி அல்லது பள்ளிக் கணக்கு இருந்தால் வேலை நேரத்தையும் இருக்கும் நிலையையும் அமைக்கலாம். 'வேலை நேரம் அல்லது வேலை செய்யும் இடத்திற்கான' விருப்பம் காட்டப்படவில்லை எனில் உங்கள் நிறுவனத்திற்கு நிர்வாகி அதை முடக்கியிருக்கலாம். எனது நிர்வாகி யார்?

பணி செய்யும் இடத்தைச் சேர்த்தல்

  1. Google Calendar ஆப்ஸை Calendar திறக்கவும்.
  2. உருவாக்குவதற்கான ஐகானை சேர் தட்டி அதன் பிறகு பணி செய்யும் இடம் என்பதைத் தட்டவும்.
  3. தேதி வரம்பைச் சரிசெய்ய, ஒவ்வொரு தேதியையும் தட்டவும். 
  4. பணி செய்யும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்: 
    • வீடு
    • அலுவலகம்
    • வேறொரு இடத்தைச் சேர்க்க, மேலே உள்ள பட்டியில் டைப் செய்யவும். 
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பணி செய்யும் இடத்தைத் திருத்துதல்

முக்கியம்: ஓய்வு அல்லது பணிமிகுதி தெரிவுநிலையுடன் உங்கள் கேலெண்டரை ஒருவருடன் பகிர்ந்தால் உங்களின் இருக்கும் நிலையையும் வேலை செய்யும் இடத்தையும் அவரால் தெரிந்துகொள்ள முடியும்.

  1. Google Calendar ஆப்ஸை Calendar திறக்கவும்.
  2. மாற்ற விரும்பும் இடத்தைத் தட்டி அதன் பிறகு திருத்துவதற்கான ஐகானை Edit task தட்டவும்.
    • தேதி வரம்பைச் சரிசெய்ய, ஒவ்வொரு தேதியையும் தட்டவும். 
  3. தற்போதைய பணி செய்யும் இடத்தைத் தட்டி இவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • வீடு
    • அலுவலகம்
    • வேறொரு இடத்தைச் சேர்க்க, மேலே உள்ள பட்டியில் டைப் செய்யவும். 
  4. சேமி என்பதைத் தட்டவும்.

எப்போது விடுப்பில் இருப்பீர்கள் எனக் காண்பித்தல்

நீங்கள் விடுப்பில் இருப்பதாகக் குறிப்பிடும்போது அந்த நேரத்தில் நடக்கவுள்ள அனைத்து மீட்டிங்குகளையும் உங்கள் கேலெண்டர் தானாகவே நிராகரிக்கும்.

  1. Google Calendar ஆப்ஸை Calendar திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில், உருவாக்கு சேர் அதன் பிறகு விடுப்பில் இருக்கிறேன் என்பதைத் தட்டவும்.
  3. விடுப்பு எடுக்கும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கவும். நேரத்தையும் குறிப்பிடலாம்.
    •  தொடர்ந்து நிகழும் விடுப்பில் இருக்கும் நிகழ்வுகளைத் திட்டமிட, நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாள் மற்றும் நேரத்திற்குக் கீழே உள்ள ஒருமுறை மட்டும் அதன் பிறகு என்பதைத் தட்டி அது செயல்படுவதற்கான கால அளவைத் தேர்வுசெய்யவும்.
  4. விருப்பத்தேர்வு: நிராகரிப்பு அமைப்புகளை மாற்றலாம், நிராகரிப்பு மெசேஜைத் திருத்தலாம்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பணி செய்யும் இடத்தைச் சேர்த்தல்

  1. iPhone அல்லது iPadல் Google Calendar ஆப்ஸை Calendar திறக்கவும்.
  2. உருவாக்குவதற்கான ஐகானை சேர் தட்டிஅதன் பிறகு பணி செய்யும் இடம் என்பதைத் தட்டவும்.
  3. நாள் முழுவதும் என்பதை முடக்கவும்.
  4. தொடக்கம் மற்றும் முடிவு நேரத்தைத் தேர்வுசெய்ய ஒவ்வொரு தேதியையும் தட்டவும்.
  5. விருப்பத்திற்குரியது: நீங்கள் அமைத்த பணி செய்யும் இடத்தை மற்ற நாட்களுக்கும் பயன்படுத்தலாம்.
    1. "ஒரு முறை மட்டும்" ஐகானை தட்டவும்.
    2. நிகழ்வு எப்போது மீண்டும் நிகழ வேண்டும் என்பதையும் எப்போது முடிவடைய வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யவும்.
  6. பணி செய்யும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • வீடு
    • அலுவலகம்
    • வேறொரு இடத்தைச் சேர்க்க, சேர்ப்பதற்கான ஐகானை தட்டி உங்கள் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17999669456338667845
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false