வேறொருவரின் Google Calendarரில் குழு சேர்தல்

யாரேனும் உங்களுடன் அவரது கேலெண்டரைப் பகிர்ந்திருந்தால் அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் தன் கேலெண்டரை இன்னும் உங்களுடன் பகிரவில்லை என்றாலும் நீங்கள் அணுகலைக் கேட்கலாம்.

கவனத்திற்கு:

  • 400 கேலெண்டர்களுக்கு மேல் நீங்கள் குழுசேர்ந்திருந்தால் Calendarரின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
  • கம்ப்யூட்டரிலோ மொபைல் உலாவியிலோ Google Calendarரைப் பயன்படுத்தும்போது மட்டுமே நீங்கள் குழுசேர விரும்பும் கேலெண்டரைத் தேட முடியும்.

கேலெண்டரில் குழு சேர மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல்

படி 1: கேலெண்டரில் குழு சேரும்படி கேட்டல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் “பிற கேலெண்டர்கள்” என்பதற்கு அடுத்துள்ள 'சேர்' Add other calendars அதன் பிறகு கேலெண்டரில் குழு சேர் என்பதைக் கிளிக் செய்யவும். கேலெண்டர் உங்களுடன் பகிரப்பட்டிருந்தால் அது குறித்த மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
  3. “கேலெண்டரைச் சேர்” பெட்டியில் நபரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் அல்லது பட்டியலில் இருந்து மின்னஞ்சல் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Enter விசையை அழுத்தவும்.
  5. அவரது கேலெண்டர் பகிரப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்து பின்வருபவற்றில் ஒன்று நிகழும்:
    • கேலெண்டர் உங்களுடன் பகிரப்படவில்லை எனில் அணுகலைக் கோருமாறு உங்களுக்கு அறிவுறுத்துவோம்.
    • கேலெண்டர் ஏற்கெனவே உங்களுடன் பகிரப்பட்டிருந்தால் இடதுபுறத்தில் "பிற கேலெண்டர்கள்" என்பதன் கீழ் அவரது கேலெண்டர் சேர்க்கப்படும்.
    • நீங்கள் குழு சேர விருப்பும் நபரிடம் Google Calendar இல்லையெனில் Google Calendarரைப் பயன்படுத்த அவரை அழைக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துவோம்.
உங்களுக்குச் சொந்தமில்லாத கேலெண்டரில் குழு சேர்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்

படி 2: (விரும்பினால்) கேலெண்டர் உரிமையாளரின் அனுமதியைப் பெறுதல்

கேலெண்டரின் உரிமை உங்களுடன் பகிரப்படவில்லை என்றால் அணுகலை வழங்கும்படி கேலெண்டரின் உரிமையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

உங்கள் கோரிக்கையை ஏற்க உரிமையாளர் இதைச் செய்ய வேண்டும்:

  1. அணுகல் பெறுவதற்காக நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலைக் கம்ப்யூட்டரில் திறக்க வேண்டும்.
  2. மின்னஞ்சலிலுள்ள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன்பிறகு காட்டப்படும் 'அமைப்புகள்' பக்கத்தில் அணுகலைக் கேட்கும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துவிட்டு அனுமதி அமைப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.
  4. அனுப்பு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உதவிக்குறிப்பு: உங்கள் கோரிக்கையை அந்த நபர் ஏற்றுக்கொண்டபின் “இந்தக் கேலெண்டரைச் சேர்” என்ற இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள். கேலெண்டரைச் சேர்த்தபின் இடதுபுறத்தில் "பிற கேலெண்டர்கள்" என்பதன் கீழ் இந்தக் கேலெண்டர் காட்டப்படும். அவ்வாறு காட்டப்படவில்லை எனில் பக்கத்தை ரெஃப்ரெஷ் செய்யவும்.

பொது கேலெண்டரைச் சேர்க்க இணைப்பைப் பயன்படுத்துதல்

முக்கியம்: ஒருவரது கேலெண்டர் பொதுவானதாக இருந்தால் மட்டுமே உங்களால் இணைப்பைப் பயன்படுத்தி அவரது கேலெண்டரைச் சேர்க்க முடியும். பொது கேலெண்டர்கள் குறித்து மேலும் அறிக.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் "பிற கேலெண்டர்கள்" என்பதற்கு அடுத்துள்ள 'சேர்' Add other calendars அதன் பிறகு URL மூலம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கேலெண்டரின் முகவரியை உள்ளிடவும்.
  4. கேலெண்டரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். இடதுபுறத்தில் "பிற கேலெண்டர்கள்" என்பதன் கீழ் கேலெண்டர் காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: உங்கள் Google Calendarரில் மாற்றங்கள் காட்டப்பட 24 மணிநேரம் வரை ஆகலாம்.

வேறொருவரின் கேலெண்டரை மறைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள “பிற கேலெண்டர்கள்” என்பதற்குக் கீழ் நீங்கள் மறைக்க விரும்பும் கேலெண்டரைத் தேர்வுநீக்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் பட்டியலில் இருந்து கேலெண்டரை நிரந்தரமாக அகற்ற விரும்பவில்லை எனில் அதிலிருந்து குழுவிலகலாம். கேலெண்டருக்கான அணுகலை மீட்டெடுக்க, மீண்டும் கேலெண்டரில் குழு சேருங்கள்.

தொடர்புடைய தகவல் மூலங்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11141960371561725952
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false