பேமெண்ட்டுகளை எளிதாக்கவும், கடைசி நிமிட ரத்துசெய்தல்களைத் தடுக்கவும் Google Calendarரில் உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையில் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு வாடிக்கையாளரிடம் கேட்கலாம்.
கட்டண அப்பாயிண்ட்மெண்ட்டுகள் செயல்படும் விதம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
- பேமெண்ட்டுகளை அவசியமாக்க, Stripe கணக்கை Google Calendar உடன் இணைக்க வேண்டும்.
- அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையை உருவாக்கும்போதோ திருத்தும்போதோ அப்பாயிண்ட்மெண்ட்டுக்கான கட்டணத்தை நீங்கள் அமைக்கலாம்.
- முன்பதிவுப் பக்கத்தில் அப்பாயிண்ட்மெண்ட் நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யும்போது, செக்-அவுட்டில் Stripeபைப் பயன்படுத்தி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கான பேமெண்ட்டைச் செய்து முன்பதிவுச் செயல்முறையை அவர்கள் நிறைவுசெய்யலாம்.
முக்கியம்:
- உங்கள் Google Workspace கணக்கு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்றால் கட்டண அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவுகளுக்கான அணுகல் உங்கள் நிர்வாகியின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த அம்சம் காட்டப்படவில்லை என்றால் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
- கட்டண அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவுகள் என்பவை தகுதியான Google Workspace சந்தா உள்ள பயனர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளில் வழங்கப்படும் ஒரு பிரீமியம் அம்சம் ஆகும்.
- Workspace Individual
- Business Standard
- Business Plus
- Enterprise Standard
- Enterprise Plus
- Education Fundamentals
- Education Standard
- Education Plus
- Workspace for Nonprofits
Google Calendarரில் Stripeபை இணைத்தல்
- கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை
கிளிக் செய்து
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள பொது என்பதைக் கிளிக் செய்து
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Stripe உடன் இணைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- நிறைவுசெய்ய, Stripeபில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Calendar அமைப்புகளில் Stripeபை இணையுங்கள்
பேமெண்ட்டுகள் மற்றும் ரத்துசெய்தல் கொள்கையை அமைத்தல்
முக்கியம்:
- பேமெண்ட் முறைகளாகக் கிரெடிட் கார்டு பேமெண்ட், Apple Pay, Google Pay ஆகியவற்றை மட்டுமே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
- நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக, ரத்துசெய்தல் மற்றும் பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகளைச் செயல்படுத்துவது உங்கள் பொறுப்பாகும்.
- Google Calendarரில் அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையை உருவாக்கவும் அல்லது திருத்தவும்.
- "பேமெண்ட்டுகள் மற்றும் ரத்துசெய்தல் கொள்கை" பிரிவை விரிவாக்கவும்.
- “முன்பதிவு செய்யும்போது பேமெண்ட் செலுத்த வேண்டும்” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- அப்பாயிண்ட்மெண்ட்டிற்குத் தேவையான தொகையையும் நாணயத்தையும் டைப் செய்யவும்.
- நாணய வகைகளை Stripe வழங்கும். Stripeபில் ஏற்றுக்கொள்ளப்படும் நாணய வகைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- விரும்பினால்: உங்கள் ரத்துசெய்தல் கொள்கையைச் சேர்க்கவும்.
- உங்கள் முன்பதிவுப் படிவத்திலும் மின்னஞ்சல் நினைவூட்டல்களிலும் ரத்துசெய்தல் கொள்கை காட்டப்படும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையை உருவாக்குங்கள்
Google Calendarரில் இருந்து Stripeபை இணைப்பு நீக்குதல்
முக்கியம்: Stripeபை இணைப்பு நீக்கியபின், அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளில் பேமெண்ட் பெற முடியாது.
- Google Calendarரில், மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை
கிளிக் செய்து
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள பொது என்பதைக் கிளிக் செய்து
அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- Stripeபை இணைப்பு நீக்குவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உறுதிப்படுத்த, Stripeபை இணைப்பு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
அப்பாயிண்ட்மெண்ட்டுகளுக்கான பேமெண்ட் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
பேமெண்ட்டுகள், பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய அனைத்தையும் Stripe கையாளும். Google Calendar இவற்றைச் செய்யாது:
- கிரெடிட் கார்டு எண்கள் போன்ற பேமெண்ட் தகவல்களைச் செயலாக்குதல் அல்லது சேமித்தல்
- பிளாட்ஃபார்ம் கட்டணம் வசூலித்தல்
- பேமெண்ட் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான சிக்கல்களுக்கு உதவுதல்
ஒருங்கிணைப்பாளராகவோ வாடிக்கையாளராகவோ அப்பாயிண்ட்மெண்ட்டை நீங்கள் ரத்துசெய்தால் பணத்தைத் திரும்பப்பெறுதல் செயல்முறை தானாக நடைபெறாது.
- நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தால்: வாடிக்கையாளருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க Stripe டாஷ்போர்டுக்குச் செல்லவும்.
- வாடிக்கையாளராக இருந்தால்: ரத்துசெய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் கோரிக்கை அனுப்ப, ஒருங்கிணைப்பாளரின் ரத்துசெய்தல் கொள்கையை முதலில் பார்க்கவும். அதன் பிறகு பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொள்ளவும்.
Stripe மற்றும் Calendarருக்கு இடையே பகிரப்படும் தகவல்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
Google Calendar உடன் Stripeபை இணைத்ததும், கீழ்க்காண்பவை உட்பட அப்பாயிண்ட்மெண்ட் குறித்த சில தகவல்கள் Stripe உடன் பகிரப்படும்:
- விலை
- அப்பாயிண்ட்மெண்ட்டின் தலைப்பு
- அப்பாயிண்ட்மெண்ட் நேரம்
Stripe பயன்படுத்தும் தரவை நிர்வகிக்க, Stripe டாஷ்போர்டுக்குச் செல்லவும். Stripeபைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், Google Calendarரில் இருந்து Stripeபை இணைப்பு நீக்கவும்.