மீட்டிங்கில் நீங்கள் செலவிடும் நேரம் குறித்து அறிந்துகொள்ளுதல்

பணி/பள்ளிக் கணக்கின் மூலம் Google Calendarரைப் பயன்படுத்தினால் மீட்டிங்கில் நீங்கள் செலவிடும் நேரம் குறித்து அறிய "மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்கள்" அம்சத்தைப் பயன்படுத்தலாம். மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்ப்பதற்கான விருப்பம் காட்டப்படவில்லை எனில் உங்கள் நிர்வாகி உங்கள் நிறுவனத்திற்கு அதை முடக்கியிருக்கலாம். எனது நிர்வாகி யார்?

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்க உங்களுக்குத் தேவையானவை

  • மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களைக் கம்ப்யூட்டரில் மட்டுமே பார்க்க முடியும்.
  • மற்றவர்களின் கேலெண்டர்களை நீங்கள் நிர்வகிப்பதுடன் “பகிர்வதற்கான அணுகலை நிர்வகி” அனுமதியும் அவற்றில் உங்களுக்கு இருந்தால் அவற்றுக்கான ‘மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களை’ நீங்கள் பார்க்கலாம்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளுதல்

முக்கியம்: மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களை உங்கள் முதன்மைக் கேலெண்டரில் பார்க்கலாம். அவற்றை இவர்கள் அணுகலாம்:

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள 'கூடுதல் புள்ளிவிவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விருப்பத்திற்குரியது: மீட்டிங்கில் செலவிட்ட நேரம் குறித்த விவரங்களைப் பற்றி மேலும் அறிய, உதவி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்கள், தேதி வரம்பின்படி காட்டப்படுகின்றன. மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களை வேறொரு தேதி வரம்பின்படி பார்க்க, கேலெண்டர் காட்சியை மாற்றவும்.

ஒரு குறிப்பிட்ட நபருடன் செலவிட்ட நேரத்தைத் தெரிந்துகொள்ளுதல்

மீட்டிங்கில் ஒருவருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைப் பார்க்க, அந்தத் தொடர்பை ‘மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்கள்’ டாஷ்போர்டில் பின் செய்யவும்:

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள 'கூடுதல் புள்ளிவிவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள "மீட்டிங்கில் நீங்கள் சந்தித்தவர்கள்" என்பதற்குச் செல்லவும். பின் செய்தவர்களை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பெயரை டைப் செய்யவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: அதிகபட்சம் 10 தொடர்புகளைப் பின் செய்யலாம்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில் எந்தெந்த மீட்டிங்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிந்துகொள்ளுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள 'கூடுதல் புள்ளிவிவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் வரைபடத்தைத் தேர்வுசெய்யவும்:
    • மீட்டிங்கில் செலவிட்ட நேரம் குறித்த விவரங்கள்.
    • மீட்டிங்கில் செலவிட்ட நேரம்.
    • மீட்டிங்கில் நீங்கள் சந்தித்தவர்கள்.
  4. வரைபடத்தில், ஹைலைட் செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மீது கர்சரைக் கொண்டு செல்லவும்.
    • அதற்குத் தொடர்புடைய மீட்டிங்கும் உங்கள் கேலெண்டரில் அதே வண்ணத்தில் ஹைலைட் செய்யப்படும். அத்துடன் 'மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில்' அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்கள் - ஓர் அறிமுகம்

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில் கணக்கிடப்படும் நிகழ்வுகள்

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில் கணக்கிடப்பட, நிகழ்வானது Google Calendar மீட்டிங்காக இருக்க வேண்டும், அத்துடன்:

  • அதில் கலந்துகொள்ள "ஆம்" என நீங்கள் பதிலளித்திருக்க வேண்டும்.
  • அதில் உங்களுடன் சேர்ந்து குறைந்தபட்சம் மேலும் ஒருவர் பங்குபெற வேண்டும்.
  • உங்கள் கேலெண்டரில் அதை “மீட்டிங்கில் இருக்கிறேன்” எனக் குறிக்க வேண்டும்.
  • அதன் கால அளவு 8 மணிநேரத்திற்குள் இருக்க வேண்டும்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில் கணக்கிடப்படாத நிகழ்வுகள்

பின்வரும் சூழல்களில் ‘மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்களில்’ நிகழ்வுகள் கணக்கிடப்படாது:

  • நிகழ்வுக்கான அழைப்பு உங்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டிருந்தால்.
  • நிகழ்வில் கலந்துகொள்ள "ஆம்" என நீங்கள் பதிலளிக்காமல் இருந்தால்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம் குறித்த புள்ளிவிவரங்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன?

மீட்டிங்கில் செலவிட்ட நேரம் குறித்த விவரங்கள் - ஓர் அறிமுகம்

மீட்டிங்கில் செலவிட்ட நேரம் குறித்த விவரங்களில் இந்த மீட்டிங் வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • முழுக் கவன நேரம்: இது வேறு எந்த மீட்டிங்கும் இல்லாத நேரத்தில் திட்டமிடப்படும் முழுக் கவன நேரம்.
    • முழுக் கவன நேரத்தை அமைக்க, முழுக் கவன நேரத்தைத் திட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • 1:1: நீங்களும் வேறு ஒருவரும் மட்டும் பங்குபெறும் மீட்டிங்குகள்.
  • 3+ விருந்தினர்கள்: உங்களுடன் குறைந்தபட்சம் 2 பேர் பங்குபெறும் மீட்டிங்குகள்.
  • பதிலளிக்க வேண்டியவை: நீங்கள் இன்னும் ஏற்காத/நிராகரிக்காத மீட்டிங்குகள். "கலந்துகொள்ளக்கூடும்" என நீங்கள் பதிலளித்துள்ள மீட்டிங்குகள் இவற்றில் சேர்க்கப்படாது.
  • மீதமுள்ள நேரம்: மீட்டிங் இல்லாத வேலை நேரம் அல்லது விடுப்பில் இருக்கும் நேரம். வேலை நேரத்தை அமைத்தால் மட்டுமே இது காட்டப்படும். உங்கள் நிறுவனத்திற்கு வேலை நேரம் அமைக்கப்படாமல் இருக்கலாம்.

மீட்டிங்கில் செலவிடும் நேரம்

  • மீட்டிங்கில் செலவிடும் நேரம் சராசரியாகக் கணக்கிடப்படுகிறது. 
    • நாள், வாரம், திட்ட அட்டவணை அல்லது 5 நாட்கள் காட்சியில் உங்கள் கேலெண்டர் இருந்தால்: கடந்த 3 வாரங்களில் நீங்கள் மீட்டிங்கில் செலவழித்த நேரத்தின் அடிப்படையில் சராசரி கணக்கிடப்படும்.
    • மாதக் காட்சியில் உங்கள் கேலெண்டர் இருந்தால்: கடந்த 3 மாதங்களில் நீங்கள் மீட்டிங்கில் செலவழித்த நேரத்தின் அடிப்படையில் சராசரி கணக்கிடப்படும்.
    • நீங்கள் விடுப்பில் இருக்கும் பட்சத்தில் மீட்டிங்கில் நீங்கள் செலவிடும் நேரத்தின் சராசரி குறைவாக இருக்கக்கூடும்.
  • ஒரே நேரத்தில் 2 மீட்டிங்குகள் திட்டமிடப்பட்டிருந்தால் 1:1 மீட்டிங்கின் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். குழு மீட்டிங்கின் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 1:1 மீட்டிங்குகள் திட்டமிடப்பட்டிருந்தால் அவற்றின் மொத்த நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட கால அளவில் நீங்கள் மீட்டிங்கில் செலவிட்ட நேரம் ஒருமுறை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 
    • எடுத்துக்காட்டாக, ஒரே நேரத்தில் நிகழும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு மணிநேர மீட்டிங்குகள் இரண்டிற்கு "ஆம்" என நீங்கள் பதிலளித்தால் மீட்டிங்கில் நீங்கள் ஒரு மணிநேரம் மட்டுமே செலவிட்டதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மீட்டிங்கில் நீங்கள் சந்தித்தவர்கள்

  • குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நீங்கள் மீட்டிங்கில் அதிகமுறை சந்தித்த 5 பேர் குறித்த விவரங்கள் காட்டப்படும். 
  • முக்கியமான தொடர்புகளைப் பின் செய்யலாம். மீட்டிங்கில் அவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதிகபட்சமாக 10 தொடர்புகளைப் பின் செய்யலாம்.
  • 15 அல்லது அதற்கும் குறைவான பங்கேற்பாளர்கள் உள்ள மீட்டிங்கில் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் மட்டுமே அவருடன் செலவிட்ட நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • மீட்டிங் அழைப்பை வேறொருவர் நிராகரித்தால் மீட்டிங் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
  • மீட்டிங்கில் கலந்துகொள்ள நீங்கள் "ஆம்" எனப் பதிலளிக்கவில்லை எனில் மீட்டிங் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6057821917578137932
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false