அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணையில் Google Meet வீடியோ கான்ஃபிரன்ஸிங்கைச் சேர்த்தால் பின்வருபவை அடங்கிய அப்பாயிண்ட்மெண்ட் மின்னஞ்சல் தானாகவே அனுப்பப்படும்:
- மீட்டிங் இணைப்பு
- மீட்டிங் பின் (PIN) உள்ள ஃபோன் எண்
உதவிக்குறிப்புகள்:
- நீங்களோ உங்களுடன் அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்தவரோ அப்பாயிண்ட்மெண்ட் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை வேறொருவருக்கு அனுப்பினால் முன்பதிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மெண்ட்டை அவரால் ரத்துசெய்ய முடியும்.
- மூன்றாம் தரப்பு வீடியோ அழைப்புச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால் அப்பாயிண்ட்மெண்ட்டை உருவாக்கும்போது "இருப்பிடம் & கான்ஃபரன்ஸிங்" என்பதற்கு ஏதுமில்லை/பின்னர் குறிப்பிடுவேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்தபிறகு மீட்டிங் குறித்த தகவல்களைச் சேர்க்க முன்பதிவு செய்த நிகழ்வில் மாற்றங்களைச் செய்யலாம். Google Workspace Marketplace செருகு நிரலை நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் கேலெண்டரில் ஒற்றை முன்பதிவுப் பக்கத்தை உருவாக்கலாம். இதன் மூலம் எத்தனை அப்பாயிண்ட்மெண்ட்டுகளை வேண்டுமானாலும் பிறர் திட்டமிட அனுமதிக்கலாம். இதற்குக் கட்டணம் இல்லை. நீங்கள் தகுதியுள்ள Google Workspace அல்லது Google One திட்டத்தில் சந்தாதாரராகச் சேர்ந்திருந்தால், அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளில் பிரீமியம் அம்சங்கள் இருக்கும். அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணைகளுக்கான பிரீமியம் அம்சங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Google Calendarரில் உள்ள நிகழ்வு மூலம் வீடியோ மீட்டிங்கில் சேர்தல்
முக்கியம்: வீடியோ அழைப்பைச் செய்ய மைக்ரோஃபோன், கேமரா ஆகியவற்றுக்கான அணுகலை உலாவிக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.
- Google Calendar ஆப்ஸில் நீங்கள் சேர விரும்பும் நிகழ்வைக் கிளிக் செய்யவும்.
- Google Meet மூலம் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- திறக்கும் சாளரத்தில் இப்போது சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Meet மூலம் வீடியோ மீட்டிங்கில் சேர்தல்
முக்கியம்: வீடியோ அழைப்பைச் செய்ய மைக்ரோஃபோன், கேமரா ஆகியவற்றுக்கான அணுகலை உலாவிக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.
- வலை உலாவியில் https://meet.google.com/ என உள்ளிடவும்.
- திட்டமிட்ட நிகழ்வுகளின் பட்டியலில் இருந்து மீட்டிங்கைத் தேர்ந்தெடுக்கவும். Google Calendar மூலம் திட்டமிட்ட மீட்டிங்குகள் மட்டுமே Google Meetடில் காட்டப்படும்.
- இப்போதே சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.