முகப்புத் திரையில் Google Calendarரைச் சேர்த்தல்

வரவிருக்கும் நிகழ்வுகளையும் மீட்டிங்குகளையும் Google Calendar ஆப்ஸைத் திறக்காமல் முகப்புத் திரையில் இருந்தே பார்க்க ஒரு விட்ஜெட்டைச் சேர்க்கலாம்.

முகப்புத் திரையில் Calendar விட்ஜெட்டைச் சேர்த்தல்

முக்கியம்:: உங்கள் Android மொபைல் அல்லது டெப்லெட்டைப் பொறுத்து இந்தப் படிகளில் சில வேறுபடலாம்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் முகப்புத் திரையைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
  2. விட்ஜெட்டுகள் அதன் பிறகு Calendar என்பதைத் தட்டவும்.
  3. இந்த விட்ஜெட்டுகளில் ஏதேனும் ஒன்றைத் தொட்டுப் பிடித்திருக்கவும்:
    • கேலெண்டர் திட்ட அட்டவணை: உங்கள் பணிகளையும் வரவிருக்கும் நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
    • கேலெண்டர் மாதக் காட்சி: ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கான உங்கள் திட்ட அட்டவணையைப் பார்க்கலாம்.
  4. முகப்புத் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்திற்கு விட்ஜெட்டை இழுத்து, பின்னர் விடுவிக்கவும்.

Calendar விட்ஜெட்டின் அளவை மாற்றுதல்

முக்கியம்: Android விட்ஜெட்டில், உருவாக்கு சேர் என்ற பட்டனின் அளவை உங்களால் மாற்ற முடியாது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டின் முகப்புத் திரையில் உள்ள விட்ஜெட்டைத் தொட்டுப் பிடித்திருந்து, பின்னர் விடுவிக்கவும்.
    • விட்ஜெட்டின் பக்கங்களில் புள்ளிகள் கொண்ட அவுட்லைன் காட்டப்படும்.
  2. விட்ஜெட்டின் அளவை மாற்ற, புள்ளிகளை இழுக்கவும்.
  3. இதைச் செய்து முடித்ததும் விட்ஜெட்டுக்கு வெளியே தட்டவும்.

Calendar விட்ஜெட்டை நகர்த்துதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் விட்ஜெட்டைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
  2. முகப்புத் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்திற்கு விட்ஜெட்டை இழுத்து, பின்னர் விடுவிக்கவும்.

Calendar விட்ஜெட்டை அகற்றுதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் விட்ஜெட்டைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
  2. “அகற்று” என்பதற்கு விட்ஜெட்டை இழுத்து, பின்னர் விடுவிக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4324196760884429284
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false