Business Profile படங்கள் & வீடியோக்களுக்கான கொள்கை மற்றும் இடுகைகளுக்கான உள்ளடக்கக் கொள்கை

Business Profile உதவியுடன் உங்கள் பிசினஸ் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குச் சரியான நேரத்தில் நேரடியாகத் தெரிவிக்கலாம். நீங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து உள்ளடக்கமும் (தகவல்கள், படங்கள், வீடியோக்கள் உட்பட) வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய எங்களின் தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகள் உதவுகின்றன. 

Business Profile படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான கொள்கை

எங்களின் தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகள், நீங்கள் சமர்ப்பித்துள்ள அல்லது வெளியிட்டுள்ள படங்களுக்கும் வீடியோக்களுக்கும் பொருந்தும். படங்களும் வீடியோக்களும் கூடுதல் நிபந்தனைகளுடனும் இணங்க வேண்டும்.

நீங்கள் இடுகையிடும் படங்களும் வீடியோக்களும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுடனும் ஒழுங்குமுறைகளுடனும் இணங்குவதை உறுதிசெய்வதும் உங்களின் பொறுப்பாகும்.

Business Profile இடுகைகள் தொடர்பான உள்ளடக்கக் கொள்கை

நீங்கள் வெளியிடும் உள்ளடக்கம், பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுடனும் ஒழுங்குமுறைகளுடனும் இணங்குவதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும்.

இந்தக் கொள்கைகளில் அவ்வப்போது நாங்கள் மாற்றங்கள் செய்யக்கூடும் என்பதால் புதிய அறிவிப்புகளை இங்கே பார்த்துத் தெரிந்துகொள்ளவும். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியம் என்றால் இந்த மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம்.

ஃபோன் எண்ணைச் சேர்ப்பதைத் தவிர்த்தல்

தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, உங்கள் இடுகையில் ஃபோன் எண்ணைச் சேர்ப்பதை நாங்கள் அனுமதிப்பதில்லை. 

இதற்குப் பதிலாக, சரிபார்க்கப்பட்ட Business Profileலின் ஃபோன் எண்ணைப் பயன்படுத்தும் "இப்போதே அழை" பட்டனை இடுகையில் சேர்க்கலாம்.

ஹோட்டல் தொடர்பான இடுகைகள்

  • தொடர்புடைய தகவல்களை வாடிக்கையாளர்களுக்குச் சரியான நேரத்தில் வழங்குவதற்காக உள்ளூர் இடுகைகளை ஹோட்டல் பிசினஸ்கள் உருவாக்கலாம். 
  • “சலுகை” தொடர்பான இடுகைகளையோ டீல்கள், விளம்பரங்கள், சிறப்புச் சலுகைகள், தள்ளுபடிகள் போன்றவற்றைக் குறிப்பிடுகின்ற அல்லது அவற்றுக்கான இணைப்புகளைக் கொண்டுள்ள இடுகைகளையோ ஹோட்டல்கள் உருவாக்கக்கூடாது. தேடலில் கிடைத்த கட்டணங்களையும் விளம்பரக் கட்டணங்களையும் கண்டுபிடிக்க ஹோட்டலின் தகவல் பகுதியில் எங்கே செல்ல வேண்டும் என்ற தேவையற்ற குழப்பம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவதை இது தடுக்கிறது.

 

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2140653971745566448
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false