பிசினஸ் இணைப்பிற்கான கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

உங்கள் Business Profileலில் பிசினஸ் இணைப்புகளைப் பயன்படுத்தினால், கீழே உள்ள வழிகாட்டுதல்களையும் எங்களின் தடைசெய்யப்பட்ட மற்றும் வரம்பிடப்பட்ட உள்ளடக்கக் கொள்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.

பிசினஸ் இணைப்புகள் மற்றும் தகுதிநிலை - ஓர் அறிமுகம்

உங்கள் பிசினஸுடன் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை முன்பதிவு செய்வது, ஆன்லைனில் ஆர்டர் செய்வது போன்றவற்றைச் செய்ய வாடிக்கையாளர்களுக்கு பிசினஸ் இணைப்புகள் உதவுகின்றன. குறிப்பிட்ட பிசினஸ்கள் மட்டுமே பிசினஸ் இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, வாடிக்கையாளர்கள் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை முன்பதிவு செய்ய சலூன்கள் அனுமதிக்கலாம், ஆனால் அவை ஆன்லைன் ஆர்டர் இணைப்புகளுக்கு தகுதியற்றவை. 

உதவிக்குறிப்பு:  சில நாடுகளிலும் பிராந்தியங்களிலும் குறிப்பிட்ட சில பிசினஸ் இணைப்புகளைப் பயன்படுத்த முடியாது.

பிசினஸ்களுக்கான வழிகாட்டுதல்கள்

பிசினஸ் இணைப்புகளைச் சேர்க்க முடியவில்லை அல்லது மாற்ற முடியவில்லை

தவறான பிசினஸ் இணைப்பு

இணைப்பு தவறாக உள்ளது அல்லது இணைப்பில் தவறான எழுத்துகள் உள்ளன என்ற பிழை உங்களுக்குக் காட்டப்படலாம்.  இதற்கான சில பொதுவான காரணங்கள்:

  • இணைப்பில் இடைவெளிகள் அல்லது குறியீடுகள் இருப்பது
  • இணைப்பில் பின் சாய்வுக்கோடுகள் (\) இருப்பது
  • இணைப்பில் தவறான நெறிமுறை (உதாரணமாக, http:// நகல்) இருப்பது

இந்தப் பிழையைச் சரிசெய்ய உங்கள் இணைப்பில் இடைவெளிகள், குறியீடுகள், பின் சாய்வுக்கோடுகள் அல்லது பிற சிக்கல்கள் உள்ளனவா என்று பார்த்து அவற்றை அகற்றவும்.

சுயவிவரம் சரிபார்க்கப்படாமல் இருப்பது

நீங்கள் இணைப்பைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் பிசினஸ் சரிபார்க்கப்பட வேண்டும். உங்கள் பிசினஸ் சரிபார்க்கப்பட்டு இணைப்பில் செய்த மாற்றம் அனுமதிக்கப்பட்டால் Google Search மற்றும் Mapsஸில் அவை வெளியிடப்படும். 

ஒரு சேவை வகைக்கு, அதிகபட்ச இணைப்புகள் இருப்பது 

பிசினஸ்கள் ஒரு சேவை வகைக்கு அதிகபட்சம் 20 இணைப்புகள் வரை வைத்துக்கொள்ளலாம். உங்கள் இணைப்புகளைப் பார்க்க:

  1. உங்கள் Business Profileலுக்குச் செல்லவும். உங்கள் சுயவிவரத்தை எப்படிக் கண்டறிவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  2. முன்பதிவு, உணவு ஆர்டர், பிக்-அப் & டெலிவரி போன்ற ஏதேனும் ஒரு சேவை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் பிசினஸில் ஏற்கெனவே ஒரு சேவை வகைக்கு (எ.கா. முன்பதிவு) 20 இணைப்புகள் இருந்தால், நீங்கள் கூடுதலாக ஏதும் இணைப்புகளைச் சேர்க்க முடியாது. கூடுதலாக இணைப்புகளைச் சேர்க்க, ஏற்கெனவே இருக்கும் இணைப்புகளை அகற்ற வேண்டும்.

பிசினஸ் இணைப்பு ஏற்கெனவே இருப்பது 

நீங்கள் வழங்கிய இணைப்பு ஏற்கெனவே ஒரு பிசினஸ் அல்லது மூன்றாம் தரப்பு வழங்குநர் வழங்கிய இணைப்பின் நகலாக இருக்கிறது. வேறொரு இணைப்பைத் தேர்வுசெய்யவும்.

டொமைன் ஏற்கெனவே இருப்பது

ஒரு டொமைனுக்கு ஓர் இணைப்பை மட்டுமே நீங்கள் சேர்க்க முடியும். நீங்கள் தேர்வுசெய்யும் டொமைன் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கிறது. அதை உங்கள் பிசினஸோ மூன்றாம் தரப்பு வழங்குநரோ வழங்கியிருக்கலாம். இணைப்பைச் சேர்க்க வேறொரு டொமைனைத் தேர்ந்தெடுக்கவும்.

மூன்றாம் தரப்பு டொமைன் ஏற்கெனவே இருப்பது 

உங்கள் பிசினஸ் அல்லது மூன்றாம் தரப்பு வழங்குநர் சேர்த்த அதே டொமைனைக் கொண்ட மூன்றாம் தரப்பு வழங்குநர் இணைப்பைச் சேர்த்தால், நீங்கள் சேர்த்த புதிய இணைப்பை அகற்றுவோம். 

உதாரணமாக, நீங்கள் ஆன்லைன் ஆர்டருக்கு “website.com/123” என்ற இணைப்பைச் சேர்க்கிறீர்கள், ஆனால் ஏற்கெனவே “website.com/456” இணைப்பு இருந்தால் உங்கள் இணைப்பு அனுமதிக்கப்படாது. இது வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காகச் செய்யப்படுகிறது.

மதிப்பாய்வு செய்யக் கோருதல்

உங்கள் இணைப்பு தவறுதலாக மறுக்கப்பட்டிருந்தால் அல்லது அகற்றப்பட்டிருந்தால் மதிப்பாய்வு செய்ய எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

 

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18316447161419246248
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false