பிசினஸ் தகுதிநிலையும் உரிமைக்கான வழிகாட்டுதல்களும்

Googleளில் Business Profileலுக்கு அனைத்து பிசினஸ்களும் தகுதிபெறாது. எந்த பிசினஸாக இருந்தாலும் Business Profileலுக்குத் தகுதிபெற, கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். அத்துடன் Business Profileலுக்காக உரிமையாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் பட்டியலிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

தகுதிபெறும் பிசினஸ்கள்

Business Profileலுக்குப் பதிவுசெய்யத் தகுதிபெற, குறிப்பிட்டுள்ள பிசினஸ் நேரத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு அந்த பிசினஸ் நேரில் சேவை வழங்க வேண்டும்.

பின்வரும் இடங்களுக்கு விதிவிலக்குகள் உண்டு:

  • ATMகள், வீடியோ வாடகைக்கு வழங்கும் கியோஸ்குகள், விரைவு அஞ்சல் பெட்டிகள் ஆகியவை அனுமதிக்கப்படும். இந்த இருப்பிடங்களைச் சேர்த்தால் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தொடர்புத் தகவல்களையும் சேர்க்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் மட்டும் திறந்திருக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் மைதானம் போன்ற சீசனுக்கேற்ற பிசினஸ்களும் தகுதிபெறும். இந்த பிசினஸ்கள் ஆண்டு முழுவதும் தங்கள் இருப்பிடத்தில் நிரந்தரமான பெயர்ப் பலகையைக் காட்சிப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
  • டெலிவரி மட்டுமே வழங்கும் உணவுச் சேவைகள் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றன. விர்ச்சுவல் உணவு பிராண்டுகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தகுதிபெறாத பிசினஸ்கள்

Business Profileலுக்குத் தகுதிபெறாத பிசினஸ்களுக்கான உதாரணங்கள் இவை:

  • விடுமுறைக் கால வீடுகள், மாடல் வீடுகள், காலி அபார்ட்மெண்ட்டுகள் போன்ற வாடகை/விற்பனைக்கான சொத்துகள். எனினும் விற்பனை அல்லது குத்தகைக்குத் தரும் அலுவலகங்கள் சரிபார்ப்புக்குத் தகுதிபெறும்.
  • உங்களுக்குச் சொந்தமில்லாத அல்லது பிரதிநிதித்துவம் செய்யும் உரிமை உங்களுக்கு இல்லாத ஒரு இடத்தில் நடக்கும் தொடர் சேவை, வகுப்பு அல்லது மீட்டிங்.
  • லீட் உருவாக்கும் ஏஜெண்ட்டுகள் அல்லது நிறுவனங்கள்.
  • பிராண்டுகள், நிறுவனங்கள், கலைஞர்கள், ஆன்லைனில் மட்டும் செயல்படும் பிற பிசினஸ்கள்.
  • அஞ்சல் பெட்டி அல்லது தொலைதூர இருப்பிட அஞ்சல் பெட்டியை முகவரியாகக் கொண்டுள்ள பிசினஸ்கள்.

உரிமை

பிசினஸின் உரிமையாளர்கள்/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே அவர்களது பிசினஸ் தகவல்களை Business Profileலில் சரிபார்க்கலாம் நிர்வகிக்கலாம். உங்கள் Business Profileலின் நிர்வாக அணுகலைப் பிறருடன் பகிர விரும்பினால் நிர்வாகியைச் சேர்க்கலாம்.

சில சமயங்களில் இவற்றில் ஏதேனுமொரு காரணத்திற்காக உரிமை ரத்துசெய்யப்படக்கூடும்: 

  • சமீபத்தில் உங்கள் கணக்கில் உள்நுழையாமல் இருப்பது
  • இனி இந்தப் பக்கத்தை நிர்வகிக்கும் உரிமை உங்களுக்கோ உங்கள் ஏஜென்சிக்கோ இல்லை என பிசினஸ் உறுதிசெய்திருப்பது
  • பிசினஸ் உடனான உங்களது தொடர்பை உறுதிசெய்ய, மின்னஞ்சல் மூலம் உங்களைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் எங்களால் அது முடியாமல் இருப்பது 
  • உங்களாலோ வேறொரு சுயவிவர உரிமையாளராலோ உங்கள் சுயவிவரம் நீக்கப்பட்டிருப்பது
  • உங்கள் பிசினஸ் சுயவிவரத்தை வேறொரு Google தயாரிப்பு மூலம் நீங்கள் உருவாக்கியிருக்கும் பட்சத்தில், அந்தத் தயாரிப்பின் சுயவிவரம் இடைநீக்கப்படுதல்

இது நடந்தால், உரிமையாளர் முரண்பாடுகளைச் சரிசெய்வதற்கான கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மறு சரிபார்ப்புக்கோ புதிய பிசினஸ் உரிமையாளரிடமிருந்து உரிமையைக் கோருவதற்கோ நீங்கள் முயலலாம். 

அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான கூடுதல் வழிகாட்டுதல்கள்

தனக்குச் சொந்தமில்லாத Business Profileலுக்கான பிசினஸ் தகவல்களை நிர்வகிக்கும் எந்தவொரு தனிநபரோ நிறுவனமோ அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்று கருதப்படுவார்கள். எடுத்துக்காட்டுகள்: மூன்றாம் தரப்பு SEO/SEM நிறுவனம்; பிசினஸ் உரிமையாளரின் நண்பர்; ஆன்லைனில் ஆர்டர் வழங்குதல், திட்டமிடுதல் அல்லது முன்பதிவு செய்தல் சேவைகளை வழங்கும் நிறுவனம்; இணை நிறுவன நெட்வொர்க் வழங்குநர்.

அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்:

  • பிசினஸ் உரிமையாளரின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு Business Profileலுக்கும் உரிமை கோரக்கூடாது.
  • தவறான, தவறாக வழிநடத்தும், நடைமுறைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கக்கூடாது.
  • ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள்/வாடிக்கையாளர்களாக மாறக்கூடியவர்களிடம் தொல்லை தரக்கூடிய, தவறான அல்லது நம்பத்தகாத உத்திகளைப் பயன்படுத்தவே கூடாது.
  • சரிபார்ப்பைப் பூர்த்திசெய்ய எல்லா நேரங்களிலும் பிசினஸ் உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். சரிபார்ப்பு குறித்து மேலும் அறிக.
  • Googleளில் Business Profile என்றால் என்ன என்பதையும் அதன் தரவு எங்கே பயன்படுத்தப்படும் என்பதையும் பிசினஸின் உரிமையாளர் புரிந்துகொண்டிருப்பதை எல்லா நேரங்களிலும் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பின்வரும் இணைப்புகளை பிசினஸின் உரிமையாளருடன் பகிர வேண்டும்:
  • Business Profileலில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்னென்ன செயல்களை மேற்கொள்வார் என்பதைப் பற்றி பிசினஸ் உரிமையாளருக்கு எப்போதும் தெரியப்படுத்த வேண்டும்.
  • Googleளில் உங்கள் பிசினஸைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை எல்லா நேரங்களிலும் பின்பற்றவும். Business Profileலில் இருக்கும் ஃபோன் எண்ணும் இணையதளமும் பிசினஸின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஃபோன் எண்ணாகவும் இணையதளமாகவும் இருக்க வேண்டும், அதோடு பிசினஸின் உரிமையாளரால் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இணையதளத்தின் உள்ளடக்கம் பிசினஸின் உரிமையாளருக்குச் சொந்தமாகவும் அவரால் நிர்வகிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • நிர்வாக அணுகல் கோரிக்கைகளுக்கு எப்போதும் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும். எப்போதும் Business Profileலின் உரிமையை பிசினஸின் உரிமையாளருக்கு மாற்றுவதற்கான கோரிக்கை வந்தால் உடனே மாற்றிக்கொடுக்க வேண்டும். முடியும்போதெல்லாம், கணக்கை உருவாக்கும்படியும், Business Profileலைச் சொந்தமாக வைத்துக் கொள்ளும்படியும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நிர்வாகிகளாகச் சேர்க்கும்படியும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் பிசினஸின் உரிமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். உரிமையை எப்படி மாற்றுவது என அறிக.

இந்தக் கொள்கைகளைப் பின்பற்றத் தவறினால் Business Profile மற்றும்/அல்லது Google கணக்கு இடைநீக்கம் செய்யப்படலாம். இந்தக் கொள்கைகளை மீறியதற்காகச் சுயவிவரம் அல்லது கணக்கு இடைநீக்கப்பட்டால், அடுத்தடுத்த பங்களிப்புகள் தடுக்கப்படும்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6356428116762577504
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false