அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

புத்தகங்களைச் சேர்த்தல், ஒழுங்கமைத்தல் அல்லது பகிர்தல்

Google புத்தகங்களில் உள்ள தனிப்பட்ட லைப்ரரியில் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைச் சேகரிக்க முடியும்.

உங்கள் லைப்ரரியில் புத்தகங்களைச் சேர்த்தல்

  1. Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "பிடித்தவை", "படித்துக்கொண்டிருப்பவை" போன்ற ஒரு புத்தக அலமாரியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு ISBN/ISSN வரிசைப்படி சேர் என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் சேர்க்க விரும்பும் புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளின் ISBN/ISSNகளை உள்ளிடவும்.
  6. புத்தகங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கும் புத்தகத்தைச் சேர்த்தல்

  1. திரையின் மேற்புறத்தில் என் லைப்ரரியில் சேர் என்பதன் மீது சுட்டியை நகர்த்தவும்.
  2. புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.

லைப்ரரியில் இருந்து புத்தகங்களை அகற்றுதல்

  1. Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புத்தகம் உள்ள புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் அகற்ற விரும்பும் புத்தகம்/பத்திரிகையின் கீழே உள்ள அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் முடிவை உறுதிப்படுத்தவும்.

புத்தகங்களைப் புத்தக அலமாரிகளில் ஒழுங்குபடுத்துதல்

உங்கள் லைப்ரரியில் பல்வேறு புத்தக அலமாரிகளை வைத்துக்கொள்ளலாம். சில புத்தக அலமாரிகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தாலும் கூடுதல் அலமாரிகளை நீங்கள் சேர்க்கலாம்.

புத்தக அலமாரியை உருவாக்குக
  1. Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுறத்தில் உள்ள புதிய அலமாரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பெயரை உள்ளிடவும்.
  6. விருப்பத்திற்குட்பட்டது: இந்தப் புத்தக அலமாரியை மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் தனிப்பட்டதாக ஆக்கு என்பதைத் தேர்வு செய்யவும்.
  7. புத்தக அலமாரியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
புத்தக அலமாரியை நீக்குக

நீங்கள் உருவாக்கிய புத்தக அலமாரிகளை நீக்க முடியும். ஒரு புத்தக அலமாரியை நீக்கும்போது அதிலுள்ள புத்தகங்களும் லேபிள்களும் குறிப்புகளும் நீக்கப்படும்.

  1. Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்க விரும்பும் புத்தக அலமாரியைத் தேர்வுசெய்யவும்.
  5. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு புத்தக அலமாரியை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் முடிவை உறுதிப்படுத்தவும்.

லைப்ரரியில் உள்ள புத்தகங்களைப் பகிர்தல்

உங்கள் லைப்ரரியில் உள்ள புத்தக அலமாரிகளைப் பிறர் பார்க்கும் வகையில் அவற்றைப் பொதுவானதாக்கலாம்.

  1. Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுறத்தில் "புத்தகங்களுடன் உங்கள் Google சுயவிவரம் இணைக்கப்படவில்லை" என்று காட்டப்பட்டால் பொதுப் புத்தகங்கள் தரவை அடுத்துள்ள என் சுயவிவரத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இடதுபுறத்தில், புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.
  6. அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு பண்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. "தெரிவுநிலை" என்பதற்கு அடுத்துள்ள பொதுவானதாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7294362252476075687
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false