Google புத்தகங்களில் உள்ள தனிப்பட்ட லைப்ரரியில் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைச் சேகரிக்க முடியும்.
உங்கள் லைப்ரரியில் புத்தகங்களைச் சேர்த்தல்
- Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
- என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- "பிடித்தவை", "படித்துக்கொண்டிருப்பவை" போன்ற ஒரு புத்தக அலமாரியைத் தேர்ந்தெடுக்கவும்.
- அமைப்புகள் ISBN/ISSN வரிசைப்படி சேர் என்பதைத் தட்டவும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளின் ISBN/ISSNகளை உள்ளிடவும்.
- புத்தகங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்கெனவே தேடிக் கொண்டிருக்கும் புத்தகத்தைச் சேர்த்தல்
- திரையின் மேற்புறத்தில் என் லைப்ரரியில் சேர் என்பதன் மீது சுட்டியை நகர்த்தவும்.
- புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.
லைப்ரரியில் இருந்து புத்தகங்களை அகற்றுதல்
- Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
- என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- புத்தகம் உள்ள புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் அகற்ற விரும்பும் புத்தகம்/பத்திரிகையின் கீழே உள்ள அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் முடிவை உறுதிப்படுத்தவும்.
புத்தகங்களைப் புத்தக அலமாரிகளில் ஒழுங்குபடுத்துதல்
உங்கள் லைப்ரரியில் பல்வேறு புத்தக அலமாரிகளை வைத்துக்கொள்ளலாம். சில புத்தக அலமாரிகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தாலும் கூடுதல் அலமாரிகளை நீங்கள் சேர்க்கலாம்.
புத்தக அலமாரியை உருவாக்குக
- Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள புதிய அலமாரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- பெயரை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குட்பட்டது: இந்தப் புத்தக அலமாரியை மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால் தனிப்பட்டதாக ஆக்கு என்பதைத் தேர்வு செய்யவும்.
- புத்தக அலமாரியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
புத்தக அலமாரியை நீக்குக
நீங்கள் உருவாக்கிய புத்தக அலமாரிகளை நீக்க முடியும். ஒரு புத்தக அலமாரியை நீக்கும்போது அதிலுள்ள புத்தகங்களும் லேபிள்களும் குறிப்புகளும் நீக்கப்படும்.
- Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீக்க விரும்பும் புத்தக அலமாரியைத் தேர்வுசெய்யவும்.
- அமைப்புகள் புத்தக அலமாரியை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் முடிவை உறுதிப்படுத்தவும்.
லைப்ரரியில் உள்ள புத்தகங்களைப் பகிர்தல்
உங்கள் லைப்ரரியில் உள்ள புத்தக அலமாரிகளைப் பிறர் பார்க்கும் வகையில் அவற்றைப் பொதுவானதாக்கலாம்.
- Google புத்தகங்கள் என்பதற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
- என் லைப்ரரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் "புத்தகங்களுடன் உங்கள் Google சுயவிவரம் இணைக்கப்படவில்லை" என்று காட்டப்பட்டால் பொதுப் புத்தகங்கள் தரவை அடுத்துள்ள என் சுயவிவரத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில், புத்தக அலமாரியைக் கிளிக் செய்யவும்.
- அமைப்புகள் பண்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- "தெரிவுநிலை" என்பதற்கு அடுத்துள்ள பொதுவானதாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.