முக்கியம்: பெரியவர்களுக்கான வலைப்பதிவுகளில் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை. Blogger உள்ளடக்கக் கொள்கையையும் சேவை விதிமுறைகளையும் பற்றி மேலும் அறிக.
Blogger மூலம் பணம் ஈட்ட உங்கள் பக்கங்களில் AdSenseஸையும் மற்ற விளம்பரங்களையும் காட்டலாம்.
AdSenseஸில் பதிவு செய்தல்
முக்கியம்: திசைதிருப்பு என்பதைக் கிளிக் செய்வதற்கு முன் படிகள் அனைத்தையும் நிறைவுசெய்துள்ளதை உறுதிசெய்து கொள்ளவும்.
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுறத்திலுள்ள மெனுவில் வருவாய்
AdSense கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- AdSenseஸுக்குத் தற்போது உங்கள் வலைப்பதிவு தகுதிபெறவில்லை என்றால் எப்படித் தகுதி பெறுவது என்பதைப் பற்றி அறிக.
- உங்கள் Blogger கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள Google மின்னஞ்சலைத் தேர்ந்தெடுக்கவும்.
- AdSense படிவத்தை நிரப்பி கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கட்டண விவரங்களை உள்ளிட்டு ஃபோன் எண்ணைச் சரிபார்க்கவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- செயலாக்கத்தை நிறைவுசெய்ய சிஸ்டத்தால் தானாகவே Blogger தளத்திற்கு அனுப்பப்படுவீர்கள். அவ்வாறு அனுப்பப்படவில்லை எனில் திசைதிருப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: படிகளை நிறைவுசெய்வதற்குள் இடையூறு ஏற்பட்டால் 1-5 படிகளை மீண்டும் செய்யவும். சில நாட்களுக்கும் மேலாக "கணக்கை அமைத்து கொண்டிருக்கிறோம்" என AdSense முகப்புப்பக்கத்தில் தோன்றினால் இணைத்தலை ஏற்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் இடுகைகளுக்கு இடையில் விளம்பரங்களைக் காட்டுதல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- விளம்பரங்களைக் காட்ட விரும்பும் வலைப்பதிவை மேல் இடதுபுறத்தில் தேர்வுசெய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் டெம்ப்ளேட்டின் அடிப்படையில்:
- "வலைப்பதிவு இடுகைகளில்" "பக்கத்தின் உள்ளடக்கம்" என்பதற்குக் கீழ் உள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- "வலைப்பதிவு இடுகைகளில்" "முதன்மை" என்பதற்குக் கீழ் உள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இடுகைகளுக்கு இடையே விளம்பரங்களைக் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
- விளம்பர வடிவம், வண்ணங்கள், எத்தனை முறை விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும் ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாற்றத்தைச் சேமிக்க கீழ் வலதுபுறத்தில் உள்ள 'சேமி'
என்பதைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகளில் விளம்பரங்களைக் காட்டுதல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- விளம்பரங்களைக் காட்ட விரும்பும் வலைப்பதிவை மேல் இடதுபுறத்தில் தேர்வுசெய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- "பக்கப்பட்டி" என்பதற்குக் கீழ் உள்ள கேட்ஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- AdSense என்பதற்கு அடுத்துள்ள 'சேர்'
என்பதைக் கிளிக் செய்யவும்.
- AdSenseஸை உள்ளமைத்து சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாற்றத்தைச் சேமிக்க கீழ் வலதுபுறத்தில் உள்ள 'சேமி'
என்பதைக் கிளிக் செய்யவும்.
பிற விளம்பரச் சேவைகள் மூலம் விளம்பரங்களைக் காட்டுதல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- விளம்பரங்களைக் காட்ட விரும்பும் வலைப்பதிவை மேல் இடதுபுறத்தில் தேர்வுசெய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- விளம்பரங்களைக் காட்ட விரும்பும் இடத்தைச் சுட்டிக்காட்டி கேட்ஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பாப்-அப் சாளரத்தில் "HTML/JavaScript" என்பதற்கு அடுத்துள்ள 'சேர்'
என்பதைக் கிளிக் செய்யவும்.
- தலைப்பை உள்ளிடவும் (விரும்பினால்).
- விளம்பரச் சேவை இணையதளத்திலிருந்து குறியீட்டை நகலெடுத்து "உள்ளடக்கப்" பிரிவில் ஒட்டவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாற்றத்தைச் சேமிக்க கீழ் வலதுபுறத்தில் உள்ள 'சேமி'
என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Bloggerரின் வருவாய் அறிக்கையை மதிப்பாய்வு செய்தல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- மதிப்பாய்வு செய்ய மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுறத்திலுள்ள மெனுவில் வருவாய்
வருவாயைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் அறிக்கையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் தெரிந்துகொள்ள AdSense சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தவும்.
AdSense இயங்கவில்லை எனில் என்ன செய்வது?
முக்கியம்: உங்கள் கணக்கு இன்னமும் செயல்பாட்டில் உள்ளதா என்பதைப் பார்க்க AdSenseஸுக்குச் செல்லவும்.
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- AdSense கேட்ஜெட்டின் கீழ் திருத்து
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் வலைப்பதிவில் உள்ள ஒவ்வொரு AdSense கேட்ஜெட்டுக்கும் நான்காவது படியை மீண்டும் செய்யவும்.
- "வலைப்பதிவு இடுகைகள்" கேட்ஜெட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள திருத்து
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மாற்றத்தைச் சேமிக்க கீழ் வலதுபுறத்தில் உள்ள 'சேமி'
என்பதைக் கிளிக் செய்யவும்.
ads.txt கோப்பினை அமைத்தல்
உங்கள் வலைப்பதிவில் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் மூலமாக லாபம் பெறுதலை இயக்கி இருந்தாலோ நீங்களே நேரடியாக AdSenseஸை ஒருங்கிணைத்திருந்தாலோ ads.txt கோப்பின் உள்ளடக்கத்தை நீங்களே அமைக்க வேண்டியதிருக்கும். AdSenseஸுக்கான ads.txt குறித்து மேலும் அறிக.
- Bloggerரில் உள்நுழையவும்.
- நீங்கள் அமைக்க விரும்பும் வலைப்பதிவை மேல் இடதுபுறத்தில் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "லாபம் பெறுதல்" என்பதற்குக் கீழ் உள்ள பிரத்தியேக ads.txt அமைப்பை இயக்கு என்பதை இயக்கவும்.
- பிரத்தியேக ads.txt என்பதைக் கிளிக் செய்யவும்.
- லாபம் பெறுதலுக்கான உங்களது மூன்றாம் தரப்பு வழங்குநரிடம் உள்ள அமைப்புகளை நகலெடுத்து உரைப் பெட்டிக்குள் ஒட்டவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.