Android சாதனத்தில் டார்க் அல்லது வண்ணப் பயன்முறைக்கு மாறுதல்

உங்கள் Android சாதனம் மற்றும் மொபைலின் சில திரைகளுக்கும் ஆப்ஸுக்கும் வண்ணத் திட்டத்தை மாற்றலாம்.

முக்கியமானது:

இந்தப் படிகளில் சிலவற்றைப் பின்பற்ற நீங்கள் திரையைத் தொட வேண்டும்.

டார்க் தீமினை இயக்குதல்/முடக்குதல்

  1. உங்கள் மொபைலில், அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. டிஸ்ப்ளே என்பதைத் தட்டவும்.
  3. டார்க் தீம் என்பதை இயக்கவும்/முடக்கவும்.
உதவிக்குறிப்பு: டார்க் தீமினை அமைப்பது திரையில் உள்ளவற்றைப் படிப்பதை எளிதாக்கும் மற்றும் சில திரைகளில் பேட்டரியைச் சேமிக்கும்.
டார்க் தீம் தானாக இயக்கப்படுவதை நிறுத்துதல்
டார்க் தீம் இயக்கப்படாமல் இருந்தும் டார்க் வண்ணத் திட்டம் காட்டப்பட்டால் பேட்டரி சேமிப்பான் இயக்கப்பட்டிருக்கலாம். பேட்டரி சேமிப்பான் இயக்கத்தில் இருந்தால் டார்க் தீம் தானாக இயக்கப்படக்கூடும். சில மொபைல்களில், பேட்டரி சார்ஜ் குறிப்பிட்ட சதவீதத்திற்கு (உதாரணமாக, 15%) கீழே குறையும்போது பேட்டரி சேமிப்பான் தானாகவே இயக்கப்படும்.

பேட்டரி சேமிப்பானை முடக்குதல்

  1. உங்கள் மொபைலில், அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பேட்டரி அதன் பிறகு பேட்டரி சேமிப்பான் அதன் பிறகு இப்போதே முடக்கு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: லைட் தீமில் பேட்டரி சேமிப்பானைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் லைட் தீமைப் பயன்படுத்த விரும்பினால் பேட்டரி சேமிப்பானை முடக்க வேண்டும்.

பேட்டரி சேமிப்பான் தானாக இயக்கப்படுவதை நிறுத்துதல்
  1. உங்கள் மொபைலில், அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பேட்டரி அதன் பிறகு பேட்டரி சேமிப்பான் அதன் பிறகு திட்டமிடு என்பதைத் தட்டவும்.
  3. திட்டமிட வேண்டாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.

டார்க் தீமில் காட்டப்படும் ஆப்ஸ் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

அனைத்து ஆப்ஸுக்கும் டார்க் தீம் கிடைக்காது.

முக்கியமானது: உங்கள் சாதனத்தில் டார்க் தீமை இயக்கினால் அல்லது பேட்டரி சேமிப்பான் இயக்கத்தில் இருந்தால் பல ஆப்ஸ் டார்க் தீமையே பயன்படுத்தும். 

ஆப்ஸின் தீம் அமைப்புகளைச் சரிபார்க்க:

  • டார்க் தீம் இயக்கத்தில் இருந்தாலும் ஆப்ஸ் லைட்டாக இருந்தால் டார்க் தீம் அம்சத்தை ஆப்ஸ் வழங்காமல் இருக்கலாம்.
  • லைட் தீம் இயக்கத்தில் இருந்தாலும் ஆப்ஸ் டார்க்காக இருந்தால் இவை காரணமாக இருக்கலாம்:
    • ஆப்ஸுக்கு டார்க் தீம் இயக்கப்பட்டுள்ளது, ஆனால் முழுச் சாதனத்திற்கும் இல்லை. இதைச் சரிபார்க்க, ஆப்ஸின் அமைப்புகளைத் திறந்து, "தீம்" அல்லது "டிஸ்ப்ளே" விருப்பங்களைக் கண்டறியவும். ஆப்ஸைப் பொறுத்து விருப்பங்கள் மாறுபடும்.
    • ஆப்ஸ் டார்க் வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது. அதை மாற்ற முடியாது.

வண்ணத் திட்டத்தை மாற்றுதல்

வண்ணத் திட்டத்தை மாற்றும்போது, வால்பேப்பரையும் ஸ்டைலையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். மேலும் உங்களுக்குப் பிடித்தமான வண்ணத் திட்டத்திற்கு ஏற்ப பக்கங்களின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
  1. உங்கள் மொபைலில், அமைப்புகள் ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. வால்பேப்பர் & ஸ்டைல் என்பதைத் தட்டவும்.
    • உங்கள் வால்பேப்பரின் வண்ணத் தட்டை மாற்ற, வால்பேப்பர் வண்ணங்கள் என்பதைத் தட்டி அதன் பிறகு உங்களுக்குப் பிடித்தமான வண்ணத் தட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் பக்கங்களின் வண்ணத்தை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்கு மாற்ற, அடிப்படை வண்ணங்கள் என்பதைத் தட்டி அதன் பிறகு உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

இந்த ஆப்ஸில் டார்க் தீமை எப்படிப் பயன்படுத்துவது என அறிக:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11760795856776402867
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false