Android சாதனத்தில் திரைப் பூட்டை அமைத்தல்

அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் Android மொபைலையோ டேப்லெட்டையோ பாதுகாக்க, திரைப் பூட்டை அமைக்கலாம். சாதனத்தை இயக்கும் அல்லது திரையை ஆன் செய்யும் ஒவ்வொரு முறையும் பின், பேட்டர்ன் அல்லது கடவுச்சொல் மூலம் சாதனத்தை அன்லாக் செய்யும்படி உங்களிடம் கேட்கப்படும். சில சாதனங்களில் உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி அன்லாக் செய்யலாம்.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 10 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிக.

திரைப் பூட்டை அமைத்தல் அல்லது மாற்றுதல்

முக்கியமானது:  திரைப் பூட்டுடன் உங்கள் தானியங்கு மற்றும் நேரடிக் காப்புப் பிரதிகள் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, பின் (PIN), பேட்டர்ன் அல்லது கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். உங்கள் மொபைலில் தரவைக் காப்புப் பிரதி எடுப்பதோ மீட்டெடுப்பதோ எப்படி என்பதை அறிக.

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  3. திரைப் பூட்டின் வகையைத் தேர்ந்தெடுக்க, திரைப் பூட்டு என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் ஏற்கெனவே திரைப் பூட்டை அமைத்திருந்தால்: வேறு பூட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உங்கள் பின், பேட்டர்ன், கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் திரைப் பூட்டு விருப்பத்தைத் தட்டவும்.
  5.  திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

திரைப் பூட்டு விருப்பங்கள்

பூட்டு வேண்டாம்
  • எதுவுமில்லை: உங்கள் மொபைல் அன்லாக் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். இது எந்தப் பாதுகாப்பையும் தராது. ஆனால் உங்கள் முகப்புத் திரைக்கு விரைவாகச் செல்லலாம்.
  • ஸ்வைப் செய்தல்: உங்கள் திரை முழுதும் விரல்களால் ஸ்வைப் செய்ய வேண்டும். இது எந்தப் பாதுகாப்பையும் தராது. ஆனால் உங்கள் முகப்புத் திரைக்கு விரைவாகச் செல்லலாம்.
நிலையான பூட்டுகள்
  • பின்: 4 அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை உள்ளிடவும். எனினும், கூடுதல் பாதுகாப்பிற்கு 6 இலக்கப் பின் பரிந்துரைக்கப்படுகிறது. நீண்ட பின்கள் மிகவும் பாதுகாப்பானவையாக இருக்கும்.
  • பேட்டர்ன்: உங்கள் விரல் மூலம் எளிய பேட்டர்னை வரையவும்.
  • கடவுச்சொல்: 4 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளையோ எண்களையோ உள்ளிடவும். வலிமையான கடவுச்சொல் என்பது மிகவும் பாதுகாப்பான திரைப் பூட்டு விருப்பமாகும்.

அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சம் குறித்த அறிமுகம்

அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சத்துடன் உங்கள் மொபைலை அன்லாக் செய்ய Enter பட்டனைத் தட்ட வேண்டிய அவசியமில்லை. அதை இயக்க, குறைந்தது 6 அல்லது அதற்கும் அதிக இலக்கங்களைக் கொண்ட பின் குறியீட்டைத் தேர்வுசெய்ய வேண்டும். அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பிற்கு, 6 இலக்கங்களுக்கும் அதிகமாக உள்ள பின் குறியீடுகளின் நீளம் திரையில் காட்டப்படாது.

உங்கள் பின் குறியீடு 6 இலக்கங்களுக்கும் அதிகமாக இருக்கும் வரை அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சத்தை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

முக்கியம்: அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சத்திற்கு ஒப்புதல் அளித்தால், உங்கள் சாதனத்தின் பாதுகாப்பை அது குறைக்கக்கூடும்.

அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சத்தைப் பாதுகாப்பு அமைப்புகளுக்குச் சென்று அமைக்கலாம்.

  1. உங்கள் மொபைலில் அமைப்புகளுக்குச் செல்லவும்.
  2. பாதுகாப்பு அதன் பிறகு திரைப் பூட்டு என்பதைத் தட்டவும்.
  3. அன்லாக்கைத் தானாக உறுதிப்படுத்தும் அம்சத்தை இயக்கவும் அல்லது முடக்கவும்.

திரைப் பூட்டை முடக்குதல்

முக்கியம்:  திரைப் பூட்டை முடக்குவதால் உங்கள் சாதனத்திற்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது. 

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் ஏற்கெனவே பூட்டை அமைத்திருந்தால், உங்கள் பின், பேட்டர்ன், கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  4. தற்போதைய திரைப் பூட்டு முறையை அகற்ற, ஏதுமில்லை என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9973031422622367991
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false