Find My Deviceஸிற்கான ஏற்கக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை

Android சாதனங்களின் திரளாக்கப்பட்ட நெட்வொர்க்கின் ஆற்றலைப் பயன்படுத்தி டிஜிட்டல் சாதனங்கள் (மொபைல்கள், அணியக்கூடிய சாதனங்கள், கேட்கக்கூடிய சாதனங்கள்) மற்றும் உண்மையான சாதனங்கள் (வாலட், சாவிகள், பைக்குகள்) அனைத்தையும் பயனர்கள் பாதுகாப்பாகக் கண்டறிய உதவுவதையே Googleளின் Find My Device நெட்வொர்க் நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் தயாரிப்பைப் பொறுப்புடனும், பாதுகாப்புடனும், சட்டத்திற்குட்பட்டும் பயனர்கள் பயன்படுத்தவும் கையாளவும் வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள கொள்கைகள் பயனர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், நிஜ உலகத்தில் ஆபத்தை விளைவிக்கும் அல்லது தீங்குவிளைவிக்கும் வகையில் தயாரிப்பு பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அவை உதவுகின்றன.

Googleன் Find My Deviceஸை நீங்கள் இதற்குப் பயன்படுத்தக்கூடாது:

  • உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் அல்லது சொந்தமில்லாத உடைமையை கண்காணிப்பது.
  • ஓரிடத்தில் ஒரு நபர் இருப்பதையும் இல்லாதிருப்பதையும் அவரின் அனுமதியின்றியும் அவருக்குத் தெரியாமலும் கண்டறிதல்.
  • இல்லையெனில், மற்றொரு நபரின் அனுமதியின்றியும் அவருக்குத் தெரியாமலும் டிராக்கர் டேகை பொருத்தி அவர் குறித்த தகவல்களைப் பெற முயலுதல்.

Find My Deviceஸைப் பயன்படுத்தி தனிநபர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களைக் கண்காணிப்பது அல்லது அச்சுறுத்துவது சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றமாக இருக்கக்கூடும். இணக்கமான டிராக்கர்கள், பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களுக்கு உங்கள் Google கணக்கு மின்னஞ்சல் முகவரியின் மறைக்கப்பட்ட பகுதியைக் காட்டலாம். சட்ட அமலாக்கத்துறையினர் தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை உங்களிடம் கேட்கக்கூடும். பயனர் தகவல்களைக் கேட்கும் அரசாங்கக் கோரிக்கைகளை Google எப்படிக் கையாள்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

Find My Device நெட்வொர்க்கை மாற்றப்பட்ட/சேதமடைந்த கண்காணிப்புச் சாதனங்களுடன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. கண்காணிப்புச் சாதனத்தின் ஸ்பீக்கரையோ பாதுகாப்பு அம்சங்களையோ அகற்றுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உங்கள் கணக்கிற்கு எதிராக Google நடவடிக்கை எடுக்கக்கூடும்.

மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக Find My Device நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், Find My Device அல்லது உங்கள் Google கணக்கிற்கான அணுகலை முடக்குவதற்கு Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11939566655013255647
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false