Find My Device உங்கள் தரவைப் பாதுகாக்கும் விதம்

Find My Device மூலம் தொலைந்த உங்கள் Android சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியலாம், அதைப் பாதுகாக்கலாம் மற்றும் அதிலுள்ள தரவை அழிக்கலாம். உங்கள் சாதனம் ஆன்லைனில் இருக்கும்போது அதைக் கண்டறிய உதவுவதோடு ஆஃப்லைனில் இருந்தாலும் உங்கள் சாதனம் மற்றும் துணைக்கருவிகளைக் கண்டறிய உதவும் ஆஃப்லைன் கண்டறிதல் அம்சங்களும் Find My Deviceஸில் உள்ளன.

இயல்பாக, உங்கள் Android சாதனம் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளில் சேமிக்கிறது மற்றும் Find My Device நெட்வொர்க்கிலும் பங்கேற்கிறது. உங்களுக்கும் பிற Android பயனர்களுக்கும் தொலைந்த தங்களின் சாதனங்களைக் கண்டறிய முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்தும் Android சாதனங்களின் ஒரு திரளாக்கப்பட்ட நெட்வொர்க்கே Find My Device நெட்வொர்க்காகும்.

உங்கள் சாதனத்தில் இந்த ஆஃப்லைனில் கண்டறிதல் அம்சங்கள் இயக்கப்பட்டிருந்தால் உங்கள் சாதனத்தைக் கண்டறிவதற்கு உதவ சாதனத்தின் தற்போதைய இருப்பிடம் (ஆன்லைனில் இருந்தால்), உங்கள் சாதனம் கடைசியாக ஆன்லைனில் இருந்தபோது என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட இருப்பிடம் அல்லது Find My Device நெட்வொர்க்கில் பிற Android சாதனங்களிலிருந்து திரளாக்கப்பட்டு, என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட இருப்பிடம் போன்ற கிடைக்கக்கூடிய சிறந்த தகவல்களை Find My Device பயன்படுத்தும்.

கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இந்தச் சேவைகளை வழங்கும், பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கங்களுக்காக Find My Device தரவைச் சேகரித்துச் செயலாக்குகிறது. Find My Device மூலம் செயலாக்கப்படும் தரவு Google தனியுரிமைக் கொள்கையின்படி கையாளப்படும்.

ஆன்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிதல்

ஆன்லைனில் உள்ள சாதனத்தைக் கண்டறிய உதவ Find My Deviceஸைப் பயன்படுத்தும்போது Find My Device தொலைந்த உங்கள் Android சாதனத்துடன் தொடர்புகொண்டு அதன் தற்போதைய இருப்பிடத்தையும் சாதனத்தின் பேட்டரி நிலை, அது இணைக்கப்பட்டுள்ள வைஃபை நெட்வொர்க், அதன் வைஃபை மற்றும் செல்லுலார் சிக்னலின் வலிமை போன்ற பிற தகவல்களையும் சேகரிக்கும். தொலைந்த சாதனத்தைக் கண்டறிய உங்களுக்கு உதவ Find My Device இந்தத் தகவல்களை ஆப்ஸில் காட்டும்.

உங்கள் துணைக்கருவி தற்போது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் இருப்பிடத்தைக் காட்டுவதன் மூலம் உங்கள் துணைக்கருவிகளைக் கண்டறிய உதவ இணைப்பு நிகழ்வுகள் (உதாரணமாக, சிறிய ஹெட்ஃபோன்கள் கடைசியாக மொபைலுடன் எப்போது இணைந்திருந்தது) போன்ற தகவல்களையும் Find My Device சேகரிக்கிறது.

உங்கள் Google கணக்குடன் Android சாதனங்களையும் துணைக்கருவிகளையும் இணைக்கும் அடையாளங்காட்டிகளையும் உங்கள் சாதனத்தைப் பூட்டவோ அதிலுள்ள தரவை அழிக்கவோ உங்களின் Google கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா, அந்தச் செயல்பாடு நிறைவடைந்ததா என்பது போன்ற Find My Device மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் Find My Device சேகரிக்கிறது.

ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிதல்

தொலைந்த உங்கள் சாதனம் எப்போதும் ஆன்லைனில் இருக்காது. ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிய உதவ Android சாதனம் மற்றும் Find My Device நெட்வொர்க்கில் பங்கேற்கும் மற்றவர்கள் அனுப்பிய என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இருப்பிடத் தகவல்களையும் Find My Device சேகரிக்கிறது, சேமிக்கிறது மற்றும் பயன்படுத்துகிறது.

Android சாதனங்களின் திரளாக்கப்பட்ட நெட்வொர்க்கின் ஆற்றலைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் உள்ள சாதனங்கள் (Android மொபைல்கள், டேப்லெட்கள் உட்பட), துரித இணைப்புத் துணைக்கருவிகள் (இணக்கத்தன்மையுள்ள சிறிய ஹெட்ஃபோன்கள் போன்றவை), உண்மையான சாதனங்களுடன் (உங்கள் வாலட், சாவிகள், பைக் போன்றவை) நீங்கள் இணைக்கக்கூடிய டிராக்கர் டேகுகள் ஆகியவற்றைக் கண்டறிய Find My Device நெட்வொர்க் உங்களுக்கு உதவுகிறது.

நெட்வொர்க்கில் பங்கேற்கும் அனைவரின் தனியுரிமையையும் பாதுகாக்க உதவும் வகையில், முழுமையான என்க்ரிப்ஷன் உட்பட மேம்பட்ட பாதுகாப்புகளுடன் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது.

திராளக்கம் எப்படிச் செயல்படுகிறது?

Find My Device நெட்வொர்க்கில் பங்கேற்கும் Android சாதனங்கள் அருகிலுள்ளவற்றை ஸ்கேன் செய்ய புளூடூத்தைப் பயன்படுத்துகின்றன. அவை உங்கள் சாதனங்களைக் கண்டறிந்தால் அவற்றைக் கண்டறிந்த இருப்பிடத்தை Find My Deviceஸுக்குப் பாதுகாப்பாக அனுப்பும். தொலைந்த சாதனங்களைக் கண்டறிய பிறருக்கு உதவ, உங்கள் Android சாதனம் அவற்றை அருகில் கண்டறியும்போது இதே வழிமுறையையே பின்பற்றும்.

முழுமையான என்க்ரிப்ஷன்

Android சாதனத்தின் பின்னையோ பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ உள்ளிட்டு நீங்கள் மட்டுமே அணுகக்கூடிய தனித்துவமான குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் சாதனங்களில் இருப்பிடங்களை Find My Device நெட்வொர்க் என்க்ரிப்ஷன் செய்கிறது.

உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாக்க Google Password Manager பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் இந்த முழுமையான என்க்ரிப்ஷன், உங்கள் சாதனங்களின் இருப்பிடங்கள் Googleளிடமிருந்து தனிப்பட்டவை என்பதை உறுதிசெய்கிறது. உங்களாலும் Find My Deviceஸில் நீங்கள் சாதனங்களைப் பகிர்ந்து கொண்டவர்களாலும் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும்.

முக்கியம்: உங்கள் Android சாதனத்தில் பின்னையோ பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ நீங்கள் அமைக்கவில்லை என்றால் Find My Device நெட்வொர்க்கின் பலன்களைப் பெற அதில் ஒன்றை அமைக்க வேண்டும்.

நெட்வொர்க் மூலம் செயலாக்கப்படும் தரவு

முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ள இருப்பிடங்களுடன் தற்காலிகச் சாதன அடையாளங்காட்டிகள், உங்கள் சாதனம் ஒன்றைக் கண்டறியும்போது தொடர்புடைய நேரமுத்திரைகள், தொலைந்த உங்கள் சாதனங்களின் இருப்பிடத்தை நீங்கள் கேட்கும்போது தொடர்புடைய நேரமுத்திரைகள், உங்கள் சாதனத்துடன் இணைத்துள்ள/மற்றவர்களுடன் பகிர்ந்துள்ள துரித இணைப்புத் துணைக்கருவிகள் பற்றிய தகவல்கள் போன்ற தரவை Find My Device நெட்வொர்க் செயலாக்குகிறது. அம்சங்களைச் செயல்படுத்துவது, சாதனம் தொலைந்தால் அதன் இருப்பிடத்தைச் சரியான நபருக்கு வழங்குவது, தனியுரிமை மற்றும் தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்புகளை (கீழே விவரிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அம்சம் போன்றவை) வழங்குவது போன்ற காரணங்களுக்காக இந்தத் தரவை Find My Device நெட்வொர்க் பயன்படுத்துகிறது. முக்கியமாக, கண்டறியப்பட்ட சாதனத்தின் இருப்பிடத்தை உங்கள் Android சாதனம் பகிரும்போது Googleளால் உங்களை அடையாளம் காண முடியாது.

தொலைந்த சாதனங்களைக் கண்டறிய Find My Device நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் தனிநபர்கள் தங்கள் சாதனம் கண்டறியப்பட்ட இருப்பிடம், சாதனம் கடைசியாகக் கண்டறியப்பட்ட தோராயமான நேரம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தகவலையும் நெட்வொர்க்கிடமிருந்து பெற மாட்டார்கள்.

நெட்வொர்க்கில் உங்கள் சாதனம் பங்கேற்கும் விதத்தைக் கட்டுப்படுத்துதல்

Find My Device அமைப்புகளில் “ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிதல்” என்பதற்குச் சென்று பின்வரும் விருப்பங்களிலிருந்து தேர்வுசெய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் Android சாதனம் நெட்வொர்க்கில் எப்படிப் பங்கேற்கிறது என்பதைக் கட்டுப்படுத்தலாம்:

This image shows Find my device screen on your deviceThis images shows the options when you tap the find your offline devices page on your device

“முடக்கப்பட்டுள்ளது”

Find My Device நெட்வொர்க்கில் பங்கேற்க வேண்டாம் என நீங்கள் விரும்பினாலோ என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளுடன் சேமிப்பதன் மூலம் ஆஃப்லைனில் இருக்கும்போது உங்கள் சொந்தச் சாதனங்களைக் கண்டறியும் திறன் இருந்தாலோ இந்த ஆஃப்லைனில் கண்டறியும் அம்சங்களை முழுமையாக முடக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்.

ஆஃப்லைனில் கண்டறிதல் அம்சங்களை நீங்கள் முடக்கினாலும் கூட உங்கள் சாதனம் அல்லது இணைக்கப்பட்ட துரித இணைப்புத் துணைக்கருவிகள் ஆன்லைனில் இருக்கும்போது அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறியவும் அவற்றைப் பாதுகாக்கவும் அவற்றிலுள்ள தரவை அழிக்கவும் Find My Deviceஸைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். Find My Deviceஸை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை எனில், அமைப்புகள் அதன் பிறகு Google அதன் பிறகு அனைத்துச் சேவைகளும் (பிரிவுகள் இருந்தால்) அதன் பிறகு Find My Device அதன் பிறகு என்பதற்குச் சென்று “Find My Deviceஸைப் பயன்படுத்து” எனும் அமைப்பு முடக்கத்தில் உள்ளதா எனப் பார்த்து, அது முடக்கத்தில் இல்லையெனில் அதை முடக்கவும்.

“நெட்வொர்க் இல்லாமல் பயன்படுத்துதல்”

Find My Device நெட்வொர்க்கில் பங்கேற்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், உங்கள் Android சாதனம், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய ஹெட்ஃபோன்கள் போன்ற துரித இணைப்புத் துணைக்கருவிகள் உட்பட, உங்களின் சில சாதனங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது அவற்றின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளில் சேமிப்பதன் மூலம் உங்களால் அவற்றைத் தொடர்ந்து கண்டறிய முடியும்.

இந்த விருப்பத்தின் மூலம், உங்கள் வாலட், சாவிகள், பைக் போன்றவற்றைக் கண்டறிய டிராக்கர் டேகுகளைப் பயன்படுத்த முடியாது. மேலும் உங்கள் சாதனங்களைக் கண்டறிய உதவ, Android சாதனங்கள் பங்கேற்கும் ஒரு பரந்த நெட்வொர்க்கை நீங்கள் சார்ந்திருக்க முடியாது. இருப்பினும், உங்கள் Android சாதனம் அதன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணைக்கருவிகளின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இருப்பிடத்தை Find My Deviceஸுக்கு அவ்வப்போது அனுப்புகிறது. உங்கள் சாதனம் அல்லது துணைக்கருவிக்கான மிகச் சமீபத்திய என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இருப்பிடம் மட்டும் சேமிக்கப்படும்.

முக்கியம்:

  • உங்கள் Android சாதனத்தில் பின்னையோ பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ அமைத்திருந்தால் தனித்துவமான குறியீட்டைப் பயன்படுத்தி சமீபத்திய இருப்பிடத் தகவல்கள் என்க்ரிப்ஷன் செய்யப்படும். உங்கள் Android சாதனத்தின் பின்னையோ பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அதை நீங்கள் அணுகலாம்.
  • உங்கள் Android சாதனத்தில் பின்னையோ, பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ அமைக்கவில்லை என்றாலும் இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். தனித்துவமான குறியீட்டைப் பயன்படுத்தி சமீபத்திய இருப்பிடத் தகவல்கள் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டுள்ளது. அதை உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை டைப் செய்து மட்டுமே உங்களால் அணுக முடியும்.
  • உங்கள் சாதனம் Android 8.0 பதிப்பிலோ அதற்கு முந்தைய பதிப்புகளிலோ இயங்கினால், பரந்த திரளாக்கப்பட்ட Find My Device நெட்வொர்க்கில் அது பங்கேற்க முடியாது. ஆனால் உங்கள் சாதனம் அதனுடைய மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள துணைக்கருவிகளின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளுடன் தொடர்ந்து சேமிக்கும். என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடத்தைச் சேமிப்பதன் மூலம் தொலைந்த சாதனங்களை நீங்கள் தேடும்போது அவை ஆஃப்லைனில் இருந்தாலும் அவற்றைக் கண்டறிய Find My Device உங்களுக்கு உதவும். Android 8.0 பதிப்பிலும் அதற்கு முந்தைய பதிப்புகளிலும், அமைப்புகள் அதன் பிறகு Google அதன் பிறகு அனைத்துச் சேவைகளும் (பிரிவுகள் இருந்தால்) அதன் பிறகு Find My Device அதன் பிறகு சமீபத்திய இருப்பிடத்தைச் சேமி என்பதற்குச் சென்று இந்த அமைப்பை நீங்கள் சரிசெய்யலாம்.

“அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் மட்டும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல்”

இயல்பாக, அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் தங்கள் சாதனங்களைக் கண்டறிய Android சாதனம் மற்றவர்களுக்கு உதவுகிறது. அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் உங்கள் சாதனங்களைக் கண்டறிவதற்கான உதவியையும் நீங்கள் பெறுவீர்கள்.

தொலைந்த சாதனத்தின் உரிமையாளர் அதன் இருப்பிடத்தைக் கேட்கும்போது தொலைந்த சாதனத்தைக் கண்டறிந்த பிற Android சாதனங்கள் அனுப்பிய இருப்பிடங்களுடன் உங்கள் சாதனம் அனுப்பிய இருப்பிடத்தை இயல்பாகவே Find My Device நெட்வொர்க் ஒருங்கிணைக்கும்.

ஒருங்கிணைத்தல் என்றால் என்ன?

ஒருங்கிணைத்தல் மூலம் பல Android சாதனங்கள் தொலைந்த சாதனத்தைக் கண்டறியும் வரை Find My Device நெட்வொர்க் காத்திருக்கிறது. தொலைந்த சாதனத்தின் உரிமையாளருக்குப் பல இருப்பிட அறிக்கைகளில் இருந்து கணக்கிடப்பட்ட மையப் பகுதியை Find My Device காட்டும்.

Android சாதனங்கள் மூலம் நெட்வொர்க்கில் இருப்பிடத் தகவல்களைப் பகிரும் அனைவரின் தனியுரிமையைப் பாதுகாக்க உதவும் அதே வேளையில் அடிக்கடி சாதனங்கள் தொலையும் விமான நிலையங்கள், கூட்டம் நிறைந்த நடைபாதைகள் போன்ற அதிக டிராஃபிக் இருக்கும் இடங்களில் சாதனங்களைக் கண்டறிய உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இது உதவுகிறது.

முக்கியம்: நீங்கள் நெட்வொர்க்கில் பங்கேற்கும்போது உங்கள் Android சாதனம் அதனுடைய மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள துணைக்கருவிகளின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களையும் Googleளுடன் சேமிக்கிறது. நெட்வொர்க்கின்றிப் பயன்படுத்துதல் என்பதற்குக் கீழ் இந்தச் செயல்பாடு குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம். உங்கள் சாதனத்தைக் கண்டறிய உதவ உங்களின் சொந்தச் சாதனத்தில் இருந்தோ பரந்த நெட்வொர்க்கில் இருந்து திரளாக்கப்பட்டோ கிடைக்கும் சிறந்த இருப்பிடத்தை Find My Device பயன்படுத்தும்.

“நெட்வொர்க் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும்”

குறைவான டிராஃபிக் உள்ள பகுதிகளில் தொலைந்த சாதனங்களைக் கண்டறிய Find My Device நெட்வொர்க் உங்களுக்கு உதவ, ஒரு சாதனத்தை உங்கள் சாதனம் மட்டும் கண்டறிந்து அதன் இருப்பிடத்தைப் பகிர்ந்தாலும் கூட தொலைந்த சாதனங்களை மற்றவர்கள் கண்டறிய உதவ நெட்வொர்க் மூலம் இருப்பிடத் தகவல்களைப் பகிர்வதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த விருப்பத்தை இயக்கும் பயனர்களுக்கு அதிகமான மற்றும் குறைவான டிராஃபிக் உள்ள இடங்களில் சாதனங்களைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம். தொலைந்துபோன உங்கள் சாதனங்களை மிக விரைவாகக் கண்டறிய இந்த விருப்பம் உங்களுக்கு உதவக்கூடும்.

முக்கியம்: நீங்கள் நெட்வொர்க்கில் பங்கேற்கும்போது உங்கள் Android சாதனம் அதனுடைய மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள துணைக்கருவிகளின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களையும் Googleளுடன் சேமிக்கிறது. நெட்வொர்க்கின்றிப் பயன்படுத்துதல் என்பதற்குக் கீழ் இந்தச் செயல்பாடு குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம். உங்கள் சாதனத்தைக் கண்டறிய உதவ உங்களின் சொந்தச் சாதனத்தில் இருந்தோ பரந்த நெட்வொர்க்கில் இருந்து திரளாக்கப்பட்டோ கிடைக்கும் சிறந்த இருப்பிடத்தை Find My Device பயன்படுத்தும்.

உதவிக்குறிப்பு: எப்போது வேண்டுமானாலும் Find My Device ஆப்ஸ் மூலம் நீங்கள் அனைத்துச் சாதனங்களையும் அவற்றின் இருப்பிடங்களையும் நீக்கலாம்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4439849318333221658
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false