கடவுச்சாவிகள் மூலம் உங்கள் ஆப்ஸிலும் இணையதளங்களிலும் உள்நுழைதல்

இப்போது, உள்நுழைய கடவுச்சொல்லைப் பயன்படுத்தாமல் கடவுச்சாவிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து கடவுச்சாவியை உருவாக்க, பயோமெட்ரிக் சென்சார் வேண்டும் (கைரேகை, முகமறிதல், பின், ஸ்வைப் பேட்டர்ன் போன்றவை). உங்கள் கடவுச்சாவிகள் Password Manager மூலம் சேமிக்கப்பட்டு ஒத்திசைக்கப்படுகின்றன, பிற சாதனங்களில் உள்நுழைய அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

கடவுச்சாவிகளை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:

4 நிமிடங்களில் கடவுச்சாவிகளைப் புரிந்துகொள்ளுங்கள்

கடவுச்சாவியை உருவாக்குதல்

முக்கியம்: ஆப்ஸுக்கோ இணையதளத்திற்கோ கடவுச்சாவியை உருவாக்க, முதலில் அந்த ஆப்ஸ் அல்லது இணையதளத்துடன் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். சில ஆப்ஸும் இணையதளங்களும் கடவுச்சாவிகளை ஆதரிப்பதில்லை.

  1. ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. ஆப்ஸில் உள்நுழையவும்.
    • கடவுச்சாவியை உருவாக்குமாறு ஆப்ஸ் உங்களிடம் கேட்கலாம் அல்லது நீங்கள் ஆப்ஸ் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.
  3. கடவுச்சாவியை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
  4. புதிய கடவுச்சாவியுடன் சேமிக்கப்பட்டிருக்கும் தகவலைப் பார்க்கவும்.
  5. கடவுச்சாவியை உருவாக்க, சாதனத் திரை அன்லாக்கைப் பயன்படுத்தவும்.

கடவுச்சாவி மூலம் உள்நுழைதல்

கடவுச்சாவி மூலம் உள்நுழைதல்

  1. ஆப்ஸுக்குச் செல்லவும்.
  2. உள்நுழையப் பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவை நிறைவுசெய்ய, சாதனத் திரை அன்லாக்கைப் பயன்படுத்தவும்.

கடவுச்சொல் நிர்வாகிகளில் கடவுச்சாவிகள் எப்படிச் செயல்படுகிறது?

பிற Android சாதனங்களில் உள்நுழைய, Google Password Manager/Samsung Pass, Keeper, 1Password போன்ற வேறு மூன்றாம் தரப்புக் கடவுச்சொல் நிர்வாகியில் கடவுச்சாவிகளை நீங்கள் சேமிக்கலாம்.

கடவுச்சாவிகளைச் சேமிப்பதற்காகக் கடவுச்சொல் நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க:

  1. உங்கள் Android சாதனத்தில் அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. கடவுச்சொற்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும்.
    • Password என்றும் தேடலாம்.
  3. கடவுச்சொல் நிர்வாகியின் பெயரைத் தட்டவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கடவுச்சொல் நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் உள்நுழையும்போது கடவுச்சாவிகளைப் பரிந்துரைப்பதற்குக் கடவுச்சொல் நிர்வாகியை இயக்க:

  1. உங்கள் Android சாதனத்தில் அமைப்புகள் என்பதற்குச் செல்லவும்.
  2. கடவுச்சொற்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும்.
    • Password என்றும் தேடலாம்.
  3. நீங்கள் இயக்க விரும்பும் கடவுச்சொல் நிர்வாகிக்கு அடுத்துள்ள நிலைமாற்றும் பட்டனை மாற்றவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8186526202443205679
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false