Android பாதுகாப்பு & தனியுரிமை அமைப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

Android பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளில் நீங்கள் இவற்றைப் பார்க்கலாம்:

  • உங்கள் நிலை குறித்த மேலோட்டப் பார்வை
  • ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கும்போது அதுகுறித்த விழிப்பூட்டல்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகள்
  • ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் எப்படி மேம்படுத்துவது என்பதற்கான பரிந்துரைகள்

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளைக் கண்டறிதல்

முக்கியமானது: எல்லா Android சாதனங்களிலும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு & தனியுரிமை அமைப்புகள் இருப்பதில்லை, சில சாதனங்களில் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரிவுகள் இருக்கக்கூடும்.

  • Android 13 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புள்ள உங்கள் மொபைலில்: அமைப்புகள் அதன் பிறகு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  • Android 12 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புள்ள மொபைலில்:
    • பாதுகாப்பு அமைப்புகளுக்கு: அமைப்புகள் அதன் பிறகு பாதுகாப்பு அமைப்புகளுக்கான பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
    • தனியுரிமை அமைப்புகளுக்கு: அமைப்புகள் அதன் பிறகு தனியுரிமை அமைப்புகளுக்கான தனியுரிமை என்பதைத் தட்டவும்.

உங்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விருப்பங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான விழிப்பூட்டல்களைக் கண்டறிதல்

“பாதுகாப்பு மற்றும் தனியுரிமை” பக்கத்தின் மேற்புறத்தில்:

  • விழிப்பூட்டல்கள் இல்லையெனில்: “எல்லாம் சரியாக உள்ளன” எனக் காட்டப்படும்.
  • எச்சரிக்கை அல்லது விழிப்பூட்டல் இருந்தால்: “சாதனம் ஆபத்தில் உள்ளது” எனவும் அந்த ஆபத்து குறித்த விளக்கமும் கீழே காட்டப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10720789938459960984
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false