அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தானியங்கு விளம்பரங்கள்

தானியங்கு விளம்பரங்கள்: ஓர் அறிமுகம்

உங்கள் உள்ளடக்கம் மூலம் லாபம் பெறுதலுக்கான எளிய மற்றும் புதிய வழியைத் தானியங்கு விளம்பரங்கள் வழங்குகின்றன. தானியங்கு விளம்பரங்கள் மூலம் ஒரே ஒரு குறியீட்டை தளம் முழுவதும் உள்ள பக்கங்கள் அனைத்திலும் பயன்படுத்தலாம். தானியங்கு விளம்பரங்கள் தளத்தை ஸ்கேன் செய்து நன்றாகச் செயல்படுவதற்கும் அதிக வருவாயைப் பெறுவதற்கும் சாத்தியமுள்ள இடங்களில் தானாகவே விளம்பரங்களைக் காட்டும்.

பலன்கள்

தானியங்கு விளம்பரங்களின் பலன்கள்:

  • உங்கள் வருவாயை அதிகரிக்க உதவும். தானியங்கு விளம்பரங்கள் உங்கள் பக்கங்களைப் பகுப்பாய்வு செய்து, தளவமைப்பு, உள்ளடக்கம் மற்றும் ஏற்கனவே இருக்கும் Google விளம்பரங்களைப் பொறுத்து, விளம்பரங்களைக் காட்டுவதற்கான புதிய இடங்களைத் தேடிக் கொடுக்கிறது.
  • பயன்படுத்துவதற்கு எளிதானது. தொடங்குவதற்கு ஒரே ஒரு விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தினால் போதுமானது. குறியீட்டைப் பயன்படுத்திய பிறகு உங்கள் தளத்திலும் விளம்பர அமைப்புகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தானியங்கு விளம்பரங்கள் தானாகவே தனது அமைப்பைச் சரிசெய்துகொள்ளும்.
  • உங்கள் வலைதளத்திற்கு ஏற்றவாறு விளம்பரங்களை அமைக்க உதவும். உங்கள் வலைதளத்தில் விளம்பரங்கள் எங்கு தோன்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தானியங்கு விளம்பர அமைப்புகள் உங்களுக்கு வழங்குகின்றன.
  • மொபைலில் பயன்படுத்துவதற்கு எளிதானது. எந்தவொரு திரை அளவுக்கும் ஏற்றவாறு தானியங்கு விளம்பரங்கள் தானாகவே தனது அமைப்பைச் சரிசெய்து கொள்ளும். அத்துடன் திரை ஓரத்தில் தோன்றும் விளம்பரங்கள் மற்றும் வின்யேட்டுகள் போன்ற மொபைலுக்கான பிரத்தியேக வடிவங்களும் அவற்றில் உள்ளன.

தானியங்கு விளம்பரங்கள் எவ்வாறு இயங்குகின்றன

தானியங்கு விளம்பரங்கள் Googleளின் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை இவற்றுக்காகப் பயன்படுத்துகின்றன:

  • உங்கள் பக்கக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளுதல்
  • உங்கள் பக்கத்தில் ஏற்கனவே Google விளம்பரங்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடித்தல். (கவனத்திற்கு: மற்ற நெட்வொர்க்குகளின் விளம்பரங்களைக் கண்டுபிடிக்க முடியாது.)
  • பக்கத் தளவமைப்பு உங்கள் பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கத்தின் அளவு மற்றும் ஏற்கெனவேயுள்ள Google விளம்பரங்கள் போன்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் புதிய விளம்பரங்களைத் தானாகக் காட்டுதல். எப்போதாவது, தானியங்கு விளம்பரங்கள் இரண்டு விளம்பரங்களை அடுத்தடுத்து அருகில் காட்டக்கூடும் (விளம்பரங்களின் நெட்வொர்க் தோற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல்).

உங்கள் வலைதளத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால் அவற்றைக் கண்டறிந்து உங்கள் பக்கத்தை மறுபகுப்பாய்வு செய்வோம்.

உங்களிடம் AMP (Accelerated Mobile Pages) பக்கங்கள் இருந்தால்

உங்களின் AMP பக்கங்களில் Google தானாக விளம்பரங்களைக் காட்டவேண்டும் என நீங்கள் விரும்பினால் AMPக்கான தானியங்கு விளம்பரங்கள் என்பதைப் பயன்படுத்தலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6573609004432223628
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false