அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

கொள்கைகள்

ரிவார்டுகளை வழங்கும் விளம்பர யூனிட்களுக்கான கொள்கைகள்

வெளியீட்டாளர்களும் பயனர்களும் பலனடையும் வகையில் இருவருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் செயல்முறையே ரிவார்டுகளை வழங்கும் விளம்பர யூனிட்கள் ஆகும். வெளியீட்டாளர்கள், பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு நேர்மறையான அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக, 'Google வழங்கும் விளம்பரங்கள்' ("ரிவார்டு விளம்பரங்கள்") மூலம் ரிவார்டுகளை வழங்கும் விளம்பர யூனிட்களின் தன்மை மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான தேவைகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

இந்தக் கொள்கைகளின் நோக்கங்களுக்காக:

  • "நேரடிப் பணம் சார்ந்தவை" என்பவை நிஜ உலகில் பொருட்களையோ சேவைகளையோ வாங்குவதற்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் பணம் அல்லது பிற பேமெண்ட் முறைகள் ஆகும்.

    உதாரணங்கள்: பணம், கிரிப்டோகரன்சி, கிஃப்ட் கார்டு

  • "மறைமுகமானவை அல்லது பணம் அல்லாதவை" என்பது பண மதிப்புடைய அனைத்தையும் குறிக்கும். ஆனால் நிஜ உலகில் இவை நேரடிப் பேமெண்ட் முறை மூலம் வாங்க முடியாதவை அல்லது பண மதிப்பு இல்லாதவை ஆகும்.

    உதாரணங்கள்: தள்ளுபடிகள், லாயல்டி ரிவார்டுகள்/புள்ளிகள், தயாரிப்புக்கான இலவச ஷிப்பிங், தயாரிப்பு/சேவைக்கான கட்டணமற்ற உபயோகம், கேம் கேரக்டருக்கு வழங்கப்படும் கூடுதல் உயிர், கேம் கேரக்டரின் ஸ்கின்

  • "பரிமாற்ற முடியாதவை" என்பவை ஒரு பயனர் பெற்ற ரிவார்டைக் குறிக்கும். இந்த ரிவார்டை அவரால் மட்டுமே ரிடீம் செய்து பயன்படுத்த முடியும். இதைப் பணமாகவோ மூன்றாம் தரப்புக்குப் பரிமாற்றக்கூடிய பொருட்களாகவோ நேரடியாக மாற்ற முடியாது.

    உதாரணங்கள்: தள்ளுபடிக் குறியீடு, லாயல்டி புள்ளிகள், கேம் சார்ந்தவை. இவற்றை ஒரு குறிப்பிட்ட பயனர் அவரின் உள்நுழைந்துள்ள கணக்கின் மூலம் மட்டுமே ரிடீம் செய்து பயன்படுத்த முடியும். மேலும் இவற்றை நேரடியாகப் பணமாக மாற்றவோ வேறொருவருக்குப் பரிமாற்றக்கூடிய பொருளை வாங்குவதற்குப் பயன்படுத்தவோ முடியாது.

ரிவார்டுகளுக்கான தேவைகள்

  1. நேரடிப் பணம் சார்ந்தவற்றை எந்தச் சூழலிலும் ரிவார்டுகளாக வழங்கக்கூடாது.
  2. மறைமுகமானவற்றை அல்லது பணம் அல்லாதவற்றை ரிவார்டுகளாக வழங்கலாம், ஆனால்:
    • வெளியீட்டாளரின் பிளாட்ஃபார்ம், இணையதளம், ஆப்ஸ் ஆகியவற்றில் உள்ள பொருளுக்கோ சேவைக்கோ மட்டுமே ரிவார்டை ரிடீம் செய்யவும் பயன்படுத்தவும் முடியும்;
    • ரிவார்டைப் பரிமாற்ற முடியாது (எ.கா. பிறருக்குப் பரிமாற்றக்கூடிய பொருட்கள் அல்லது லாயல்டி புள்ளிகள் அனுமதிக்கப்படாது); மற்றும்
    • பொருட்களுக்கான தள்ளுபடி/வவுச்சராக வழங்கப்படும் ரிவார்டுகளின் மதிப்பு அந்தப் பொருளின் மொத்த மதிப்பில் 25%க்கு மேல் இருக்கக்கூடாது.
  3. ரேண்டம் ரிவார்டுகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால்:
    • ரிவார்டு விளம்பரங்கள் காட்டப்படுவதற்கு முன்பே ரேண்டம் ரிவார்டுகளுக்கான வாய்ப்பு குறித்து பயனருக்குத் தெரிவிக்க வேண்டும் (எ.கா. "ரேண்டம் ரிவார்டைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இப்போதே இந்த விளம்பரத்தைப் பாருங்கள்" எனக் குறிப்பிடுதல்);
    • சாத்தியமிக்க அனைத்து ரிவார்டுகள் குறித்த விவரங்களும் பயனர்கள் எளிதில் அணுகுமாறு இருக்க வேண்டும் (எ.கா. சாத்தியமிக்க ரிவார்டுகள் குறித்து வெளியீட்டில் குறிப்பிடுதல், மேலே தோன்றும் உரை, விவரங்களைக் கொண்ட பக்கத்திற்கான இணைப்பைச் சேர்த்தல்). ரிவார்டைப் பெறாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்பதைத் தெரிவிப்பதும் இதிலடங்கும்; மற்றும்
    • ரிவார்டு பெறுவதற்கான வாய்ப்பு 0க்கு மேல் இருக்க வேண்டும்.

செயல்படுத்துதலுக்கான தேவைகள்

  1. தேவையான செயல்(கள்) மற்றும் வழங்கப்படும் ரிவார்டு(கள்) குறித்த தெளிவான, துல்லியமான மற்றும் எளிதில் பார்க்கக்கூடிய வெளியிடுதலை ரிவார்டு விளம்பரங்கள் காட்டப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் வெளியீட்டாளர்கள் வழங்க வேண்டும்.
    • செயல்(கள்) மற்றும் ரிவார்டு(கள்) குறித்து விளக்குவதற்கு ஐகான்களைப் பயன்படுத்தலாம். பயனர்களால் தெளிவாகவும் சந்தேகம் ஏதுமின்றியும் புரிந்துகொள்ளும் வகையில் அந்த ஐகான்கள் இருக்க வேண்டும்.
    • ரிவார்டு விளம்பரங்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்பட்டாலோ ரிவார்டைப் பெற பயனர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரிவார்டு விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்றாலோ, அதுகுறித்த விவரங்கள் பயனர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் (எ.கா. "100 தங்க நாணயங்களைப் பெற இப்போது 3 விளம்பரங்களைப் பாருங்கள்" எனக் குறிப்பிடுதல்).
  2. பயனர் உறுதியாகவும் தெளிவாகவும் ஒப்புதலளித்த பிறகே (எ.கா. "ஆம்" அல்லது "ஏற்கிறேன்" எனும் பட்டனைத் தட்டுதல்) ரிவார்டு விளம்பரங்களைக் காட்ட வேண்டும். இடையீட்டு ரிவார்டு விளம்பர வடிவமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டவற்றிற்கு இது பொருந்தாது. கூடுதலாக:
    • ரிவார்டு விளம்பரங்கள் அவற்றுடன் ஈடுபடுமாறு பயனர்களை நிர்பந்திக்கக்கூடாது (எ.கா. அவற்றைத் தவிர்க்கவோ நிராகரிக்கவோ முடிய வேண்டும்). 
    • இடையீட்டு ரிவார்டு விளம்பர வடிவமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட ரிவார்டு விளம்பரங்கள் "இல்லை" அல்லது "ஏற்கவில்லை" எனும் விருப்பத்தைக் கொண்ட அறிமுகத் திரையைக் காட்ட வேண்டும். மேலும் ஒப்புதல் நீக்குவதற்குப் பயனர்களுக்குப் போதுமான நேரம் வழங்க வேண்டும். இந்த விருப்பம் மறைக்கப்பட்டோ தடுக்கப்பட்டோ செயல்படாமலோ இருக்கக்கூடாது.
    • ரிவார்டு விளம்பரத்தைத் தவிர்ப்பதோ "இல்லை" அல்லது "ஏற்கவில்லை" எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதோ பிளாட்ஃபார்ம், இணையதளம் அல்லது ஆப்ஸின் வழக்கமான பயன்பாட்டைக் கடினமாக்கவோ அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.
    • வழங்கப்படும் ரிவார்டு(கள்) குறித்து விளக்குவதைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயனர்களைத் தவறாக வழிநடத்தும் அல்லது ஊக்குவிக்கும் வார்த்தைகளையோ ஐகான்களையோ வெளியீட்டாளர்கள் சேர்க்கக்கூடாது. (எ.கா. "எங்கள் பிசினஸை ஆதரிக்க இந்த விளம்பரத்தைப் பாருங்கள்" எனக் குறிப்பிடுதல்).
  3. தேவையான செயல்களைப் பயனர் நிறைவுசெய்த பிறகு உறுதியளித்த ரிவார்டுகளை வெளியீட்டாளர்கள் வழங்க வேண்டும்.
  4. ரிவார்டுகளை வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் வெளியீட்டாளர்களுடையது. மேலும் ரிவார்டுகள் Googleளால் அங்கீகரிக்கப்பட்டவை அல்லது சரிபார்க்கப்பட்டவை என வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடக்கூடாது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7010605151868480728
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false