அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

இருப்பை நிர்வகித்தல்

Ads.txt ஃபைலுக்கான வழிகாட்டி

Authorized Digital Sellers அல்லது ads.txt என்பது IAB Tech Lab என்ற ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட அம்சமாகும். நீங்கள் அங்கீகரித்த (AdSense போன்ற) விற்பனையாளர்கள் மட்டுமே உங்களின் டிஜிட்டல் விளம்பர இருப்புப் பட்டியலை விற்கிறார்களா என்பதை இதன் மூலம் உறுதிசெய்ய இயலும்.

உங்களின் ads.txt ஃபைலை உருவாக்குவதன் மூலம் வலைதளத்தில் விளம்பரங்களை விற்பனை செய்ய யாரை அனுமதிக்கலாம் என்பதை உங்களால் நன்கு கட்டுப்படுத்த முடியும். இதனால் வேறு எவரும் போலியான இருப்பை விளம்பரதாரர்களுக்கு வழங்கிவிடாமல் தடுக்க முடியும்.

ads.txt ஃபைலைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றாலும் இதைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பர இருப்பை வாங்குபவர்களால் போலி இருப்பை அடையாளம் காண முடியும். இதனால் அவர்கள் செலவிடும் தொகை உங்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தாத பட்சத்தில், விளம்பரதாரர்கள் செலவிடும் தொகை போலி இருப்பை விற்பவர்களுக்குச் சென்றுவிடக்கூடும்.

இந்தக் கட்டுரையில்:

AdSenseஸில் ads.txt தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் வலைதளத்தில் உள்ள ads.txt ஃபைலில் சிக்கல் இருந்தால், AdSense கணக்கில் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள். உங்கள் வருவாய்க்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சிக்கலைச் சரிசெய்யவும்.

குறிப்பு: இந்த மாற்றங்கள் உங்கள் AdSense கணக்கில் தெரிய சில நாட்கள் ஆகலாம். உங்கள் வலைதளம் பல விளம்பரங்களைக் கேட்கவில்லை எனில் இதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம். நீங்கள் மாற்றங்களைச் செய்த பிறகு, உங்கள் புதுப்பிப்புகள் உள்ளனவா என ads.txt நிலையில் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் வலைதளத்திற்கான ads.txt ஃபைலை உருவாக்குதல்

உங்கள் வலைதளத்தில் ads.txt ஃபைல் இல்லையெனில் நீங்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் ads.txt ஃபைலைச் சரிபார்க்க அதில் வெளியீட்டாளர் ஐடி சேர்க்கப்பட்டு சரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  1. Notepad (Windows), TextEdit (Mac) போன்ற எளிய உரை எடிட்டரைப் பயன்படுத்தி வார்த்தை (.txt) ஃபைலை உருவாக்கவும்.
  2. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  3. உங்கள் முகப்புப்பக்கத்தில் அறிவிப்பு காட்டப்பட்டால் இப்போதே சரிசெய் என்பதைக் கிளிக் செய்யவும். அறிவிப்பு காட்டப்படவில்லை என்றால் வலைதளங்கள் என்பதைக் கிளிக் செய்துவிட்டு, ads.txt நிலை "கிடைக்கவில்லை" என இருக்கும் வலைதளத்தைக் கிளிக் செய்யவும்.
    குறிப்பு: உங்கள் வலைதளங்கள் மற்றும் அவற்றின் ads.txt நிலையைப் பொறுத்து, நீங்கள் தேர்வுசெய்ய பல சரிபார்ப்பு விருப்பங்கள் இருக்கக்கூடும். Ads.txt துணுக்கு எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ads.txt ஃபைல்கள் ஒவ்வொன்றிலும் அந்த வரியை ஒட்டவும்.

    உங்கள் ads.txt ஃபைல் இப்போது பின்வரும்படி தோன்ற வேண்டும், அதில் உள்ள pub-0000000000000000 என்பதுதான் உங்களின் சொந்த வெளியீட்டாளர் ஐடி ஆகும்:

    google.com, pub-0000000000000000, DIRECT, f08c47fec0942fa0

  6. (விரும்பினால்) நீங்கள் வேறொரு விளம்பர நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், ads.txt ஃபைலில் அந்த நெட்வொர்க்கைச் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் விளம்பர நெட்வொர்க்கின் ads.txt குறித்த தகவலுக்கு அவர்களைத் தொடர்புகொள்ளவும்.
  7. உங்கள் வலைதளத்தின் ரூட் டைரக்டரியில் ads.txt ஃபைலைப் பதிவேற்றவும்.

    வலைதளத்தின் ரூட் டைரக்டரி என்பது முதல்நிலை டொமைனைத் தொடர்ந்து வரும் டைரக்டரி அல்லது ஃபோல்டர் ஆகும் (உதாரணம்: example.com/ads.txt.) (example.com/ads.txt என்பதில், example.com என்பது உங்கள் ads.txt ஃபைலை நீங்கள் பதிவேற்றும் ரூட் டைரக்டரி/ஃபோல்டர் ஆகும்.)

    உதவிக்குறிப்பு: ads.txt ஃபைலை எங்கே சேர்ப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லையெனில், குறிப்பிட்ட வழிமுறைகளைப் பார்க்க உங்கள் வலைதள உருவாக்கி/எடிட்டருக்குச் செல்லவும். இணைய ஹோஸ்டிங் சேவையைத் தொடர்புகொண்டும் உங்கள் வலைதளங்களில் ரூட் டைரக்டரியைப் பதிவேற்றும் வழிமுறையைத் தெரிந்துகொள்ளலாம். ரூட் டைரக்டரி குறித்து மேலும் அறிக.
  8. உங்கள் ஃபைலைச் சரியாக வெளியிட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ள, ads.txt ஃபைலின் உள்ளடக்கம் கிடைக்கிறதா எனப் பார்க்கவும். உங்கள் வலை உலாவியில் ads.txt URLலை டைப் செய்யவும் (உதாரணம்: https://example.com/ads.txt). ads.txt ஃபைல் உங்கள் வலை உலாவியில் காட்டப்பட்டால் AdSense அதைக் கண்டறிய வாய்ப்புள்ளது.

உங்கள் வெளியீட்டாளர் ஐடியை ads.txt ஃபைலில் சேர்த்தல்

ads.txt ஃபைலில் உங்கள் வெளியீட்டாளர் ஐடி இல்லை எனில் அதை உங்கள் கணக்கிலிருந்து நகலெடுத்து ads.txt ஃபைலில் சேர்க்கலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. உங்கள் முகப்புப்பக்கத்தில் அறிவிப்பு காட்டப்பட்டால் இப்போதே சரிசெய் என்பதைக் கிளிக் செய்யவும். அறிவிப்பு காட்டப்படவில்லை என்றால் வலைதளங்கள்  என்பதைக் கிளிக் செய்துவிட்டு, ads.txt ஃபைல் "அங்கீகரிக்கப்படவில்லை" என்ற நிலையுடன் கூடிய வலைதளத்தைக் கிளிக் செய்யவும்.
  3. நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ads.txt ஃபைல்கள் ஒவ்வொன்றிலும் அந்த வரியை ஒட்டவும்.

    உங்கள் ads.txt ஃபைல் இப்போது பின்வரும்படி தோன்ற வேண்டும், அதில் உள்ள pub-0000000000000000 என்பதுதான் உங்களின் சொந்த வெளியீட்டாளர் ஐடி ஆகும்:

    google.com, pub-0000000000000000, DIRECT, f08c47fec0942fa0

கவனத்திற்கு: உங்கள் ads.txt ஃபைல் சரிபார்க்கப்பட வேண்டுமெனில் IAB Tech Lab குறிப்பிட்டுள்ளபடி அது வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் உதவி தேவைப்பட்டால் ads.txt விவரக்குறிப்பைப் பார்க்கவும்.

புதுப்பிப்புகள் உள்ளனவா என உங்கள் ads.txt நிலையைப் பார்க்கலாம்

உங்கள் ads.txt ஃபைலில் நீங்கள் மாற்றங்கள் செய்திருந்து, அவை உங்கள் கணக்கில் தெரியவில்லை எனில் உங்கள் ads.txt ஃபைலை மீண்டும் சரிபார்க்கும்படி AdSenseஸிடம் கேட்கலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. வலைதளங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புதுப்பிப்புகள் உள்ளனவா என நீங்கள் பார்க்க விரும்பும் வலைதளத்தைக் கிளிக் செய்யவும்.
  4. புதுப்பிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

    உங்கள் "வலைதளங்கள்" பக்கத்தில் உள்ள ads.txt நிலை புதுப்பிக்கப்பட்டது.

    அடுத்த படிகள்

    • உங்கள் ads.txt நிலை இப்போது "அங்கீகரிக்கப்பட்டது" என்று இருந்தும் உங்கள் வலைதளத்திற்கு மதிப்பாய்வு தேவைப்பட்டால், மதிப்பாய்வைக் கேள் என்பதைக் கிளிக் செய்து மதிப்பாய்வுச் செயல்முறையைத் தொடங்கலாம்.
    • உங்கள் ads.txt நிலை இப்போது "அங்கீகரிக்கப்பட்டது" என்று இருந்தால் உங்கள் வலைதளம் "தயார்" மற்றும் உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களை அமைத்துவிட்டீர்கள் என்பதாகும். அதன் பிறகு விளம்பரங்கள் காட்டப்படத் தொடங்கும். குறிப்பு: உங்கள் பக்கங்களில் விளம்பரங்கள் காட்டப்பட ஒரு மணிநேரம் வரை ஆகலாம்.
    • உங்கள் ads.txt ஃபைலில் இன்னும் சிக்கலை எதிர்கொண்டால், ads.txt சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Ads.txt பிழையறிந்து திருத்தும் கருவி

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8985310944877567615
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false