அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

பார்வைத்தன்மையும் நடப்புப் பார்வையும்

எங்கள் கூட்டாளர்கள் தங்கள் வலைதளங்களின் பார்வைத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக அனைத்து விளம்பரத் தயாரிப்புகளிலும் 'நடப்புப் பார்வை' அளவீடுகளைச் செயல்படுத்த உள்ளோம். 'காணக்கூடிய இம்ப்ரெஷன்கள்' பற்றியும் உங்கள் வலைதளத்திற்கும் அவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். மேலும் உங்கள் வலைதளத்தில் 'காணக்கூடிய இம்ப்ரெஷன்களை' அதிகரிப்பதற்கான சில பரிந்துரைகளையும் இதில் காணலாம்.

காணக்கூடிய இம்ப்ரெஷன் மற்றும் பார்வைத்தன்மை என்றால் என்ன?

நடப்புப் பார்வை என்பது விளம்பரப் பார்வைத்தன்மைக்கான Googleளின் அளவீட்டுத் தீர்வாகும். இது AdSense வழங்கும் விளம்பரங்களின் பார்வைத்தன்மையைக் கண்காணிக்கிறது: அதாவது, அளவிடப்பட்ட மொத்த விளம்பரங்களின் எண்ணிக்கையில் காணக்கூடியதாகக் கருதப்படும் விளம்பரங்களின் சதவீதமே ‘நடப்புப் பார்வை’ ஆகும்.

பயனரின் உலாவியில் ஓர் இம்ப்ரெஷன் தோன்றி அதை அவர் பார்க்கும் வாய்ப்பு உருவானால் அது 'காணக்கூடிய இம்ப்ரெஷனாகக்' கருதப்படும். ஒரு விளம்பரம் பின்வரும் நிபந்தனையைப் பூர்த்திசெய்யும்போது 'காணக்கூடிய இம்ப்ரெஷன்' என்று அதை வரையறுக்கிறோம்: விளம்பரத்தின் 50% பிக்சல்கள் தொடர்ச்சியாகத் திரையில் குறைந்தபட்சம் ஒரு வினாடிக்குத் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் வலைதளம் உருவாக்கியுள்ள 'காணக்கூடிய இம்ப்ரெஷன்களின்' எண்ணிக்கை தொடர்பான அளவீட்டுத் தரவை 'நடப்புப் பார்வை' அறிக்கையிடல் வெளியீட்டாளர்களுக்கு வழங்குகிறது. வலைதளத்தின் பார்வைத்தன்மையை அறிந்துகொள்ளவும் மேம்படுத்தவும் வெளியீட்டாளர்கள் இந்தத் தரவைப் பயன்படுத்தலாம். 

பார்வைத்தன்மை எனக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

வெளியீட்டாளர்கள் தங்கள் காட்சி இருப்பின் நீண்டகால மதிப்பை அதிகரித்துக்கொள்வதற்குப் பார்வைத்தன்மை தொடர்பான தரவு உதவுகிறது. விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட விளம்பர யூனிட்களின் பார்வைத்தன்மையைப் பார்த்து அதற்கான விகிதங்களின் அடிப்படையில் ஏலத்திற்கான முடிவுகளை எடுக்கலாம். விளம்பரதாரர்கள் பெரும்பாலும் 'காணக்கூடிய இம்ப்ரெஷன்களையே' அதிகமாக வாங்குவதற்கு விரும்புகின்றனர். இதன் மூலம், அதிகமான காணக்கூடிய இருப்பைக் கொண்டுள்ள வெளியீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு சிறப்பாக இருக்கும். 'காணக்கூடிய இம்ப்ரெஷன்களின்' எண்ணிக்கையை உங்கள் வலைதளத்தில் அதிகரிப்பது Google Display Networkகில் அவற்றை வாங்கும் பிராண்டு விளம்பரதாரர்களுக்குக் கூடுதல் இருப்புக்கான தகுதியை வழங்கும்

உங்களின் விளம்பரப் பார்வைத்தன்மையை மேம்படுத்துவது எப்படி?

பார்வைத்தன்மை தொடர்பான புள்ளிவிவரங்கள் உங்களுக்கு நன்கு பரிட்சயமான பிறகு உங்களின் முடிவுகளை மேம்படுத்த மூன்று மாற்றங்களைச் செய்யலாம்:

பயனர்களை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்கலாம்

பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான வலைதளத்திற்கு இதுவே முக்கியச் செயல்பாடாக உள்ளது. பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்க வகைகளான கேம்கள், கலை & பொழுதுபோக்கு, ஷாப்பிங் போன்றவை அதிகமான பார்வைத்தன்மையைப் பெறும் வாய்ப்புள்ளவையாக இருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். எனவே இந்த உள்ளடக்க வகைகளுக்கான விளம்பரங்கள் மீது அதிக ஆர்வம் காட்டப்படுவதாகத் தெரிகிறது.
விளம்பரப் பார்வைத்தன்மை அறிக்கையின் நிலை என்பதில் கூடுதல் தகவல்களை அறிக. உங்கள் சொந்த உள்ளடக்கத்தை உருவாக்கும்போது இந்த ஆய்வு முடிவுகளைக் கருத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். 

தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பர யூனிட்களைப் பயன்படுத்தலாம் 

தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பர யூனிட்கள் அவை பார்க்கப்படும் திரை/சாதனத்திற்கு ஏற்றவாறு விளம்பரச் செயல்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பரங்களைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் இவ்வகை விளம்பரங்கள் அவற்றைப் பார்க்கப் பயன்படுத்தப்படும் உலாவிக்குத் தக்கவாறு தானாகவே பொருந்திக்கொள்ளும். உங்கள் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பார்ப்பதற்குப் பயனர்கள் எந்தச் சாதனத்தை (மொபைல், டேப்லெட் அல்லது டெஸ்க்டாப்) தேர்ந்தெடுத்தாலும் இவ்வகை விளம்பரங்களால் அவர்களுக்கு நல்ல பயனர் அனுபவம் கிடைக்கிறது. தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பரங்கள் குறித்து மேலும் அறிக. நன்கு காணக்கூடிய விளம்பர யூனிட்களையும் பயன்படுத்திப் பார்க்கலாம்: தானியங்கு விளம்பர வடிவங்கள் வின்யேட் மற்றும் திரை ஓரத்தில் தோன்றும் விளம்பரங்கள். 

விளம்பரங்கள் காட்டுமிடங்களை மாற்றலாம்

AdSense விளம்பர யூனிட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பதும் உங்களின் பார்வைத்தன்மை விகிதங்களை மேம்படுத்த உதவும். பயனர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் விளம்பரங்களை வைக்கவும்.
முதலாவதாக, பயனர்கள் உங்கள் வலைதளத்தில் எந்தப் பிரிவுகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அந்தப் பிரிவுகளில் விளம்பரங்களை வைக்கவும்.
அதிகமாகக் காணக்கூடிய விளம்பரக் காட்டுமிடம் பக்கத்தின் மேல் வலது புறத்தில் இருக்கும், பக்கத்தின் மேற்பகுதியில் இல்லை. எனவே விளம்பரங்களை எங்கு வைத்தால் பயனர்கள் அதிகம் பார்ப்பார்கள் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள். பக்கத்தின் கீழ்ப்பகுதியில் விளம்பரங்கள் வைப்பதை முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டாம். காட்சி விளம்பரங்களில் 47% அளவிற்குப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் காணக்கூடியவையாகவே உள்ளன.
இரண்டாவதாக, பயனர்கள் அதிக நேரத்தைச் செலவிடும் குறிப்பிட்ட பக்கங்களைக் கண்டறிந்து அவற்றின் விளம்பரக் காட்டுமிடங்களில் விளம்பர யூனிட்களை வைப்பதில் கவனம் செலுத்துங்கள்.
விளம்பர யூனிட்களின் பார்வைத்தன்மை விகிதம் மாறுகிறதா என்பதை அறிந்துகொள்ள அவற்றைப் பக்கத்தில் சற்று மேலே நகர்த்தி வைத்தும் சோதித்துப் பார்க்கலாம். கவனத்திற்கு: தனிப்பட்ட விளம்பர யூனிட்டில் செய்யப்படும் இவ்வாறான மாற்றங்கள் பக்கத்தின் பிற விளம்பர யூனிட்களைப் பாதித்தால் ஒட்டுமொத்தமாக எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடும். உங்கள் வலைதளத்தில் எந்த விளம்பரக் காட்டுமிடங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கவனமாகப் பரிசோதித்துப் பார்க்கவும்.
உங்கள் ‘நடப்புப் பார்வைகளின்’ எண்ணிக்கையில் அதிகப்படியான கவனம் செலுத்துவதன் மூலம் பயனர்கள் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் இலக்கிடப்பட்ட விளம்பரங்களை அவர்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களால் எளிதாகக் காண முடியாத விளம்பரங்களின் நிச்சயமற்ற நிலையை அகற்றுவதற்கும் உதவும். மேலும் தகவல்களுக்கு பார்வைத்தன்மைக்கான சிறந்த நடைமுறைகள் என்பதைப் பார்க்கலாம். 

பார்வைத்தன்மையையும் நடப்புப் பார்வையையும் குறித்து மேலும் அறிக

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6368895178146482139
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false