அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பல திரைகளுக்கான வழிகாட்டுதல்கள்

'பல திரை' குறித்த அறிமுகம்

அதிகரிக்கும் ஸ்மார்ட்ஃபோன் உபயோகத்தால், நிலையான இணைய இணைப்பு மூலம் வெளியீட்டாளர்கள் தங்கள் பயனர்களுடன் இணைவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 'பல திரை' அடிப்படையிலான அணுகுமுறை மூலம், அதிகளவிலான பார்வையாளர்களை அடையவும் அதன் மூலம் நீண்ட காலத்திற்கு அதிக வருவாயைப் பெறவும் இந்த வாய்ப்புகள் வழிவகுக்கலாம்.

'பல திரை' உத்தி ஏன் தேவைப்படுகிறது?

உங்கள் சொந்தத் தரவைப் பயன்படுத்தி 'பல திரை' மாற்றத்தைப் பார்ப்பதற்கான வெவ்வேறு வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

பக்கத்தின் வேகம் பற்றிய Googleளின் புள்ளிவிவரங்கள்
உங்கள் மொபைல் ஸ்கோரை மதிப்பிட, பக்கத்தின் வேகம் பற்றிய Googleளின் புள்ளிவிவரங்கள் என்ற கருவியில் உங்கள் URLலைப் பரிசோதித்துப் பார்க்கவும்.
  • உங்கள் ஸ்கோர் என்ன? ஸ்கோர் 85 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் பக்கம் சிறப்பாகச் செயல்படுகிறதென்று அர்த்தம்.
  • உங்கள் பரிசோதனை முடிவுகளைப் பகுப்பாய்வு செய்ய, மொபைல் பகுப்பாய்வு எனும் பிரிவைப் படிக்கவும்.
மொபைலுக்கேற்ற பரிசோதனை
மொபைலுக்கேற்ற பரிசோதனை ஒரு பக்கத்தின் URLலைப் பகுப்பாய்வு செய்து அப்பக்கம் மொபைலுக்கேற்ற வடிவத்தில் உள்ளதா என்று தெரிவிக்கும். பின்வரும் நிபந்தனைகளை ஒரு பக்கம் பூர்த்திசெய்வதாக Googlebotடால் கண்டறியப்பட்டால் “மொபைலுக்கேற்றது” என்ற லேபிளுக்கு அப்பக்கம் தகுதிபெறும்:
  • மொபைல் சாதனங்களில் பொதுவாகவே பயன்படுத்தப்படாத மென்பொருளைத் (Flash போன்றது) தவிர்த்தல்
  • அளவை மாற்றாமலேயே வாசிக்கக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
  • திரைக்குள் பொருந்துமாறு உள்ளடக்கத்தை அமைத்தல். எனவே பயனர்கள் அதைப் படிக்க கிடைமட்டமாக நகர்த்தவோ அளவை மாற்றவோ வேண்டியதில்லை
  • இணைப்புகளுக்கிடையே போதிய இடைவெளி விடுதல். எனவே சரியான இணைப்பை எளிதாகக் கண்டறிந்து தட்ட முடியும்

கூடுதல் தகவல்களுக்கு, மொபைலுக்கேற்ற பக்கங்களைக் கண்டறிய பயனர்களுக்கு உதவுதல் எனும் வலைப்பதிவு இடுகையைப் பார்க்கவும்.

Google Analytics பிரத்தியேக டாஷ்போர்டுகள்
உங்கள் பயனர்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, Google Analytics பிரத்தியேக டாஷ்போர்டுகளைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் பயனர்கள் எந்தெந்தச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஒவ்வொரு சாதன வகைக்குமான அவர்களது பவுன்ஸ் விகிதத்தையும் புரிந்துகொள்ள, டிராஃபிக் வளர்ச்சி டாஷ்போர்டிலுள்ள "மொபைல் டிராஃபிக் செயல்பாடு" எனும் வரைபடத்தைப் பார்க்கவும்.
  • ஒவ்வொரு சாதன வகையிலும் உங்கள் பயனர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் (அதாவது, அமர்வின் சராசரி கால அளவு) என்பதைப் புரிந்துகொள்ள, ஈடுபாடு & லாயல்டி டாஷ்போர்டிலுள்ள "சாதன அடிப்படையிலான ஈடுபாடு" எனும் வரைப்படத்தைப் பார்க்கவும்.

'பல திரைக்கேற்ற' தளங்களுக்கான மிகப் பொதுவான அணுகுமுறைகள்

உங்கள் தளத்தைப் பல திரைக்கேற்ற வகையில் மாற்ற மூன்று வழிகள் உள்ளன:

  • தானாகப் பொருந்தும் தன்மையுள்ள இணைய வடிவமைப்பு: அனைத்துப் பிளாட்ஃபார்ம்களுக்கும் ஒரே அடிப்படை HTML குறியீட்டைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்டான வடிவமைப்புத் தொழில்நுட்பமாகும்.
  • டைனமிக் சேவை: இந்த முறையில், வருகையாளர் பயன்படுத்தும் சாதன வகையை இணையச் சேவையகம் கண்டறிந்து அந்தச் சாதனத்துக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகப் பக்கத்தைக் காட்டும்.
  • தனிப்பட்ட மொபைல் தளம்: உங்கள் அசல் டெஸ்க்டாப் தளத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட மொபைல் தளத்தை உருவாக்கலாம்.

தொடங்குவதற்கான 'பல திரை' மூலங்கள்

உங்கள் பயனர்களுக்குச் சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதற்கு உதவக்கூடிய சில மூலங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வலைதள அடிப்படைகள்

    வலைதள அடிப்படைகள் என்பது 'பல திரை' இணையப் பக்கத்தை உருவாக்குவதற்கான விரிவான மூலமாகும். இதன்மூலம், 'பல திரை' தளத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் படிப்படியாக அறியலாம்.

  • 'பல திரை' வாடிக்கையாளருக்கேற்ற இணையதளங்களை உருவாக்குதல்

    'பல திரை' இணையதளங்களை உருவாக்குதல் தகவல் கையேடு 'பல திரை' தளங்களுக்கான பொதுவான அணுகுமுறைகளை விவரிக்கிறது. அத்துடன், மிகப் பொதுவான தவறுகளில் சிலவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எப்படிச் சிறந்த பயனர் அனுபவத்தை உருவாக்குவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறது. Download

  • Google Developers மொபைல் வழிகாட்டி

    உள்ளடக்க நிர்வாக முறையைப் (CMS-Content Management System) பயன்படுத்தி 'பல திரைக்கேற்ற' தளங்களை உருவாக்க வேண்டுமெனில், Google Developers மொபைல் வழிகாட்டியிலுள்ள உங்கள் இணையதள மென்பொருளைப் பிரத்தியேகமாக்கல் எனும் பிரிவைப் பார்க்கவும். உங்கள் 'பல திரை' உத்தி குறித்து முடிவெடுக்க உதவும் 'விரைவுத் தொடக்கம்' பிரிவும் மொபைல் வழிகாட்டியில் உள்ளது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4551539463837426847
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false