அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர இலக்கிடல்

முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு AdSense மாற்றப்படுவது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு AdSense மாற்றப்படுவது குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:

காலப்பதிவு

கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்படும்போது இந்தப் பக்கத்தைப் புதுப்பிப்போம்.

தேதி நிகழ்வு
அக்டோபர் 7, 2021 இந்த ஆண்டின் இறுதிக்குள் AdSense முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு மாறுவதாக அறிவிக்கிறது.
நவம்பர் 17, 2021 முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு மாறுவதை AdSense நிறைவுசெய்கிறது.

FAQகள்

AdSense ஏன் இந்த மாற்றத்தைச் செய்கிறது?

ஆன்லைன் காட்சி விளம்பரங்களின் ஆரம்ப நாட்களில் விளம்பரப் பகுதி வழக்கமாக இரண்டாவது அதிகபட்ச ஏலத் தொகையிலேயே விளம்பரதாரர்களுக்கு விற்கப்பட்டு வந்தது. அதில் ஏலத்தை எடுத்தவர் செலுத்த வேண்டிய இறுதித் தொகை இரண்டாவது அதிகபட்ச ஏலத் தொகையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. காலப்போக்கில் Ad Manager, AdMob மற்றும் பல மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்ட காட்சி விளம்பரச் சூழலமைப்பில் உள்ள பல்வேறு விளம்பர விற்பனைப் பிளாட்ஃபார்ம்கள், ஏலங்களை முதல் அதிகபட்சத் தொகைக்கு மாற்றின. முதல் அதிகபட்ச ஏலத் தொகையின்படி, ஏலத்தை எடுத்தவர் குறிப்பிட்டுள்ள ஏலத் தொகையே அவர் செலுத்த வேண்டிய இறுதி ஏல விலையாகும். முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு AdSense மாற்றப்படுகிறது. ஆன்லைன் விளம்பரங்களை விளம்பரதாரர்கள் வாங்கும் விதத்தையும் AdSenseஸில் விற்கப்படும் உங்கள் விளம்பரப் பகுதியை அவர்கள் வாங்குவதையும் எளிதாக்க இது உதவுகிறது.

எந்தெந்த AdSense தயாரிப்புகள் பாதிக்கப்படும்?

முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு மாறுவதால் பின்வரும் AdSense தயாரிப்புகள் பாதிக்கப்படும்:

  • உள்ளடக்கத்திற்கான AdSense
  • வீடியோவிற்கான AdSense
  • கேம்களுக்கான AdSense

இந்த மாற்றத்தால் பாதிப்படையாதவை:

  • தேடலுக்கான AdSense
  • ஷாப்பிங்கிற்கான AdSense

நான் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?

நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை, இந்த மாற்றங்கள் தானாகவே செயல்படுத்தப்படும்.

எனது விளம்பர நடைமுறைப்படுத்தலை மாற்ற வேண்டுமா?

வேண்டாம். அதிகபட்ச ஏலத் தொகைக்கு மாற்றுவது உங்கள் விளம்பர நடைமுறைப்படுத்தலை எந்த விதத்திலும் பாதிக்காது.

புதிய ஏலத்தில் அனைத்து விளம்பர வடிவங்களையும் என்னால் பயன்படுத்த முடியுமா?

ஆம். இந்த மாற்றம் AdSense வழங்கும் விளம்பர வடிவங்களைப் பாதிக்காது.

எனது AdSense வருமானம் பாதிக்கப்படுமா?

மாறும் ஏலச் சூழல் காரணமாக, குறிப்பிட்ட AdSense வெளியீட்டாளர்கள் எவ்வாறு பாதிப்படைவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு மாற்றிய பின்பு சராசரியாக AdSense வெளியீட்டாளர்களின் வருமானத்தில் ஏற்படும் தாக்கம் நடுநிலையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். முதல் அதிகபட்ச ஏலத் தொகைக்கு Ad Manager மாறியபோது வெளியீட்டாளரின் வருவாய் சராசரியாக நடுநிலையில் இருந்ததோடு சற்று அதிகரிக்கவும் செய்தது.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2190975375454063946
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false