AdSense குறியீடு என்பது தானியங்கு விளம்பரங்களையும் AdSenseஸின் பல்வேறு அம்சங்களையும் பெற உங்கள் வலைதளத்தில் சேர்க்கப்படும் HTML துணுக்கின் பெயர் ஆகும். AdSenseஸில் அதிகப் பலன்களைப் பெற, உங்கள் வலைதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் AdSense குறியீட்டைச் சேர்க்கவும். AdSense குறியீட்டைப் பெறுவது எப்படியென அறிக.
வரம்புகள்
- தானியங்கு விளம்பரங்கள் மற்றும் விளம்பர யூனிட் குறியீடு
தானியங்கு விளம்பரங்களைப் பெற AdSense குறியீட்டைப் பயன்படுத்தலாம். ஆனால் தானியங்கு விளம்பரங்கள் தற்போது எந்தவொரு AdSense விளம்பர யூனிட் குறியீட்டின் மூலமும் இயங்குகின்றன. கவனத்திற்கு: ஒரு ஹோஸ்ட் பார்ட்னர் வலைதளம் மூலமோ விளம்பரச் சேவையகத்தின் மூலமோ டைனமிக் முறையில் பயன்படுத்தப்படும் விளம்பர யூனிட் குறியீட்டில் இது சரியாக இயங்காமல் போகக்கூடும்.
- Accelerated Mobile Pages (AMP)
AMP பக்கங்களுக்கு AdSense விளம்பரக் குறியீட்டிலிருந்து வேறுபட்ட விளம்பரக் குறியீடு வேண்டும். கூடுதல் தகவலுக்கு, இங்கே செல்லவும்:
இந்த வழிகாட்டியில் பின்வருவனவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்:
- AdSense குறியீட்டைப் பெறுதலும் நகலெடுத்தலும்
- உங்கள் HTMLலில் AdSense குறியீட்டை எந்த இடத்தில் சேர்க்க வேண்டும்?
- உங்கள் HTMLலில் விளம்பர யூனிட் குறியீட்டை எந்த இடத்தில் சேர்க்க வேண்டும்?
- AdSenseஸுடன் இணைத்து உங்கள் WordPress வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்டுதல்
- விளம்பரக் குறியீட்டைச் செயல்படுத்துவதிலுள்ள பொதுவான சிக்கல்கள்