Analyticsஸில் ஓர் இணையப் பக்கத்திற்கான AdSense அறிக்கையைப் பார்க்க அந்த இணையப் பக்கத்தில் இருக்க வேண்டியவை:
- விளம்பரங்களைக் காட்டப் பயன்படுத்தப்படும் AdSense குறியீடு
- Analytics கண்காணிப்புக் குறியீடு
குறியீட்டுத் துணுக்குகளின் வரிசை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்வரும் வரிசைப்படி உங்கள் இணையப் பக்கத்தின் HTMLலில் துணுக்குகளைச் சேர்க்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
- </head> எனும் முடிவுக் குறிச்சொல்லுக்கு முன்பு Analytics கண்காணிப்புக் குறியீட்டைச் சேர்க்க வேண்டும்
- <body> மற்றும் </body> எனும் குறிச்சொற்களுக்கு இடையே AdSense விளம்பரக் குறியீட்டைச் சேர்க்க வேண்டும்