அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

AdSense கணக்கு வகையைக் கண்டறிதல்

இரண்டு வகையான கணக்குகளை AdSense வழங்குகிறது: பிசினஸ் மற்றும் தனிநபர். பேமெண்ட் சுயவிவரத்தைப் பார்த்து உங்கள் கணக்கின் வகையைக் கண்டறியலாம்.

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பேமெண்ட்டுகள், பேமெண்ட் தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகளை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பேமெண்ட் சுயவிவரம்" பிரிவில் "கணக்கு வகை" என்பதற்குக் கீழே உங்கள் கணக்கு வகையைப் பார்க்கலாம்.

கணக்கு வகையை மாற்றுதல்

உங்கள் AdSense கணக்கை பிசினஸ் கணக்காகவோ தனிநபர் கணக்காகவோ செயல்படுத்திய பிறகு அதன் வகையை மாற்ற முடியாது. உங்களுக்கு வேறு கணக்கு வகை தேவைப்பட்டால் ஏற்கெனவே உள்ள AdSense கணக்கை ரத்துசெய்துவிட்டு நீங்கள் விரும்பும் கணக்கு வகையில் புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

பொதுவான கேள்விகள்

கணக்கு வகை

பிசினஸ் கணக்கிற்கும் தனிநபர் கணக்கிற்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா?
தனிநபர் கணக்கிலும் பிசினஸ் கணக்கிலும் உள்ள சேவைகளிலோ பேமெண்ட் கட்டமைப்பிலோ எந்த வேறுபாடும் கிடையாது. பிசினஸ் கணக்கிற்கான பேமெண்ட்டுகள் நிறுவனத்தின் பெயரிலும் தனிநபர் கணக்கிற்கான பேமெண்ட்டுகள் கணக்குதாரரின் 'பணம் பெறுபவரின்' பெயரிலும் செலுத்தப்படும்.

இருப்பினும் வேறு சில வேறுபாடுகள் உள்ளன:

  • உங்களிடம் பிசினஸ் கணக்கு இருந்தால் பேமெண்ட் சுயவிவரத்தில் வேறு பயனர்களைச் சேர்க்கலாம். தனிநபர் கணக்கை வைத்திருக்கும் வெளியீட்டாளர்கள் தங்களின் பேமெண்ட் சுயவிவரங்களில் சேரும்படியோ அவற்றை நிர்வகிக்கும்படியோ மற்றவர்களை அழைக்க முடியாது.

பேமெண்ட்டுகள் மற்றும் வரி

எனது இன்வாய்ஸ்களை Googleளுக்கு நான் அனுப்ப வேண்டுமா, அதில் வரி அடையாள எண் இருக்க வேண்டுமா?
Googleளுக்கு இன்வாய்ஸ்களை நீங்கள் அனுப்ப வேண்டியதில்லை. இருப்பினும் எங்களுக்கு இன்வாய்ஸ்களை அனுப்புவது உங்கள் நாட்டில் கட்டாயமாக இருந்தால், இங்கே உங்கள் ஒப்பந்த நிறுவனத்தின் விவரங்களைக் கண்டறிந்து தொடர்புடைய நிறுவனத்திடம் வரி விவரங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் இன்வாய்ஸ்களை எங்களுக்கு அனுப்ப வேண்டியிருந்தால் அதில் உங்கள் வரி அடையாள எண்ணைச் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனது வரி விவரங்களை நான் எப்படி மாற்றுவது/புதுப்பிப்பது?
Googleளுக்கு வரி விவரங்களைச் சமர்ப்பிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11592404357052551052
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false