அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பேமெண்ட்டுகள்

அமெரிக்க வரி விவரங்களை Googleளிடம் சமர்ப்பித்தல்

உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, வரி தொடர்பான விவரங்களை உங்களிடமிருந்து Google சேகரிக்க வேண்டியிருக்கும். உங்கள் வரி விவரங்களை Googleளுக்கு வழங்க வேண்டியிருந்தால் உங்கள் AdSense கணக்கு மூலம் அதைச் செய்யலாம். அனைத்து வெளியீட்டாளர்களும் வரி விவரங்களை வழங்க வேண்டியதில்லை.

கவனத்திற்கு: அதே மாதத்தில் பேமெண்ட்டைப் பெறுவதற்கு 20ம் தேதிக்குள் வரி விவரங்களைச் சமர்ப்பித்துவிடவும்.

வரி விவரங்களைச் சமர்ப்பிப்பது எப்படி?

  1. உங்கள் AdSense கணக்கில் உள்நுழையவும்.
  2. பேமெண்ட்டுகள் அதன் பிறகு பேமெண்ட் தகவல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அமைப்புகளை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பேமெண்ட் சுயவிவரம்" என்பதற்குச் சென்று "அமெரிக்க வரி விவரங்கள்" என்பதற்கு அடுத்துள்ள 'திருத்து' திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. வரி விவரங்களை நிர்வகித்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. இந்தப் பக்கத்தில், உங்கள் வரி விவரங்களை வழங்குவதற்கேற்ற படிவத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் வழிகாட்டி இருக்கும்.
    உதவிக்குறிப்பு: வரி விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் பேமெண்ட் சுயவிவரத்திலுள்ள “அமெரிக்க வரி விவரங்கள்” எனும் பிரிவிற்குச் சென்று பாருங்கள். உங்கள் பேமெண்ட்டுகளுக்கு விதிக்கப்படக்கூடும் வரிப் பிடித்த விகிதங்களை அதில் கண்டறியலாம்.

    உங்கள் தனிநபர் அல்லது வணிகம் சார்ந்த விவரங்களில் மாற்றம் ஏற்பட்டால் உங்களால் அவற்றை மாற்றவும் முடியும். உங்கள் முகவரியை மாற்றியிருந்தால் "நிரந்தர வசிப்பிட முகவரி", "அதிகாரப்பூர்வ முகவரி" ஆகிய இரு பிரிவுகளிலும் உங்கள் புதிய நிரந்தர முகவரி ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். இதன் மூலம் ஆண்டிறுதி வரிப் படிவங்கள் (எ.கா. 1099-MISC, 1099-K, 1042-S) சரியான முகவரியில் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், உங்கள் புதிய அதிகாரப்பூர்வ முகவரியுடனான W-9 படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்

கவனத்திற்கு: YouTubeல் வருமானம் ஈட்ட நீங்கள் AdSenseஸைப் பயன்படுத்தினால், உங்கள் அமெரிக்க நிகர வருமானத்திற்கான அமெரிக்க வரித் தேவைகளைப் புரிந்துகொள்ள YouTube வருமானத்திற்கான அமெரிக்க வரித் தேவைகள் எனும் பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் பெயரை மாற்றுதல்

பேமெண்ட் சுயவிவரத்தில் உள்ள உங்கள் பெயர் வரிப் படிவங்களுடன் இணைக்கப்படவில்லை. உங்கள் பெயரில் மாற்றமிருந்தால் பேமெண்ட்டுகளுக்கான சுயவிவரத் தகவல்களோடு வரி விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும்.

பேமெண்ட்டுக்கான கால அளவு

வரி விவரங்கள் வழங்கப்படாத காரணத்திற்காக உங்கள் பேமெண்ட்டுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்து 20ம் தேதிக்குப் பிறகு வரி விவரங்களை வழங்கியிருந்தால், அந்த மாதத்திற்கான பேமெண்ட் சுழற்சியில் உங்களுக்குப் பேமெண்ட் கிடைக்காது. 20ம் தேதிக்குப் பிறகு வரி விவரங்களை வழங்கினால் உங்கள் வருமானம் அடுத்த மாதத்திற்கு மாற்றப்பட்டு, அடுத்த பேமெண்ட் சுழற்சியின்போது உங்களுக்குப் பேமெண்ட் வழங்கப்படும்.

எங்கள் பேமெண்ட் கால அளவில் உள்ளவாறு மாதாந்திரப் பேமெண்ட்டுகள் அந்த மாதத்தின் 21ம் தேதிக்கும் 26ம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் வழங்கப்படுகின்றன. இதற்கு உங்கள் வருமானம் பேமெண்ட் வரம்பை எட்டியிருப்பதோடு அந்த மாதத்தின் 20ம் தேதிக்குள் எல்லா நிறுத்திவைப்புகளும் அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

உதவிக்குறிப்பு: அனைத்து வெளியீட்டாளர்களும் தங்கள் வரி விவரங்கள் சரியாக இருப்பதை அடிக்கடி சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். வெளியீட்டாளரின் வரி விவரங்களை உறுதிப்படுத்துவதோ மாற்றுவதோ Googleளின் பொறுப்பாகாது. அமெரிக்காவின் வரித் தேவைகள் பற்றிய குறிப்பிட்ட தகவல்களைப் பெற IRS இணையதளத்தைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13043587132540034439
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false