அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

வலைதள அணுகல்

AdSense crawler சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் வலைதளம் முழுமையாகக் கிரால் செய்யக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வது உங்கள் உள்ளடக்கத்தில் இருந்து அதிக வருவாயைப் பெறுவதற்கு உதவும். AdSense விளம்பரக் கிராலரால் உங்கள் உள்ளடக்கத்தை அணுக முடியவில்லை எனில் அந்தச் சிக்கலைச் சரிசெய்ய பின்வரும் கிராலர் தொடர்பான சிக்கல்களின் பட்டியலைப் பார்க்கவும்.

இவற்றைப் பார்வையிடுங்கள்: அணுகல் தொடர்பான சிக்கல்கள் | வலைதளச் சிக்கல்கள் | ஹோஸ்டிங் தொடர்பான சிக்கல்கள்

அணுகல் சிக்கல்கள் ஐகான். அணுகல் தொடர்பான சிக்கல்கள்

சாத்தியமுள்ள காரணம்do this சரிபார்க்க வேண்டியவைdo this எப்படிச் சரிசெய்வது?
உங்கள் வலைதளம் உள்நுழைவிற்குப் பின்னால் உள்ளது.

உள்நுழைவு தேவைப்படும் பக்கத்திற்கு விளம்பர crawler திசைதிருப்பப்படும் சாத்தியம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் உள்ளடக்கத்தை அதனால் கிரால் செய்ய முடியாது.

உங்கள் உள்ளடக்கத்தை அணுக பயனர்களுக்கு உள்நுழைவு விவரங்கள் அவசியமா? உள்நுழைவு தேவைப்படும் பக்கங்களில் விளம்பரங்களைக் காட்ட crawler உள்நுழைவை அமைக்கவும்.
கட்டுப்படுத்தப்பட்ட நெட்வொர்க்கிலோ IP வரம்பிலோ உள்ளடக்கம் உள்ளது. உள்ளடக்கத்தை அணுக இருப்பிடம் சார்ந்த கட்டுப்பாடுகளையோ IP வரம்புகளையோ அமைத்துள்ளீர்களா? இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கவோ உங்கள் உள்ளடக்கத்தைப் பொதுவில் அணுகக்கூடிய வகையில் அமைக்கவோ முயலுங்கள். இதன் மூலம் விளம்பரக் கிராலரால் உங்கள் URLகளைக் கிரால் செய்ய முடியும்.
உங்கள் robots.txt கோப்பில் விளம்பர crawlerரைத் தடுத்துள்ளீர்கள். robots.txt கோப்பில் விளம்பர crawler முடக்கப்பட்டுள்ளதா? robots.txt கோப்பில் விளம்பர crawlerருக்கு அணுகலைக் கொடுங்கள்.

வலைதள சிக்கல்கள்

சாத்தியமுள்ள காரணம்do this சரிபார்க்க வேண்டியவைdo this எப்படிச் சரிசெய்வது?

உங்கள் வலைதளத்தைக் கண்டறிய முடியவில்லை.

Googleளுக்கு அனுப்பப்படும் URL வலைதளத்தில் இல்லாத (அல்லது இனிமேல் இருக்காது என்பது போன்ற) ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டினாலோ 404 (காணப்படவில்லை) பிழையைக் காட்டினாலோ விளம்பர crawler உங்கள் உள்ளடக்கத்தைக் கிரால் செய்யாது.

உங்கள் வலைதளம் இயக்கத்தில் உள்ளதா? பயனர்கள் உங்கள் வலைதளத்தை இணையத்தில் அணுக முடிகிறதா? வலைதளம் வெளியிடப்பட்டு இணையத்தில் இயங்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.

வலைதளம் புதிதாக வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

புதிய பக்கத்தை வெளியிடும்போது உங்கள் உள்ளடக்கத்தைக் கிரால் செய்வதற்கான வாய்ப்பு Googleளின் crawlerகளுக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே விளம்பரக் கோரிக்கைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதிகப்படியான புதிய உள்ளடக்கங்களை இடுகையிடும் வலைதளங்களில் பயனர் உருவாக்கிய உள்ளடக்கம், செய்திக் கட்டுரைகள், பெரிய தயாரிப்புகளுக்கான இருப்புகள் அல்லது வானிலை அறிக்கைகளை வெளியிடும் வலைதளங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

சமீபத்தில் புதிய உள்ளடக்கத்தை வெளியிட்டீர்களா?

புதிய உள்ளடக்கத்தைக் கிரால் செய்ய விளம்பரக் கிராலருக்குக் கூடுதல் நேரம் வழங்கவும்.

வழக்கமாகப் புதிய URLலில் விளம்பரக் கோரிக்கை அனுப்பப்பட்ட பிறகு உள்ளடக்கம் சில நிமிடங்களுக்குள் கிரால் செய்யப்படும். எனினும், இந்த ஆரம்ப நிமிடங்களில் உள்ளடக்கம் இன்னும் கிரால் செய்யப்பட்டிருக்காது என்பதால் உங்களுக்கு வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைந்துபோகக்கூடும்.

உங்கள் வலைதளம் பல்வேறு திசைதிருப்புதல்களைப் பயன்படுத்துகிறது.

வலைதளம் திசைதிருப்புதல்களைப் பயன்படுத்தினால் அவற்றைப் பின்பற்றிச் செயல்படுவதில் விளம்பரக் கிராலருக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். உதாரணமாக வலைதளம் பல்வேறு திசைதிருப்புதல்களைப் பயன்படுத்தினாலோ இடைநிலைத் திசைதிருப்புதல்கள் தோல்வியடைந்தாலோ திசைதிருப்பப்படும்போது குக்கீகள் போன்ற முக்கியமான அளவுருக்கள் குறைந்துவிட்டாலோ உள்ளடக்கம் கிரால் செய்யப்படுவதற்கான வேகம் குறைந்துவிடும்.

உங்கள் வலைதளம் அதிகப்படியான திசைதிருப்புதல்களைப் பயன்படுத்துகிறதா? விளம்பரங்களைக் காட்டும் பக்கங்களில் திசைதிருப்புதல்களை அமைத்துள்ளீர்களா?

விளம்பரக் குறியீட்டுடன் இருக்கும் பக்கங்களில் திசைதிருப்புதல்களைக் குறைவாகப் பயன்படுத்த முயலுங்கள். உங்களின் திசைதிருப்புதல்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

பிரத்தியேகப்படுத்தப்பட்ட பக்க URLகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

சில வலைதளங்களின் URLகள் கூடுதல் அளவுருக்களைக் கொண்டிருக்கக்கூடும். அவை உள்நுழைந்துள்ள பயனரைக் குறிப்பதாகவோ (எ.கா. ஓர் அமர்வு ஐடி) பயனரின் ஒவ்வொரு வருகைக்குமான தனித்துவமான பிற விவரங்களாகவோ இருக்கலாம். இவ்வாறு நிகழும்போது அதே உள்ளடக்கமாக இருந்தாலும் விளம்பர crawler அந்த URLலைப் புதிய பக்கமாக எடுத்துக்கொள்ளக்கூடும். இதனால் பக்கத்தின் முதலாவது விளம்பரக் கோரிக்கைக்கும் பக்கம் கிரால் செய்யப்படுவதற்கும் இடையே சில நிமிட கால தாமதமும், உங்கள் சேவையகங்களில் crawlerரின் சுமை அதிகரிப்பதும் நிகழலாம்.

உங்கள் வலைதளம் கூடுதல் அளவுருக்களைக் கொண்ட URLகளையோ மாறும் விதத்தில் உருவாக்கப்பட்ட URL தடங்களையோ பயன்படுத்துகிறதா? பொதுவாக ஒரு பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கம் மாறாது எனில் அந்த URLலில் இருந்து அளவுருக்களை அகற்றிவிட்டு அவை தொடர்பான தகவல்கள் வேறு வழியில் தொடருமாறு செய்யுங்கள். வலைதளம் எளிமையான URL கட்டமைப்பைக் கொண்டிருப்பது அதை மிக எளிதாகக் கிரால் செய்ய உதவும்.

நீங்கள் POST தரவைப் பயன்படுத்துகிறீர்கள்.

URLகளோடு POST தரவையும் சேர்த்து வலைதளம் அனுப்பினால் (உதாரணமாக, POST கோரிக்கை வழியாகப் படிவத் தரவை அனுப்புதல்) உங்கள் தளம் POST தரவுடன் சேர்ந்து வராத கோரிக்கைகளை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பு: விளம்பரக் கிராலர் எந்த POST தரவையும் வழங்காது என்பதால் இந்த வகையான அமைவு கிராலர் உங்கள் பக்கத்தை அணுகுவதைத் தடுக்கலாம்.
உங்கள் வலைதளம் URLகளுடன் POST தரவையும் சேர்த்து அனுப்புகிறதா? ஒரு படிவத்தில் பயனர் டைப் செய்யும் தரவால் உங்கள் பக்கத்தின் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டால் GET கோரிக்கையைப் பயன்படுத்த முயலுங்கள்.

ஹோஸ்டிங் தொடர்பான சிக்கல்கள்

சாத்தியமுள்ள காரணம்do this சரிபார்க்க வேண்டியவைdo this எப்படிச் சரிசெய்வது?

உங்கள் வலைதளத்தின் பெயர் சேவையகத்தில் சிக்கல் உள்ளது.

உங்கள் பெயர் சேவையகம் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? கோரிக்கைகள் எங்கிருந்து வரலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா? உங்கள் டொமைனுக்கோ துணை டொமைனுக்கோ உரிய பெயர் சேவையகம் விளம்பரக் கிராலரை உள்ளடக்கத்திற்கு முறையாக வழிநடத்துவதை உறுதிசெய்யவும்.

உங்கள் வலைதளத்தின் சேவையகத்தில் சிக்கல் உள்ளது.

சில நேரங்களில் வலைதள உள்ளடக்கத்தை விளம்பர crawler அணுக முயலும்போது வலைதளத்தின் சேவையகத்தால் உடனடியாக பதிலளிக்க முடிவதில்லை. சேவையகம் இயங்காமல் போவதாலோ மெதுவாக இயங்குவதாலோ அதிகப்படியான கோரிக்கைகளால் அதன் சுமை அதிகரிப்பதாலோ இது நிகழலாம்.

உங்கள் வலைதளத்தின் சேவையகம் இயக்கத்தில் உள்ளதா? வலைதளம் நம்பகமான சேவையகத்திலோ நம்பகமான சேவை வழங்குநராலோ ஹோஸ்ட் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10357970174598468886
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false