அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பதிவுசெய்யும் முன்பாகச் செய்ய வேண்டியவை

வலைதளப் பக்கங்கள் AdSenseஸுக்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்தல்

AdSenseஸில் உங்கள் வலைதளத்தைச் சேர்க்க, அதில் பார்வையாளர்களுக்குப் பொருத்தமான, சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கக்கூடிய தனித்துவமான உள்ளடக்கம் இருக்க வேண்டும்.

AdSenseஸுக்குப் பதிவு செய்யும் முன்பு உங்கள் பக்கங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, அவற்றை மதிப்பாய்வு செய்யும்படி பரிந்துரைக்கிறோம்:

கூடுதல் தகவல்களுக்கு AdSenseஸின் வலைதள ஒப்புதல் குறித்த வீடியோ தொடரைப் பார்க்கவும்.

உங்கள் பக்கங்களின் சிறப்பம்சம் என்ன?

ஏற்கெனவே ஏராளமான வலைதளங்கள் உள்ளன என்பதால் தனித்துவமான, அசலான, பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்குவதும், அவற்றில் பயனர்கள் அதிக ஈடுபாடு காட்டுமாறு செய்வதும், அவற்றை அதிகம் படிக்குமாறு அவர்களை ஊக்குவிப்பதும் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.

  • உங்கள் பக்கங்களில் உள்ளவற்றை (வார்த்தைகள், படங்கள் போன்றவை) எப்படி ஒழுங்கமைக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தளவமைப்பு வரவேற்கக்கூடியதாகவும் பார்வையாளர்கள் தேடுவதை எளிதாகக் கண்டறிய உதவக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யுங்கள். உதவிக் குறிப்புகளுக்கு AdSense வலைப்பதிவில் உள்ள இந்த இடுகையைப் பார்க்கவும்: உங்கள் இணையதளத்தின் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான மூன்று படிகள்.
  • பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுவதற்கான பிரிவை வழங்கவும். வலைதளத்தைப் பயன்படுத்தும், அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும் பயனர்களின் கருத்துகள் உங்கள் வலைதளத்தை மேலும் மேம்படுத்த உதவும்.
கவனத்திற்கு: AdSense திட்டக் கொள்கைகளுடன் கருத்துப் பிரிவு இணங்குவதையும் அதில் தகாத உள்ளடக்கம் எதுவும் இல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த அதை நீங்கள் தணிக்கை செய்ய வேண்டும். பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் குறித்தும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் மேலும் அறிக.

உங்கள் பக்கங்களின் வழிசெலுத்தலுக்கான வடிவமைப்பு தெளிவாகவும் பயன்படுத்த எளிதாகவும் உள்ளதா?

வழிசெலுத்தல் பட்டி (அல்லது மெனு பட்டி) எளிதாக அணுகக்கூடியதாகவும் சுலபமாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தால் அது நல்ல பயனர் அனுபவத்தை வழங்கும். வழிசெலுத்தல் பட்டியை உருவாக்கும்போது இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • சீரமைப்பு - பக்கங்களில் உள்ள அனைத்தும் சரியான முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனவா?
  • எளிதில் வாசிக்கும் தன்மை - வார்த்தைகள் படிப்பதற்கு எளிதாக உள்ளனவா?
  • செயல்பாடு - கீழ்தோன்றும் பட்டிகள் சரியாக வேலை செய்கின்றனவா?

உதாரணங்கள்:

உங்கள் வலைதளத்தைப் பொறுத்து, வழிசெலுத்தல் பட்டி பின்வரும் ஏதேனும் ஒன்றைப்போல் காட்டப்படும்:

வலைதள வழிசெலுத்தலுக்கான உதாரணம்

உங்கள் வலைதளத்தைப் பயனர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் வழிசெலுத்தல் பட்டி இருக்க வேண்டும். 

எங்களின் பயனர் அனுபவ வழிகாட்டுதல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, வலைதளத்தைத் தெளிவாகக் கட்டமைப்பதற்கான பயனர் வழிகாட்டியைப் பாருங்கள்.

பக்கங்களின் உள்ளடக்கம் தனித்துவமானதாகவும் ஆர்வமூட்டக்கூடியதாகவும் உள்ளதா?

மதிப்புமிக்க, அசல் உள்ளடக்கத்தை வழங்குவது உங்கள் வலைதளத்திற்கு நம்பகமான, தொடர்ந்து வரக்கூடிய பல பயனர்களை உருவாக்கும். உள்ளடக்கத்தைப் பயனர்கள் விரும்பும்போது அது குறித்து மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்கிறார்கள், இது உங்கள் வலைதளத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

உதவிக்குறிப்புகளுக்கும் ஆலோசனைகளுக்கும் AdSense வலைப்பதிவில் உள்ள இந்த இடுகையைப் பார்க்கவும்: சிறந்த இணையதள உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான மூன்று படிகள்.

வேறு வலைதளங்களில் உள்ள கட்டுரைகள், உட்பொதிக்கப்பட்ட வீடியோக்கள் போன்ற வெளிப்புற ஆதாரங்களை உபயோகிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்குச் சொந்தமான அசல் உள்ளடக்கத்தை வலைதளத்தில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அது நிபுணத்துவக் கல்வியாகவோ, மேம்படுத்தலுக்கான ஆலோசனைகளாகவோ, மதிப்புரைகளாகவோ, உங்களின் தனிப்பட்ட எண்ணங்களாகவோ இருக்கலாம்.

Google வெளியீட்டாளர் கொள்கைகளில் குறிப்பிட்டுள்ளபடி, நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கத்தையோ பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தையோ கொண்டுள்ள வலைதளங்களில் Google விளம்பரங்களைக் காட்ட இயலாது. அவ்வாறான உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது கொள்கை மீறலாகும், இதனால் வலைதளத்தில் விளம்பரங்கள் காட்டப்படுவது முடக்கப்படலாம் அல்லது உங்கள் கணக்கு மூடப்படலாம்.

உங்கள் வலைதளத்திற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள, Google Web Searchக்கான ஸ்பேம் கொள்கைகளைப் பாருங்கள்.

AdSenseஸைப் பயன்படுத்தத் தயாரா?

இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் AdSenseஸுக்குப் பதிவுசெய்யலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
519884114102471130
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false