அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பிராண்டு பாதுகாப்பு

உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களை அனுமதிப்பதற்கும் தடுப்பதற்குமான AdSense வழிகாட்டி

உங்கள் வலைதளத்தில் சிறந்த விளம்பரங்கள் காட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் #blockingcontrols 

உங்கள் வலைதளத்தில் காட்டப்படும் விளம்பரங்களைத் தீர்மானிக்கும் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்க, விளம்பரங்களை மதிப்பாய்வு செய்யவும் தடுக்கவும் பல்வேறு விருப்பங்களை AdSense வழங்குகிறது.

உங்கள் வலைதளத்தில் சில விளம்பரங்களை நீங்கள் காட்ட விரும்பாமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உள்ளடக்கம், பிஸினஸ் போன்றவை சார்ந்த காரணங்கள் இருக்கலாம் அல்லது அடிப்படையில் நீங்கள் சில கோட்பாடுகளைக் கொண்டிருக்கலாம். உங்களிடம் சைவ உணவுக்கான வலைப்பதிவு உள்ளது என வைத்துக்கொள்வோம். அதில் இறைச்சி உணவுக்கான விளம்பரத்தை நீங்கள் காட்ட விரும்பாமல் இருக்கலாம். ஒரு விளம்பரம் Google கொள்கைகளை மீறுவதை அறிந்து, அதை இனி காட்ட வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்களின் குறிப்பிட்ட தேவைக்கேற்ற சரியான தடுப்புக் கட்டுப்பாட்டைத் தேர்வுசெய்ய இந்தக் கட்டுரை உதவும்.

வெளியீட்டாளர்களுக்கான தடைசெய்யும் வசதிகள்

கவனத்திற்கு: விளம்பரத் தடுப்பைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். அனைத்து விளம்பரங்களையும் காட்சிப்படுத்துவதனால் விளம்பர ஏலத்தில் சவாலான சூழல் உண்டாகும். ஓர் இம்ப்ரெஷனைப் பெறுவதற்காக சாத்தியமுள்ள, அதிக அளவிலான விளம்பரங்களுக்கு இடையில் ஏற்படும் போட்டியே இதற்குக் காரணம்.

சரியான தடுக்கும் கட்டுப்பாட்டைத் தேர்வுசெய்தல்

விளம்பரங்களைத் தடுப்பது உங்கள் வருவாயைக் குறைத்துவிடலாம், எனவே சரியான தடுப்புக் கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் விளம்பரத் தடுப்புத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய கட்டுப்பாட்டைத் தேர்வுசெய்ய கீழேயுள்ள பட்டியலைப் பயன்படுத்தவும். முதலில் மிகக் குறைவான விளம்பரங்களைத் தடுக்கும் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

தனிப்பட்ட விளம்பரங்களைத் தடுத்தல்

உங்கள் பக்கங்களில் காட்டப்படும் தனிப்பட்ட விளம்பரங்களை மதிப்பாய்வு செய்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க விளம்பர மதிப்பாய்வு மையம் உதவுகிறது. விளம்பர மதிப்பாய்வு மையம் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

மோசமான விளம்பரம் குறித்து Googleளுக்குப் புகாரளித்தல்

எங்கள் கொள்கைகளை மீறும் விளம்பரத்தைக் கண்டறிந்தால் இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

குறிப்பிட்ட விளம்பரதாரரிடம் இருந்து வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுத்தல்

குறிப்பிட்ட விளம்பரதாரரிடம் இருந்து வரும் விளம்பரங்களை நீங்கள் தடுக்கலாம்.

உதாரணம்
நீங்கள் WidgetUniverse.com என்ற வலைதளத்தையும், உங்களின் அதிதீவிரப் போட்டியாளர் WidgetGalaxy.com என்ற வலைதளத்தையும் இயக்குவதாக வைத்துக்கொள்வோம். உங்களுடைய பக்கத்தின் உள்ளடக்கம் விட்ஜெட்கள் பற்றியது என்பதால் உங்கள் வலைதளத்திற்கு WidgetGalaxy விளம்பரங்கள் தானாகவே பொருந்திவிடும். உங்கள் போட்டியாளரின் விளம்பரங்களைக் காட்டுவதைத் தவிர்க்க, தடுக்கப்பட்ட விளம்பரதாரர் URLகள் பட்டியலில் WidgetGalaxy.comமைச் சேர்த்து, அவர்களின் விளம்பரம் மீண்டும் காட்டப்படுவதைத் தவிர்க்க முடியும்.

விளம்பரதாரர் URLகளைத் தடுப்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உணர்வுப்பூர்வத் தலைப்புடன் தொடர்புடைய விளம்பரங்களைத் தடுத்தல்

மதம், அரசியல், பாலியல், பாலுணர்வைக் குறிப்பவை உட்பட உணர்வுப்பூர்வத் தலைப்புகள் தொடர்பான வகைகளில் இருந்து விளம்பரங்களைத் தடுக்கலாம். வலைதளத்தின் மொழிக்கேற்ப அல்லாமல் குறிப்பிட்ட மொழிகளில் உள்ள விளம்பரங்களுக்கு மட்டுமே உணர்வுப்பூர்வ வகைத் தடுப்பு கிடைக்கிறது.

பொது வகை விளம்பரங்களின் குழுவைத் தடுத்தல்

ஆடைகள், இணையம், ரியல் எஸ்டேட், வாகனங்கள் போன்ற பொது வகை விளம்பரங்களைத் தடுக்கலாம். தளத்தின் மொழி எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட மொழிகளில் உள்ள விளம்பரங்களுக்கு மட்டுமே பொது வகைத் தடுப்பு கிடைக்கிறது.

மூன்றாம் தரப்பு விளம்பர நெட்வொர்க்கில் இருந்து வரும் விளம்பரங்களைத் தடுத்தல்

சான்றளித்த Google விளம்பர நெட்வொர்க்குகளில் இருந்து உங்கள் பக்கங்களில் விளம்பரங்கள் இயல்பாகவே தோன்றும். குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு விளம்பர நெட்வொர்க்குகளையோ அனைத்து வருங்கால விளம்பர நெட்வொர்க்குகளையோ அனுமதிக்கவும் தடுக்கவும் முடியும். விளம்பர நெட்வொர்க்குகளை அனுமதித்தல் & தடுத்தல் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பிட்ட வகை விளம்பர வடிவங்களையோ செயல்பாடுகளையோ தடுத்தல்

பயனர் சார்ந்த விளம்பரங்களைத் தடுப்பது அல்லது உங்கள் கணக்கில் கூடுதல் விளம்பரத் தொழில்நுட்ப விற்பனையாளர்களை அனுமதிப்பது போன்ற குறிப்பிட்ட விளம்பர வடிவத்தையும் ஏல நடவடிக்கைகளையும் AdSenseஸில் தடுக்கலாம். விளம்பரச் சேவை தொடர்பான அமைப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்களின் அனைத்து வலைதளங்களிலும் தடுப்புக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தும் விதத்தைத் தேர்வுசெய்தல்

உங்களிடம் பல வலைதளங்கள் இருந்தால் அவை அனைத்திலுமே தடுப்புக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யலாம். எனினும் உங்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் கிடைக்கும் பொருட்டு, அந்தந்த வலைதளத்தின் அடிப்படையில் சில தடுப்புக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம். இது வலைதள அளவிலான தடுப்பு என்று அழைக்கப்படுகிறது.

வலைதள அளவிலான தடுப்பானது குறைவான விளம்பர இம்ப்ரெஷன்களைத் தடுக்க உங்களுக்கு உதவக்கூடும். ஏனெனில் நீங்கள் நிர்வகிக்கும் ஒவ்வொரு வலைதளத்திற்கும் வெவ்வேறு தடுப்பு முறையைத் தேர்வுசெய்ய இது அனுமதிக்கிறது. குறிப்பாக விளம்பரதாரர் URL, பொது வகை, உணர்வுப்பூர்வ வகை ஆகியவற்றுக்கான தடுப்பு விருப்பங்களை உங்களது ஒவ்வொரு வலைதளத்திற்கும் நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.

உதாரணம்

நீங்கள் இயக்கிவரும் குழந்தைகளுக்கான வலைதளத்தில் குறிப்பிட்ட வகையான விளம்பரங்கள் காட்டப்படுவதை நீங்கள் தடுக்க விரும்பலாம். ஆனால் உங்களிடம் உள்ள விளையாட்டு தொடர்பான மற்றொரு வலைதளத்தில் அதே விளம்பரங்களை நீங்கள் அனுமதிக்கலாம்.

வலைதள அளவிலான விளம்பரத் தடுப்பு குறித்த முக்கிய விஷயங்கள்:

  • உள்ளடக்கத்திற்கான AdSense விளம்பரங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
  • விளம்பரதாரர் URLகள், பொது வகைகள், உணர்வுப்பூர்வ வகைகள் ஆகியவற்றை வலைதள வாரியாக மட்டுமே இது தடுக்கும்.
  • ஒரு நேரத்தில் ஒரு வலைதளத்தில் தடுத்தல் என்ற அடிப்படையில் செய்யப்படும் வலைதள அளவிலான தடுப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பல வலைதளங்களைக் கொண்ட குழுவில் இதன் மூலம் விளம்பரங்களைத் தடுக்க முடியாது.

உங்கள் வலைதளத்தில் வலைதள அளவிலான தடுப்பை மேற்கொள்ள, வலைதள நிர்வாகம் அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8118025244806843890
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false