அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

விளக்கப்படங்களில் தரவைக் காட்சிப்படுத்துதல்

விளக்கப்படங்கள் உங்கள் தரவின் வரைபட மாதிரிக்காட்சிகளை வழங்குகின்றன. காலப்போக்கில் உங்கள் அளவீடுகளில் நிகழ்ந்த மாற்றங்களைக் காட்சிப்படுத்த விளக்கப்படங்களைப் பயன்படுத்தலாம்.

விளக்கப்பட வகைகள்

ஒவ்வொரு விளக்கப்படமும் ஒவ்வொரு விதத்தில் தரவைக் கையாளுகின்றன. உங்கள் அறிக்கையிலிருந்து என்ன அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் விளக்கப்பட வகையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு விளக்கப்பட வகையையும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டுதல்கள் இங்கே:

விளக்கப்பட வகை நீங்கள் இவற்றைச் செய்வதற்குச் சிறப்பாகப் பயன்படும்...
காலப்பதிவு நேரத்தை ஒப்பிடும் (தேதிகள்). இரண்டு வெவ்வேறு தேதி வரம்புகள் வரை தேர்ந்தெடுத்து, ஒற்றை அளவீட்டில் (எ.கா. மதிப்பிடப்பட்ட நிகர வருமானம்) ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையோ ஒற்றைத் தேதி வரம்பைத் தேர்ந்தெடுத்து, பல அளவீடுகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையோ காலப்பதிவில் பார்க்கலாம்.
பார் விளக்கப்படம் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளின் செயல்திறனை ஒப்பிடும். பார் விளக்கப்படம் ஒரு வகையின் செயல்திறனை மற்றொன்றுடன் ஒப்பிட்டுக் காட்டும்.
பை சார்ட் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளைச் சதவீதங்களின் வடிவத்தில் ஒப்பிடும். ஒவ்வொரு பகுதியும் எத்தனை சதவீதத்தைக் கொண்டிருக்கிறது என்பதைப் பை சார்ட் காட்டும்.

விளக்கப்படத்தின் வகைகளுக்கிடையே மாறுதல்

நீங்கள் ஒரு அறிக்கையை உருவாக்கும்போது உங்கள் தரவிற்கான இயல்புநிலை விளக்கப்படத்தைத் தானாகவே காண்பிப்போம். சில நேரங்களில் நீங்கள் பகுப்பாய்வு செய்யும் தகவல்களின் வகைக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு விளக்கப்பட வகைகள் இருக்கும்.

  • வேறு விளக்கப்பட வகைக்கு மாற, விளக்கப்பட விருப்பங்கள் Chart options என்பதைக் கிளிக் செய்து புதிய விளக்கப்பட வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

விளக்கப்படத்தில் உள்ள தரவை மாற்றுதல்

அளவீடுகள்

அறிக்கையில் உள்ள விளக்கப்படத்தில் காட்டப்படும் அளவீடுகளை நீங்கள் மாற்றலாம்.

  • அளவீடு ஒன்றைக் காட்சிப்படுத்த, விளக்கப்படப் பகுதிக்கு மேலே உள்ள அளவீட்டின் பெயரைக் கிளிக் செய்யவும். அந்த அளவீட்டைக் காட்சிபடுத்துவதை நிறுத்த, அளவீட்டின் பெயரை மீண்டும் கிளிக் செய்யவும்.

ஒரு விளக்கப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அளவீடுகளைக் காட்சிப்படுத்தினால், ஒவ்வொரு அளவீடும் வெவ்வேறு வண்ணத்தில் காட்டப்படும்.

கவனத்திற்கு: இரண்டு அளவீடுகளுக்கு மேல் காட்சிப்படுத்தினால், விளக்கப்படம் செங்குத்தான வடிவில் இருக்காது. எனினும் தரவுப் புள்ளிகளுக்கு மேலே கர்சரைக் கொண்டு சென்று தேர்ந்தெடுத்த அளவீடுகளின் மதிப்புகளைப் பார்க்கலாம்.

Google AdSenseஸில் பக்கப்பார்வைகளையும் மதிப்பிடப்பட்ட நிகர வருமானத்தையும் காட்டும் விளக்கப்படத் தரவுக்கான உதாரணம்.

தரவுத் தொடர்

டேபிளில் உள்ள ஒவ்வொரு வரிசைத் தரவிலும் ஒரு கட்டுப்பாடு இருக்கும். இதைப் பயன்படுத்தி விளக்கப்படத்தில் அந்தத் தரவுத் தொடரைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். விளக்கப்படத்தில் காட்டப்பட வேண்டிய தரவுத் தொடர்களை விரைவாக மாற்ற இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் உள்ளடக்கம் மிகவும் பிரபலமாக உள்ள 3 நாடுகள் தொடர்பான தரவை மட்டும் நீங்கள் பார்க்க விரும்பினால் நாடுகளின் அறிக்கையை உருவாக்கிய பிறகு டேபிளிலுள்ள முதல் 3 நாடுகளுக்கு அடுத்துள்ள நிலைமாற்றிகளைக் கிளிக் செய்யவும்.

  • தரவுத் தொடர் ஒன்றைச் சேர்க்க, அதன் வரிசைக்கு அடுத்துள்ள கண் ஐகானை கிளிக் செய்யவும். அந்தத் தரவுத் தொடரை அகற்ற, கண் ஐகானை மீண்டும் கிளிக் செய்யவும்.
கவனத்திற்கு: தேதி போன்ற சில பிரிவுகளுக்குக் கண் ஐகான் காட்டப்படாது.
AdSenseஸில் உள்ள தரவுத் தொடர் அட்டவணைக்கான உதாரணம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7917425486990143689
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false