அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

தேதிகளுக்கிடையே மாறுதல் & தேதி வரம்புகளை ஒப்பிடுதல்

தரவு இருக்கும் பட்சத்தில் எந்தத் தேதி வரம்பிற்கான அறிக்கையையும் உங்களால் உருவாக்க முடியும். நீங்கள் முன்னமைவுத் தேதி வரம்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பிரத்தியேகமான தேதி வரம்பைத் தேர்வுசெய்யலாம், விருப்பத்தேர்வாக அந்தத் தேதி வரம்பை மற்றொன்றுடன் ஒப்பிடலாம்.

தேதி வரம்பு மற்றும் ஒப்பீட்டிற்கான உதாரணம்.

முன்னமைவுத் தேதி வரம்பைத் தேர்ந்தெடுத்தல்

முன்னமைவுத் தேதி வரம்பைப் பயன்படுத்த, உங்கள் அறிக்கையின் மேற்பகுதி அல்லது கேலெண்டரிலிருந்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  • இன்று: தற்போதைய கேலெண்டரில் நீங்கள் தேர்ந்தெடுத்த நேரம் வரையிலான தரவு
  • நேற்று: முந்தைய கேலெண்டர் தேதிக்கான தரவு.
  • கடந்த 7 நாட்கள்: கடந்த 7 நாட்களுக்கான தரவு.
  • கடந்த 30 நாட்கள்: கடந்த 30 நாட்களுக்கான தரவு.
  • இந்த மாதம்: தற்போதைய கேலெண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் வரையிலான தரவு.
  • கடந்த மாதம்: கடந்த கேலெண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரையிலான தரவு.
  • கடந்த 3 ஆண்டுகள்: கடந்த 3 ஆண்டுகளுக்கான தரவு.
கவனத்திற்கு: கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளான அறிக்கைத் தரவை மட்டுமே பெற முடியும், YouTube அல்லது AdMob தொடர்பான தரவு இதில் சேராது.

பிரத்தியேகத் தேதி வரம்பைத் தேர்வுசெய்தல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது கேலெண்டர் காட்டப்படுவதற்கு, பிரத்தியேகம் கீழ்நோக்கிய அம்புக்குறி  என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் விரும்பும் தேதிகளைக் கேலெண்டரில் தேர்வுசெய்யவும்:
    • பக்கத்தில் உள்ள முன்னமைவுத் தேதி வரம்பு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தேதிகளை ஹைலைட் செய்ய, தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளை இழுக்கவும்.
    • தேதிப் புலங்களில் தொடக்க மற்றும் முடிவுத் தேதிகளை உள்ளிடவும்.
  3. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இரண்டு தேதி வரம்புகளை ஒப்பிடுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, நீங்கள் ஒப்பிட விரும்பும் கால அளவைக் கேலெண்டரில் தேர்ந்தெடுக்கவும். முன்னமைக்கப்பட்ட அல்லது பிரத்தியேகத் தேதி வரம்பாக இது இருக்கலாம்.
  2. + ஒப்பீட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் ஒப்பீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • கடந்த காலம்
    • கடந்த ஆண்டு
    • பிரத்தியேகம்
  4. "பிரத்தியேகம்" எனும் விருப்பத்தைத் தேர்வுசெய்தால் உங்களுக்கு விருப்பமான தொடக்க மற்றும் முடிவுத் தேதியை உள்ளிடவும். அதன் பிறகு பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

    நீங்கள் பயன்படுத்தும் விளக்கப்பட வகையைப் பொறுத்து, ஒப்பீட்டுத் தேதி வரம்பிற்கான தரவு கோடிட்ட வரியிலோ மெல்லிய ஷேடிலோ காட்டப்படும்.

கவனத்திற்கு: சில விளக்கப்பட வகைகள் தேதி ஒப்பீட்டை ஆதரிக்காது. தேதி வரம்புகளை ஒப்பிடும்போது கோட்டு விளக்கப்படத்தைப் பயன்படுத்துவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரே நேர வரம்பிலான தேதிகளை மட்டுமே நீங்கள் ஒப்பிட முடியும். உதாரணமாக, ஒரு மாதத்தை இன்னொரு மாதத்துடனும் ஓர் ஆண்டை இன்னொரு ஆண்டுடனும் மட்டுமே ஒப்பிட முடியும்.

ஒப்பீட்டை அகற்றுதல்

  1. உங்கள் அறிக்கையைப் பார்க்கும்போது, நீங்கள் நீக்க விரும்பும் ஒப்பீட்டின் கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி  கிளிக் செய்யவும்.
  2. ஒப்பீட்டை அகற்றுஎன்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10203107797099512554
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false